விஜயநகர பிரதிநிதியின் தலையைக் கொய்த பல்லவ அரசி

மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ந்த பின் தமிழகத்தில் விஜய நகர
பேரரசின் ஆட்சி உருவானது. விஜய நகர பேரரசின் ஆட்சியில் தமிழ் போர்க்குடியினர் சிறு சிறு ஆட்சியாளர்களாக சிதறினர். அவ்வகையில் கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையில் ஆட்சி செய்த புதுக்கோட்டை பல்லவராயர் அரசர்கள் காலத்தில் விஜய நகர அரசின் பிரநிதியை எதிர்த்து போரிட்டு வீழ்த்திய ஒர் நிகழ்வும் நடந்துள்ளது.

கிபி 1550 ஆம் ஆண்டளவில் விஜயநகர அரசின் பிரதிநிதியான அக்கால ராசா என்பவர் புதுக்கோட்டையிலுள்ள நார்த்தாமலை பகுதியில் கோட்டை கட்டி வாழ்ந்தார்.

நார்த்தாமலை

புதுக்கோட்டையில் அக்கால ராசாவுக்கு எதிராக விசங்கி நாட்டு கள்ளர்கள் கலகங்கள் செய்தனர்.  விசங்கி நாட்டு கள்ளர்களையும் மற்ற மக்களையும்  அடக்க அக்கால ராசா சில ராணுவ நடவடிக்கைகள் எடுத்தார்.

அந்த காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த  பல்லவராயர் குல அரசி அக்காச்சி என்பவர் அக்கால ராசாவை வீழ்த்த எண்ணி திட்டம் வகுத்தார்.  கச்சிராயன் எனும் கள்ளர் குல தலைவனிடம்,  அக்கால ராசாவின் தலையை கொண்டு வர ஆணையிட்டார்

அக்கால ராசாவினை வீழ்த்த கச்சிராயன் தலைமையிலான கள்ளர் படை ஒன்றை அனுப்பினார்.  நார்த்தாமலைப் பகுதியில் நடைபெற்ற போரில் கச்சிராயன் அக்கால ராசாவினை வீழ்த்தி அவரது தலையை பல்லவராயர் அரசி அக்கச்சியாரிடம் ஒப்படைத்தார்.

கணவனை இழந்த அக்காலராசாவின் 7 மனைவிகளும், நார்த்தாமலை நொச்சி கண்மாய் அருகில் கணவனுடன் தீப்பாயந்து உயிர் விட்டனர்.

பல்லவராய அரசி அக்காச்சியின் நினைவாக அக்காச்சியார் குளம் இன்றும் உள்ளது.கந்தர்வகோட்டை அடுத்த பகுதியில் அக்காச்சிப்பட்டி எனும் ஊர் இவரது அடையாளமாக உள்ளது.

அக்கால ராசாவின் வம்சாவளிகள் இன்று புதுக்கோட்டை மாவட்டம் உப்பிலயக்குடி எனும் ஊரில் வாழ்ந்து வருகின்றனர். நொச்சிக் கண்மாயில் தீப்பாய்ந்த அக்கால ராசாவின் மனைவியர் நினைவாக உப்பிலியக்குடியில் ஒர் கோயில் எழுப்பி வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

(MANUAL OF PUDUKKOTTAI STATE VOL 2 PART 2 PG 1070)

www.sambattiyar.com

Total views 2,039 , Views today 1 

Author: admin

1 thought on “விஜயநகர பிரதிநிதியின் தலையைக் கொய்த பல்லவ அரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *