யார் இந்த இருங்களர்கள்?..

இருங்களர் எனும் கள்ளர் மரபினர் புதுக்கோட்டை,  திருச்சி, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருங்களர்கள் தங்களது குடும்ப பெயராலேயே தாங்கள் வாழும் ஊர்களையும் அமைத்துள்ளனர்.

இருங்களர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், ஆலங்காடு ஊராட்சியில் இருங்களர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

இருங்களன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், ஒடப்பவிடுதி ஊராட்சியில் இருங்களர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

கள்ளர்களில் வழங்கப்பெறும் குடும்பத்தினருக்கு மிகவும் நெடிய வரலாறு உள்ளது. இருங்களர் பட்டம் கள்ளர்களில் வழங்கி வருவதை Manual of tanjore in madras presidency / Manual of pudukkottai state முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது…..

இருங்களர்களின் முன்னோர்

பிற்கால சோழப் பேரரசர்களோடு உறவாலும் உதிரத்தாலும் இணைந்திருந்தவர்கள் கொடும்பாளூர் வேளிர்கள். இவர்கள் தங்களை கொடும்பாளூர் கள்ளன் ஆச்சப்பிடாரி,  கொடும்பாளூர் கள்ளன் ஆதித்தபடாரி என முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களைப் பற்றி குறிக்கும் சுந்தர  சோழர் கால கல்வெட்டு ஒன்று ” இருங்கோள குல தீப” என குறிப்பிடுகிறது. அதாவது  ” சிறுவேளார் என்று பெயர்  பெற்றவனும், இருங்கோளர் குலத்தின் விளக்கு போன்றவனும்  பராந்தக சோழனின் மகள் வழி மரபில் முதன்மையானவனும் என கொடும்பாளூர் இருக்குவேளிர் அரசன் புகழப்படுகிறார்.

இவ்வேந்தர் மரபில் வந்த கள்ளர் குலத்தினர் பிற்காலத்தில் இருங்களர், இருங்கோளர் முதலிய குடும்பப் பெயர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

சோழர் குடும்பத்தினரின் ஒரு பிரிவாகவே வாழ்ந்து வந்த இருங்கோளர்கள் இன்றும் நமது கண் முன்னே அதே பெயருடன் இருந்து வருவது சோழர் வரலாற்றுக்கு ஒர் வாழ்வியல் சான்றாகும்.

Article by – www.sambattiyar.com

Total views 1,453 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *