கள்ளர் நாடான அறந்தாங்கி

பட்டுக்கோட்டை தாலுகா ஆபீசில் கிடைத்த கிபி 1684 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் ” பட்டுக்கோட்டை” எனும் பெயர் முதன் முதலாக பயின்று வருகிறது.தஞ்சை மன்னர் ஷாஜி என்பவர் கிபி 1684 ல் கள்ளர்கள் வாழும் பட்டுக்கோட்டை தாலுகா பகுதிகளை கைப்பற்றியதாகவும் , இந்த வெற்றியின் அடையாளமாக பட்டுக்கோட்டையில் ஒரு கல்கோட்டையை மராட்டிய தளபதி வானாஜி பண்டிதர் என்பவர் கட்டியதாகவும் கல்வெட்டு கூறுகிறது.

இக்கல்வெட்டில் பட்டுக்கோட்டை சீமை கள்ளப்பத்து என கள்ளர் வாழும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பட்டுக்கோட்டை சீமை கள்ளப்பத்து தெற்கு பாம்பனாறு எல்லைமட்டும் திருப்புனவாசல் அறந்தாங்கி கடைநிலைக்கோட்டை முதலிய தலமெல்லாம் தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியின் தளபதியான ஸ்ரீவாவாசி பண்டிதரய்யர் கைப்பற்றி பட்டுக்கோட்டையில் ஒரு கோட்டையை எழுப்பியுள்ளார்.

இச்சமயத்தில் அறந்தாங்கி அரசராக ஆவுடை ரகுநாத வணங்காமுடி தொண்டைமானார் இருந்ததை கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.  கள்ளர் குல தொண்டைமான்களின் ஆட்சியில் இருந்த அறந்தாங்கி கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் பாலையவனம் ஜமீனாக சுருங்கியது. இவர்கள் பிற்காலத்தில் வணங்காமுடி பண்டாரத்தார் எனும் பட்டம் பூண்டு பாலையவனத்தில் இருந்து ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.

Post by: www.sambattiyar.com

Total views 1,309 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *