கள்ளர் பெருமகனாகிய கங்கரையர்

  காஞ்சிபுரத்தில்  களத்தூர் பகுதியில் கிடைத்த கிபி 8-9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில்  கொங்கரையர் மன்னர் ஒருவரின் மனைவி அளித்த கொடை பற்றி குறிப்பிட்டுள்ளது.

இக்கல்வெட்டில் வரும் கள்ளப்பெருமானார் இப்பகுதியில் 25 ஆண்டுகள் தன்னாட்சி புரிந்த கங்கரைய மன்னர் என்றும், கள்வர் கோமான் புல்லி வம்சத்தில் வந்த கள்ளர் மரபினர் என மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட ” புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு ” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   கங்கரையர் கள்ளப் பெருமானார் என்பது கள்ளர் இனத்தை சேர்ந்த மன்னராகிய கங்கரையர் என பொருள்படும்.  பெருமானார் என்பது ஒரு பகுதியின் அரசர் என்றோ ஒரு குலத்தின் தலைவர் என்றோ பொருள்படும்.

கிபி 800 ஆம் ஆண்டை சேர்ந்த வட ஆர்காடு சீயமங்கலம் கல்வெட்டில் ” அடவை ஸ்ரீ கங்கரையர் நெற்குத்தி பெருமானார் ” எனும் கங்க அரசர் குறிப்பிடப்பட்டுள்ளார்.  இதற்கு விளக்க அளித்துள்ள Indian councilnl of historical research ” பெருமானார் என்பது  ஒரு பகுதியின் அரசரையோ தலைவரையோ குறிப்பிடும் சொல் என விளக்கியுள்ளது.
( Topographic list of inscriptions in tamil nadu and kerala) vol 1 page 272)

தமிழ் கல்வெட்டு சொல்லகராதியில் ” பெருமான்” என்பதற்கு தலைவன் எனும் பொருள்படும் என தொல்லியல் ஆய்வாளர் சுப்பராயலு ரெட்டியார் குறிப்பிட்டுள்ளார்.

ம. ராசாமாணிக்கனார் எழுதிய சோழர் வரலாறு நூலில் பராந்தக சோழனின் விருதுப்பெயர்களில் ” சோழ குல பெருமானார்”  என்பதும் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.  இதற்கு சோழர் குலத்தின் தலைவன் அல்லது அரசன் என பொருள்படும்.

கிபி 852 ஆம் ஆண்டை சேர்ந்த உளுந்தூர்பேட்டை கல்வெட்டில் முனையரையர் நாட்டு பெருமானார் சேவகர் என்பவர் செய்த திருப்பணி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருமானார் எனும் சொல் தலைவன் எனும் பொருளில் அமைத்துள்ளது. ( ஆவணம் 1999- பக் 14)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வாலிகண்டபுரம் கல்வெட்டில்  ” மிலாடுடையார் கயிறூர் பெருமானார் ” எனும் தலைவர் குறிப்பிடப்படுகிறார். இக்கல்வெட்டில் கயிறூரின் மன்னர் ( பெருமானார்) மிலாடுடையார் என கல்வெட்டு குறிப்பிடுகிறது. ( ஆவணம் 2007, பக் 42)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த தில்லைஸ்தானம் கல்வெட்டில் கொடும்பாளூர் இருக்குவேளிரின் மனைவியாக வரகுண பெருமானார் என்பவர் குறிப்பிடப்படுகிறார். ( கல்வெட்டு 287 Of 1911)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் ” மிலாடுடையார் காரியூர் பெருமானாரின் மகளார் ராஜதேவியார் தேசடிக்கி பெருமானார் ” என்பவர் குறிப்பிடப்படுகிறார். அரச குடும்பத்தவர் அனைவரும் இங்கு பெருமானார் என குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.( The cholas பக்கம் 426 : KA Nilakanta sastri 1935)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த திருவோற்றியூர் கல்வெட்டில்  ” சோழப் பெருமானடிகள் மகனார் அரிஞ்சிகை பெருமானார் என்பவர் குறிப்பிடப்படுகிறார்.(The cholas பக்கம் 428 : KA Nilakanta sastri 1935)

கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு கல்வெட்டில் வரகுணாட்டி பெருமானார் முத்தரையர் மகளார் என்றும் செம்பியன் இருக்குவேளார் மனைவியார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். இங்கு பெருமானார் அரச வம்சத்தை குறிக்க பயன்பட்டுள்ளது. ( Early Chola Temples Parantaka I To Rajaraja I Ad 907 985 பக் 118)

திருப்பூந்துருத்தியில் கிடைத்த கிபி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆதித்த சோழன் கல்வெட்டில்  ” சோழப் பெருமானடிகள் போகியருள் நங்கை சோழப் பெருமானார் ” என்பவர் குறிப்பிடப்படுகிறார்.( முற்கால சோழர் கலையும் சிற்பமும் பக் 375)

கிபி 910 ஆம் ஆண்டை சேர்ந்த தச்சை நன்னிலம் கல்வெட்டில் ” வெண்ணாட்டு பெருமானார் ”  அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது.  வெண்ணாட்டின் தலைவர் இங்கு பெருமானார் என குறிப்பிடப்படுகிறார்.( 548/ 1977)

மூன்றாம் திருமுறையில்

கருமானி னுரியுடையர் கரிகாட ரிமவானார்
மருமானா ரிவரென்று மடவாளோ டுடனாவர்
பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கரியமானின் தோலை ஆடையாக உடுத்தவர் . சுடுகாட்டில் ஆடுபவர் . இமவான் மருமகன் இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர் . போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து செல்பவர் . திருவெண்ணீற்றினைப் பூசியவர் . பிஞ்ஞகன் என்று போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார் .

இப்பாடலில் சிவனே பெருமானார் என தலைவன் எனும் பொருளில் குறிப்பிடப்படுகிறார்.

முதலாம் திருமுறையின் மற்றொரு பாடலில்

” மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு நன்மைப் பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவா ரிதண மதுவேறி
அஞ்சொற்கிளிக ளாயோவென்னும் அண்ணா மலையாரே”

என வானோர்களின் தலைவனான அண்ணாமலையார் வானோர் பெருமானார் என குறிப்பிடப்படுகிறார்.

மேற்கூறிய சான்றுகள் மூலம் ” கள்ளப் பெருமானார்” எனும் கல்வெட்டு குறிப்பு கள்ளர் குல தலைவன் எனும் பொருளில் அமைவதை சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

மேலும் கிபி 915 ஆம் ஆண்டை சேர்ந்த திருச்சோற்றுத்துறை கல்வெட்டில் ” கள்ள அரசனாகிய செம்பியன் புவன கங்கரையன் ” எனும் மன்னர் குறிப்பிடப்படுகிறார்.(177/1931)

www.sambattiyar.com

Total views 120 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *