கள்ளர்களின் இரக்க குணத்தையும் கொடைத் தன்மையையும் பறைசாற்றும் சான்றாக பின்வரும் சம்பவம் வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது.
ஒரு சமயம் அழகர் கோயில் கள்ளர்கள் மதுரையை ஆட்சி செய்த தெலுங்கு நாயக்க மன்னரின் ஆநிரைகளை கவர்ந்து வந்து விட்டனர். சங்க கால போர் முறை பிற்காலம் வரையிலும் கள்ளர்களால் பின்பற்றப்பட்டு வந்ததை இது உணர்த்துகிறது. ஆநிரைகள் கவரப்பட்ட பின் அவற்றின் கன்றுகள் பாலின்றி தவித்தன. கள்ளர்கள் மேல் நடவடிக்கை எடுக்க இயலாத நாயக்க மன்னர் பாலின்றி வாடும் பசுங்கன்றுகளை அவிழ்த்து அவற்றை கள்ள நாட்டின் பக்கம் துரத்தி விட ஆணையிட்டார்.
மதுரை மன்னரின் நல்லெண்ணத்தை அறிந்த கள்ளர்கள் தங்களது நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பசு என ஆயிரம் பசுக்களை திரட்டி, தாங்கள் கவர்ந்து வந்த பசுக்களையும் சேர்த்து அதிகப்படியான பசு மாடுகளை மதுரையை நோக்கி ஒட்டி விட்டனர்.
தங்களது எதிரி நாட்டு மன்னனின் நல்லெண்ணத்தையும் போற்றி, அதற்கு கைமாறாக தாங்கள் கவர்ந்து வந்த. பசுக்களோடு ஆயிரம் பசுக்களை கூடுதலாக திருப்பி அளித்த கள்ளர்களின் பெருந்தன்மை தமிழர்களின் பெருமையை உலகிற்கு உரைக்கும் உரைக்கல்லாக அமைகிறது.
( ஆதார நூல்: தென்னந்திய குலங்களும் குடிகளும், 1906: தொகுதி -3)
Total views 1,262 , Views today 1