பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் மற்றும் கொல்கொண்டாவை சேர்ந்த சுல்தான்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தினர்.
இதன் காரணமாக தில்லையில் இருந்த நடராசர் படிமம் , பாதுகாப்புக்காக அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வைக்கப்பட்டது.

இது பற்றி கூறும் திருவாரூர் கோயில் செப்பேடுகள் கிபி 1648 ல் இருந்து 1686 வரை தில்லை நடராசர் படிமம் புதுக்கோட்டை சீமையில் உள்ள குடுமியான்மலையிலும், பிறகு சிறிது காலம் மதுரையிலும் வைத்து பாதுகாக்கப்பட்டதாக கூறுகின்றன.
இதே தகவலை கூறும் மற்றொரு செப்பேடு தஞ்சை மன்னர் சாம்போசியால் 1686ல் வெளியிடப்பட்டது. ( திருவாரூர் செப்பேடு- 4). இந்த செப்பேடு

” மன்னும்அம் பலவனாரை அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம் அப்புற மதுரைதனிலே அடவுடன் எழுந்தருளி” என கூறுகிறது.
கிபி 1648ல் தில்லையை விட்டு எடுத்துச் செல்லப்பட்ட நடராசர் படிமம் 40 மாதங்கள் புதுக்கோட்டை குடுமியான்மலையிலும், பிறகு மதுரையிலும் இருந்ததாக இதன் மூலம் அறிகிறோம்.
(நூல்: தஞ்சை மராத்தியர் செப்பேடுகள்:திருவாரூர் செப்பேடு 4/ திருப்பனந்தாள் காசிமடத்து செப்பேடுகள் – வடமொழி செப்பேடு 2)
கிபி 1648ல் புதுக்கோட்டையில் கள்ளர் குல சிவந்தெழுந்த பல்லவராய மன்னர் ஆட்சி செய்து வந்தார்.கிபி 1681 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு (968) , சிவந்தெழுந்த பல்லவராயர் ராச்சியம் பண்ணியருளுகையில் குடுமியான்மலை கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது. (IPS 968/ Manual of pudukkottai state vol 2 part 1 758-760)


புதுக்கோட்டையின் சில பகுதிகளை கிபி 1639ல் ராய தொண்டைமான் மன்னர், சிவந்தெழுந்த பல்லவராயரிடம் இருந்து கைப்பற்றி ஆட்சி செய்து வந்தார்.
” In a palace document, dated 1819AD, it is said that 180 years before that date ” the pallavarayars were ruling at pudukkottai and raya tondaiman with the consent of sriranga raya of anagundi( vijayanagar) conquered it” (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)”
கிபி 1648 ல் பீஜப்பூர் சுல்தான்களும், கொல்கொண்டா சுல்தான்களும் தஞ்சை மற்றும் மதுரையை நோக்கி படையெடுத்து வந்தபோது, கள்ளர்களின் உதவியோடு திருமலை நாயக்கர் அவர்களை வீழ்த்தியதாக 17 ஆம் நூற்றாண்டு வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது.( (Tamilaham in seventeenth century/ madras university pg 45)

பீஜப்பூர் சுல்தான்களின் படையெடுப்பின் போது புதுக்கோட்டை , தஞ்சை பகுதிகளும் தாக்குதலுக்கு ஆளாகியது. இது பற்றி 17ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவ பாதரியார்களின் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
கிபி 1662ல் பாதிரியார் ப்ரோன்சியா எழுதி உள்ள குறிப்புகளில்:-
” பீஜப்பூரின் சுல்தான் ஆதில் ஷா என்பவன் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது, மக்கள் எல்லாரும் கள்ளர் தலைவரான மெய்க்கொண்டானிடம் சரண் அடைந்தனர். மெய்க்கொண்டானிடம் போரிட்ட ஆதில் ஷா, அவரை வெல்ல இயலாமல் மெயக்கொண்டானுக்கு ” காட்டின் அரசன்” எனும் பட்டத்தை அளித்துவிட்டு திரும்பி சென்றார்”
(Tamilaham in seventeenth century/ madras university pg 77)

” தஞ்சையை தாக்கிய சுல்தான்கள், மன்னர்களின் படையைவிட கள்ளர்களின் தாக்குதலுக்கே பெரும்பாலும் அஞ்சினர்” என இதே பாதரியார் தன்னுடைய குறிப்பில் கூறியுள்ளார்.

“1659ல் தஞ்சையை இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் ஆண்ட போது, தஞ்சை மற்றும் புதுக்கோட்டையில் படையெடுத்த போது , கள்ளர்களின் கொரில்லா தாக்குதலால் சுல்தான் படை பின்வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 713)

கள்ளர்களின் தலைவனான மெய்க்கொண்டான் என்பவர் புதுக்கோட்டை – தஞ்சை எல்லைப் பகுதியில் இருந்த நந்தவனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்தவர். மெய்க்கொண்டான் தலைமையிலான கள்ளர்களின் வீரமும், புதுக்கோட்டையை ஆட்சி செய்த தொண்டைமான்கள் மற்றும் பல்லவராயர்களின் ஆளுமையும் இப்பகுதியை சுல்தான்களின் படையெடுப்பில் இருந்து காத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர கள்ளர்களின் உதவியோடு மதுரையையும் திருமலை நாயக்கர், சுல்தான்களின் படையெடுப்பில் இருந்து காத்துள்ளார்.
இங்கனம் 48 ஆண்டுகள் கள்ளர் சீமையான புதுக்கோட்டையிலும், மதுரையிலும் கள்ளர்களின் பாதுகாப்பில் இருந்த தில்லை நடராசர் கிபி 1686ல் மீண்டும் சிதம்பரத்தை அடைந்தார்.
Article by: www.sambattiyar.com
Total views 1,974 , Views today 1
Super
அருமை அருமை இன்னமும் எதிர்பார்க்கிறோம் பதிவிடவும்