பங்கள நாட்டு கங்கரையர்கள் பல்லவர் காலம் தொட்டு இருந்து வரும் மிக முக்கிய குறுநில மன்னர் மரபினர் .பங்கள நாடு என்பது பழைய வட ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக அன்றைய காலகட்டத்தில் விளங்கியிருக்கிறது . இவர்கள் மேலை கங்கர்களின் கிளை மரபினர்.
ஆதித்ய சோழன் தொண்டை மண்டலத்தை வெற்றிகொண்ட பொழுது , பங்கள நாட்டு கங்கரையர்களை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்திருக்க கூடும் .பங்கள நாட்டு மகாதேவர் ஆகியோர் முதலாம் ஆதித்ய சோழனின் காலத்தில் குறிப்பிடப்படுகின்றனர் .இவர்கள் கோவிலுக்கு கோடை அள்ளித்ததை தவிர வேறு எந்த தகவலும் சாசனங்களின் வாயிலாக கண்டறிய முடியவில்லை. செம்பியன் புவளி கங்கரையன் , முதலாம் ஆதித்ய சோழனின் கீழ் சிற்றரசனாக இருந்தான்.
சுந்தர சோழனின் மைந்தனான இரண்டாம் ஆதித்ய கரிகாலனின் காலக்கட்டத்தில் கங்கரையர்கள் மீண்டும் சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக விளங்கினார்கள். இச்சோழ இளவரசனின் சாசனத்தில் மும்முடிச் சோழ செம்பியன் சீய கங்கரையன் தொண்டைமண்டல ஆட்சியின் ஒரு பொறுப்பினை பெற்றிருந்ததாக அறிய முடிகிறது . பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பங்கள நாட்டுக் கூத்தாடும் தேவன் ப்ரித்தீவி கங்கன் வன்னிய மாதேவன் அழகிய சோழனும், குலோத்துங்க சோழ ப்ரித்தீவி கங்கனான திருவண்ணாமலையுடையானும் குறுநில மன்னராக திகழ்ந்தனர்.முதலாம் பராந்தக சோழனுக்கு துணையாக பல போர்களில் பிருத்வி கங்கரையர் பங்கு பெற்றுள்ளார். சோழகளோடு மிக நெருங்கிய உறவினை கொண்டவர்களாக கங்கரையர்கள் திகழ்ந்ததை, இவர்கள் கொண்டிருக்கும் செம்பியன் எனும் பட்டம் நமக்கு உணர்த்துகிறது.
கிபி 10 ஆம் நூற்றாண்டளவில் பங்கள நாட்டை ஆண்ட கங்கரையர்கள் கல்வெட்டுகளில் கள்ளஅரசியன்( கள்ளஅரசன்)(A.R.NO 177/1931)(.மணிமேகலை- கச்சிமாநகர் புக்க காதை-55 “அரசியன்” மறுகும் அமைச்சியன் மறுகும் – அரசப் பெருவீதியும் அமைச்சர் பெருந் தெருவும்), எனவும் கங்கரைய குல இளவரசிகள் கள்ள நங்கை எனவும் தங்களை குறிப்பிட்டுள்ளனர். கொங்கரையர் கள்ளப்பெருமானார் எனும் குறுநிலத்தலைவர் காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். ஓரு குலத்தின் தலைவனை பெருமகன் மற்றும் பெருமான் என்றும் குறிப்பது பழங்கால வழக்கம். உதாரணமாக கள்வர் பெருமகன், சோழர் குல பெருமானார், சோழப் பெருமானார் முதலிய பல சொல்லாடல்கள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கிறது. ( ஆதாரம் :- கல்வெட்டு 146/2014/ காஞ்சிபுரம் களத்தூர் கல்வெட்டு)



கங்கரையர் வழிவந்த கள்ளர்கள் இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயில் வட்டத்தில் உள்ள கொங்கத்திரையன்பட்டி முதலான பல ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். கங்கநாட்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் கொரடாச்சேரி முதலான பல ஊர்களில் வாழ்ந்து வருகன்றனர்.





Article by : www.sambattiyar.com
Total views 2,258 , Views today 1