சோழவள நாட்டில் கள்ளர் மரபினரின் வம்சங்களும் ஊர்ப்பெயர்களும்

தெற்காசியாவை கட்டியாண்ட சோழப்பேரரசின் தலைநகராக விஜயாலய சோழன் காலம் முதல் முதலாம் இராசராசன் காலம் வரை கோலோச்சியது தஞ்சை மாநகர். சோழப்பேரரசின் காலம் முதல் தற்காலம் வரையிலும் பெரும் பேரோடும் புகழோடும் விளங்கி வரும் சோழ வளநாட்டில் தஞ்சை, திருவாரூர் திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகுந்து வாழும் சோழ தேச கள்ளர் மரபினர் ஆயிரக்கணக்கான பட்டங்களை கொண்டு தங்களுக்கென்று நாட்டு அமைப்புகளை உருவாக்கி சோழப் பேரரசின் சாதனைகளுக்கு வாழ்வியல் சான்றாக உள்ளனர். சோழர் காலத்தில் குறுநில மன்னர்களாவும், படைதளபதிகளாகவும், படைவீரர்களாகவும், அரையர்களாகவும், நிர்வாக அதிகாரிகளாகவும் கோலோச்சிய கள்ளர் மரபினர் பிற்காலத்தில் தஞ்சைவளநாட்டில் 13 பாளையங்களாக பிரித்து தங்களது பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். தஞ்சையில் ஏற்பட்ட பல்வேறு அயலார் படையெடுப்புகளின் போது தஞ்சையை காத்தருளியவர்கள் கள்ளர்களே. தஞ்சையில் இருக்கும் 13 ஜமீன்களில் தற்போது 11 ஜமீன்கள் கள்ளர் மரபினர் என ‘ கள்ளர் சரித்திரம் (1923)’ எழுதிய பண்டிதர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிட்டுள்ளார். சோழவளநாட்டின் தெற்கு எல்லையான புதுக்கோட்டை சமஸ்தானத்தை பல்லவராயர்கள், தொண்டைமான்கள் என கள்ளர் அரச மரபினர் நாடாண்டு வந்துள்ளனர். இது தவிர பல நிலக்கிழார்கள், ராவ் பகதூர்கள் என சோழ தேசத்தின் பெரும்பான்மை நிலப்பகுதிகளை தங்கள் வசம் கொண்டு பழங்கால சோழர் வரலாற்றுக்கு வாழ்வியல் சான்றாக வாழ்ந்து வரும் இம்மரபினர் தாங்கள் குடியமர்ந்த ஊர்களின் பெயர்களை தங்களது பழங்கால வம்ச பட்டங்களை கொண்டே உருவாக்கியுள்ளனர். கள்ளர்கள் பல்வேறு வம்சங்களாக வாழ்ந்து வருவது பற்றியும் ஆங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள சில தகவல்களை காணலாம்:-

” சோழவள நாட்டின் கள்ளர்கள் தங்களது வாழ்விடங்களை பல்வேறு நாடுகளாக பிரித்து கொண்டுள்ளனர். இவர்கள் நாட்டரையன், தென்கொண்டான், வாண்டையான், மெய்க்கொண்டான், மழவராயன், காடவராயன் என பல்வேறு பட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்”
(கிபி 1835, Alexanders East india and colonial magazine Pg: 226-227)

” கள்ளர்கள் பல்வேறு உட்பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெயரை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தஞ்சிராயன், வன்னியன், சேர்வைக்காரன், மேனாட்ரையன், சிறுநாட்டரையன், சோழகன், சோழகங்கதேவர், காலிங்கராயன், வாண்டையார், தென்கொண்டார், அன்னவிசாரன், தொண்டைமான், இராசாளியார், பொன்பூண்டார், மழவராயர், காடவராயர், கிளாக்குடையான், பல்லவராயர், மாதுரார்,பன்னிக்கொண்டார் போன்ற பல்வேறு வம்சங்களாக கள்ளர்கள் வாழ்கின்றனர்”
( கிபி 1883 Manual of tanjore in madras presidency by venkasami row pg 190-192)

” கள்ளர்கள் பல்வேறு நாடுகளை கொண்டுள்ளனர். இவர்கள் வாழும் பகுதிகள் நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அம்புநாடு, விசங்கநாடு, சுந்தர நாடு, காசாநாடு, பாப்பா நாடு, வடமலை நாடு, கீழவேங்கை நாடு, மருங்காநாடு, தெற்கத்திநாடு போன்றவை சிலவாகும். ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டோடு திருமணம் செய்வது கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் பல் வம்சங்களாக கள்ளர்கள் வாழ்கின்றனர். பல்வேறு வம்சங்களும் ஒணையர், சிங்கத்தார், முண்டுரார்,இருங்களர், வாணாதிராயர், சேண்டபிரியர், பல்லவராயர், திண்ணாப்பிரியர், சேதுராயர், கண்டியர், காலிங்கராயர், சேனைக்கொண்டார், நெடுவாண்டார் போன்ற பல்வேறு பட்டங்களால் குறிக்கப்படுகிறது”
(கிபி 1906 Tanjore gazetter pg 84-85)

” கள்ளர்கள் வெவ்வேறு நாடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பல்வேறு பிரிவுகள் வெவ்வேறு பட்டங்களால் குறிப்பிடப்படுகிறது. களத்தில் வென்றார், பல்லவராயர், மழவராயர், தொண்டைமான் , சோழங்கத்தேவன், சேதுராயர், சேர்வைக்காரர் போன்றவை கள்ளர்கள் பயன்படுத்தும் பட்டங்களில் சிலவாகும்”
(கிபி 1907 Trichinopoly gazetteer pg 106-107)

” கள்ளர்கள் பல்வேறு நாடுகளை கொண்டுள்ளனர், ஒவ்வொரு நாட்டு கள்ளர்களும் தங்களுக்கென்று நாட்டு கோயில்களை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வம்ச கள்ளர்கள் தனிப்பட்ட பட்டங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பட்டங்களில் சில:- மழவராயர், பல்லவராயர், ராங்கியர், மண்ணவேளார், ராஜாளியார், தென்னதிரையர், காலிங்கராயர், கலியரார், வலங்கொண்டார், காடுவெட்டியார், மாகாளியார், பன்றிக்கொண்டார், தொப்பையர், சம்பட்டியார், அடையவளஞ்சார், தொண்டைமான், வாண்டார், இருங்களர், கொப்பனன், காடவராயர், நாட்டரையர், பட்டுக்கட்டி, புன்னையர், கொண்டையர், நரங்கியர், காளியார், கோப்புலங்கியார், உலகங்காத்தார், சோழகர், தென்கொண்டார், திராணியார், வன்னியர், பாலாண்டார்,வாட்டாச்சியார், கச்சிராயர், தேவர், கலிதீர்த்தார், பேய்வெட்டியார், கோழிபெற்றார், மழுக்கர், மாங்குளர், புதுக்குட்டியார், மாலையிட்டார், நரியர், கோப்பர், ஆவந்தர், பெத்தாச்சியார், அச்சமறியார், பச்சையர், வாண்டையார், மனம்கொண்டார், மானங்காத்தார், சேப்ளார், அதிராயர், அங்கராயர், மங்களார், மண்டையர், தெத்துவாண்டார், தம்புரார், அரையர், சாமந்தர், முனையதிரியர்,மாளுசுற்றியார், அகத்தியர், மயிலார், கருப்பட்டியார், கோனேரியார், மாகாளியார், தொண்டாம்புரையர், நெட்டையர், சேதுராயர், கடாரத்தரையர், செம்புலியார், வீரமுண்டார், மாதுரார், மழவர், கணியர், பஞ்சவராயர், பாண்டுரார், சோழத்தரையர், இளந்தரையர், வல்லத்தரையர், பம்பாளியார் ”

(1920 Manual of Pudukkottai state vol 1 Pg 109-112)

“தஞ்சாவூர் கள்ளர்களில் ஒரு பிரிவினர் தங்களது பிரிவுகளுக்கு பல்லவ ராசா, தஞ்சாவூர் ராசா ,தெற்கை வென்றவன், வல்லமை உடைய மன்னவன் போன்ற பல உயர் பட்டப்பெயர்களை கொண்டுள்ளனர்”

“புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் வாழும் கள்ளர்கள் பட்டப்பேரு என வழங்கப்படும் புறமணக்கட்டுப்பாடு உடைய குலப்பெயர்களை கொண்டுள்ளனர். அவர்கள் முத்துடையான், கருப்ப தொண்டைமான் , ஒநாயர், சிங்கத்தான் போன்ற பல குலப்பெயர்களை தங்களது பட்டங்களாக கொண்டுள்ளனர்”

( தென்னிந்திய குலங்களும் குடிகளும் பகுதி-3 / எட்கர் தர்ஸ்டன் pg 96/98)

சோழவளநாட்டில் , கள்ளர் மரபினரின் வம்ச பட்டங்களால் அமைந்த ஊர்கள் மற்றும் பகுதிகளின் தொகுப்பை காணலாம்.

01) அங்குராப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் வத்தனாக்கோட்டை ஊராட்சியில் அங்குரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

02) அங்கராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வெண்ணாவல்குடி ஊராட்சியில் அங்கராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

03) அங்குரார் தோப்பு : தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அலமேலுபுரம் ஊராட்சியில்அமைந்த அங்குரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

04)ஆரான் பழங்கொண்டார் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள பழங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

05)ஆரமுண்டான்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் புதுப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஆரமுண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

06)ஆர்சுத்திவிடுதி:-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்கொண்டான்விடுதி ஊராட்சியில் ஆர்சுற்றியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

07)ஆர்சுத்திவிடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் தோப்புவிடுதி ஊராட்சியில் உள்ள ஆர்சுற்றியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

08)ஆர்சுத்திப்பட்டு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ராகவாம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள ஆர்சுத்தியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

09)ஆண்டவராயபுரம்:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், சுனைக்காடு ஊராட்சியில் பாலையவனம் ஜமீன்களின் பட்டமான ஆண்டவராயர் எனும் பெயரில் அமைந்த சிற்றூர்.

10)இருங்குளவன்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் வாராப்பூர் ஊராட்சியில் இருங்களர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி

11)இருங்களர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், ஆலங்காடு ஊராட்சியில் இருங்களர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

12)இருங்களூர் :-திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இருங்களார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரின் அடையாளமாக அமைந்துள்ள சிற்றூர்.

13)இருங்களன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், ஒடப்பவிடுதி ஊராட்சியில் இருங்களர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

14)உப்புண்டார்ப்பட்டி :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் தெக்கூர் ஊராட்சியில் உள்ள உப்புண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

15)உறந்தரையர் குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள உறந்தரையர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்

16)உலகங்காத்தான்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் கிள்ளுக்குளவாய்ப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள உலகங்காத்தார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

17)கச்சிராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், கோவிலூர் ஊராட்சியில் கச்சிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

18)கண்டியர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம் , ஓரத்தநாடு வட்டத்தில் ஆம்பலாப்பட்டு வடக்கு ஊராட்சியில் அமைந்துள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

19)கண்டியர் தெரு :- திருவாரூர் மாவட்டம்,நீடாமங்கலம் வட்டம், எடமலையூர் ஊராட்சியில் உள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

20)கண்டியர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் ஆதனக்கோட்டை ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

21)கண்டியன்காடு:- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் மூத்தக்குறிச்சி ஊராட்சியில் உள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

22)கண்டியன்காடு :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மண்டையூர் ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

23)கண்டியன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், அம்புக்கோயில் ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

24)கண்ணமுன்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் செங்களூர் ஊராட்சியில் கன்னமுடையார், கன்னகொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

25)கள்ளன் தெரு:-தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் நெய்வேலி வடக்கு ஊராட்சியில் உள்ள கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

26)கள்ளர் தெரு :-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் ஆதனக்கோட்டை ஊராட்சியில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

27)கள்ளர் தெரு:-தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் சென்னியவிடுதி ஊராட்சியில் உள்ள கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

28)கள்ளர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் சோழகன்குடிகாடு ஊராட்சியில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

29)கள்ளர் எம்பேத்தி:-திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில், இடையர் எம்பேத்தி ஊராட்சியில் உள்ள கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

30)கள்ளர் நத்தம்:-புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கள்ளர் மரபினரின் அடையாளத்தில் அமைந்த சிற்றூர்.

31)கள்ளர் தெரு:- திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டத்தில் மாத்தூர் ஊராட்சியில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

32)கள்ளர் குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பரவாக்கோட்டை ஊராட்சியில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

33)கள்ளர்ஏந்தல்:-புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், கீழச்சேரி ஊராட்சியில் கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

34)கள்ளர்க்கோட்டை :- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், விளானூர் ஊராட்சியில் கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

35)கலியரான்விடுதி:-புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், கலியராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

36)கலியராயர் தெரு:-புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், காட்டாத்தி ஊராட்சியில் கலியராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

37)கடம்பராயன்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில், பரம்பூர் ஊராட்சியில் உள்ள கடம்பராயன் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

38)கருப்பட்டிப்பட்டி :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடக்கூர் தெற்கு ஊராட்சியில் உள்ள கருப்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

39)கருப்பட்டிப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், கருப்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

40)கருப்புடையான்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் கருப்புடையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

41)கரைமீண்டார்கோட்டை :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் இருக்கும் கரைமீண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

42)காங்கேயன்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் காங்கேயன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள காங்கேயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.இது சின்ன காங்கேயன்பட்டி/ பெரிய காங்கேயன்பட்டி என இரு ஊர்களாக அமைந்துள்ளது.

43)காடவராயர் குளம் :- தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் மாரியம்மன் கோயில் ஊராட்சியில் அமைந்துள்ள காடவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

44)காடவராயன்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், புனல்குளம் ஊராட்சியில் காடவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

45)காடுவெட்டிவிடுதி :- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் உள்ள காடுவெட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

46)காடுவெட்டிவிடுதி கிழக்கு :- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் பணிக்கொண்டான்விடுதி ஊராட்சியில் உள்ள காடுவெட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி

47)கார்ப்பிரியர்குறிச்சி:- தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் வட்டத்தில் கார்ப்பிரியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

48)காரியாவிடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் உள்ள காரியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

49)காலிங்கராயர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் பின்னையூர் ஊராட்சியில் உள்ள காலிங்கராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

50)காலிங்கராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோயில் வட்டத்தில், அண்டக்குளம் ஊராட்சியில் காலிங்கராயன் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

51)காவாளிப்பட்டி :-தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் உள்ள காவாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

52)கூழையான்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்கொண்டான்விடுதி ஊராட்சியில் ,கூழையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

53)கூழையன்காடு:-புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வெண்ணாவல்குடி ஊராட்சியில் கூழையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

54)குளந்திரான்பட்டு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், குழந்திரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

55)கொங்கத்திரையன்பட்டி:-புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் வாலியப்பட்டி ஊராட்சியில் உள்ள கொங்கத்திரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

56)கொங்கர் குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மரமடக்கி ஊராட்சியில் கொங்கர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

57)கொங்கரக்கோட்டை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், பல்லவராயன்பத்தை ஊராட்சியில் கொங்கரையர், கங்கரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

58)கொம்பியவிடுதி:-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்கொண்டான்விடுதி ஊராட்சியில் கொம்பியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

59)கொம்பியன்வயல் :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் வடவாளம் ஊராட்சியில் கொம்பியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

60)கொண்டையார் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு வட்டத்தில் மூர்த்தியம்பாள் ஊராட்சியில் அமைந்துள்ள கொண்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

61)கொண்டையர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், பல்லவராயன்பத்தை ஊராட்சியில் கொண்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

62)கொண்டையன்தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், முள்ளங்குறிச்சி ஊராட்சியில் கொண்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

63)கொண்டையர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், பிலாவிடுதி ஊராட்சியில் கொண்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

64)கொண்டையர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், அம்புக்கோயில் ஊராட்சியில் கொண்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

65)கோட்ராயன் தோப்பு:- தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் காசாநாடு புதூர் ஊராட்சியில் அமைந்துள்ள கோட்டைராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

66)கோட்டையாண்டார் இருப்பு:-தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் கரைமீண்டார் ஊராட்சியில் அமைந்துள்ள கோட்டையாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

67)கோபாலசமுத்திரம் :- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பெரியக்கோட்டை ஊராட்சியில் உள்ள கோபாலர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரின் பெயரில் அமைந்த சிற்றூர்.

68)சங்கரத்தேவன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் நல்லவன்னியகுடிகாடு ஊராட்சியில் உள்ள சங்கரத்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

69)சப்பாணி பழங்கண்டார் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள பழங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

70)சம்மட்டிகுடிகாடு :-திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டம், உள்ளிக்கோட்டை ஊராட்சியில் உள்ள சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

71)சம்மட்டிவிடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி

72)சம்பட்டிப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் சம்பட்டியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

73)சம்புரான்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில், சம்புவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

74)சம்புரான்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ஆதனூர் ஊராட்சியில் சம்புரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

75)சமையன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியில் அமைந்துள்ள சமையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

76)சாளுவன்பேட்டை:- தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் இஞ்சிக்கொல்லை ஊராட்சியில் உள்ள சாளுவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

77)சாளுவம்பேட்டை :- திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில், ஆவூர் ஊராட்சியில் சாளுவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

78)சாளுவர்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், முள்ளங்குறிச்சி ஊராட்சியில் சாளுவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

79)சாளுவர் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், மாங்காடு ஊராட்சியில் சாளுவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

80)சாமந்தன்குளம்:-திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் வட்டம், உபயவேதாந்தபுரம் ஊராட்சியில் உள்ள சாமந்தர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

81)சாமந்தன்பேட்டை:- திருவாரூர் மாவட்டம்,நன்னிலம் வட்டம்,வடக்குடி ஊராட்சியில் உள்ள சாமந்தர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

82)சிறுசாளுவர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் பின்னையூர் ஊராட்சியில் உள்ள சாளுவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

83)சிலம்பன் பழங்கொண்டார் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள பழங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

84)சின்னக்கள்ளன்காடு:- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டத்தில் குருவிக்கரம்பை ஊராட்சியில் உள்ள கள்ளர் மரபினரின் பெயரில் அமைந்த சிற்றூர்.

85)சின்னபாண்டுரார்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், லட்சுமணப்பட்டி ஊராட்சியில் பாண்டுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

86)சிறுநாட்டார்வயல்:-புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், நற்பவளக்குடி ஊராட்சியில் சிறுநாட்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

87)சித்துபாண்டுரார்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், லட்சுமணப்பட்டி ஊராட்சியில் பாண்டுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

88)சுக்கிரர்விடுதி:-புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், தீத்தானிவிடுதி ஊராட்சியில் சுக்கிரர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

89)சுக்கிரர் தெரு:-புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், எல் என் புரம் ஊராட்சியில் சுக்கிரர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

90)சூரியர்விடுதி:-புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாண்டான்விடுதி ஊராட்சியில் சூரியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

91)சென்னியம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், காசாவனூர் ஊராட்சியில் சென்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

92)சென்னியவிடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் உள்ள சென்னியர், சென்னியாண்டார், சென்னிநாடர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

93)சேப்ளார்தோப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தில், தொண்டைமான்நல்லூர் ஊராட்சியில் சேப்பிளார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

94)சேர்வைக்காரன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் மின்னாத்தூர் ஊராட்சியில் சேர்வை பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

95)சேதுராப்பட்டி:- திருச்சி மாவட்டம், மணிகண்டம் வட்டத்தில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் மிகுந்து வாழும் சிற்றூர்.

96)சேதுராப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் திருநல்லூர் ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

97)சேதுராப்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் , சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

98)சேதுராவயல்: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் வட்டத்தில், மேலப்புதுவயல் ஊராட்சியில் சேதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

99)சேதுராயன்ஏந்தல்:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மாங்குடி ஊராட்சியில் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

100)சேதுராயன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

101)சேதுராயன்நத்தம்:- திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் வட்டம், மாணிக்கமங்கலம் ஊராட்சியில் கீழ சேதுராயநத்தம்/ மேல சேதுராயநத்தம் என இரு ஊர்கள் சேதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழ்ந்து வருகின்றனர்.

102)சோழகன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

103)சோழகநத்தம்:-தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

104)சோழகன் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

105)சோழகம்பட்டி:- திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் வெம்பனூர் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

106)சோழகம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் , வெள்ளஞ்சார் ஊராட்சியில், சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

107)சோழகம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் வளவம்பட்டி ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

108)சோழகன்பட்டி:- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் திருநெடுங்குளம் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

109)சோழகம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில், தளிஞ்சி ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

110)சோழகம்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

111)சோழகம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், நொடியூர் ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

112)சோழகம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சியில் சோழகர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

113)சோழகனார்வயல்:- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டத்தில் கழனிவாசல் ஊராட்சியில் உள்ள சோழகனார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரின் பெயரில் அமைந்த சிற்றூர்.

114)திருவாட்சியார்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மரமடக்கி ஊராட்சியில் திருவாட்சியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

115)துறையுண்டார்க்கோட்டை :- தஞ்சாவூர், ஒரத்தநாடு வட்டத்தில் ராகவாம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள துறையுண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

116)தென்கொண்டான்இருப்பு : தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் செண்பகபுரம் ஊராட்சியில் உள்ள தென்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

117)தென்கொண்டார்வாசல்:- திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் வட்டம், வீராணம் ஊராட்சியில் உள்ள தென்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

118)தென்னவராயநல்லூர்:- திருவாரூர் மாவட்டம்,திருவாரூர் வட்டத்தில் உள்ள தென்னவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

119)தென்னதிரையன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தில் தென்னதிரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

120)தென்னதிரையன்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் முள்ளூர் ஊராட்சியில் தென்னதிரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

121)தேவர்குடியிருப்பு :- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் அலிவலம் ஊராட்சியில் உள்ள தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

122)தேவர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம்,வல்லவாரி ஊராட்சியில் தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

123)தேவர்குடியிருப்பு:-புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், வேம்பங்குடி ஊராட்சியில் தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

124)தொண்டராயன்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள தொண்டராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

125)தொண்டராம்பட்டு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தொண்டைராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

126)தொண்டைமான்தோப்பு :- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் அருமலைக்கோட்டை ஊராட்சியில் உள்ள தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

127)தொண்டைமான்பட்டி :- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

128)தொண்டைமான்பட்டி :- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் அரசங்குடி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

129)தொண்டைமான்பட்டி :- திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

130)தொண்டைமான்ஊரணி :புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

131)தொண்டைமான்ஏந்தல்:- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் வட்டத்தில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

132)தொண்டைமான்நல்லூர்:- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தில், தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

133)தொண்டைமான்புஞ்சை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், கலியரான்விடுதி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

134)தொண்டைமான்விடுதி :புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் குளவாய்ப்பட்டி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

135)தொண்டைமான் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், பட்டத்திக்காடு ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

136)தொண்டைமான் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், குளமங்கலம் ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

137)தொண்டைமான்குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம்,வல்லவாரி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

138)தொண்டைமான் குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், அரையப்பட்டி ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

139)தொண்டைமான் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், ஆலங்காடு ஊராட்சியில் தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

140)தொண்டாம்புரியர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், கருப்பட்டிப்பட்டி ஊராட்சியில் தொண்டாம்புரியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

141)தோழவன்னியன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் நல்லவன்னியகுடிகாடு ஊராட்சியில் உள்ள வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

142)நரங்கியம்பட்டி:-புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில், மின்னாத்தூர் ஊராட்சியில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

143)நரங்கியம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் திருக்களம்பூர் ஊராட்சியில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

144)நரங்கியம்பட்டி :-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் சோத்துப்பாலை ஊராட்சியில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

145)நரங்கியம்பட்டி கள்ளர் தெரு :-புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் செம்பாட்டூர் ஊராட்சியில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

146)நரங்கியன்பட்டு :- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் காடுவெட்டிவிடுதி ஊராட்சியில் உள்ள நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

147)நரங்கியம்பட்டு :- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், தீத்தானிவிடுதி ஊராட்சியில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

148)நரங்கியம்பட்டு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், குளந்திரான்பட்டு ஊராட்சியில் நரங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

149)நல்லவன்னியன்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை வட்டத்தில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

150)நெட்டையர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தில், வெல்லூர் ஊராட்சியில் நெட்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

151)நாட்டரையன்காடு :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மண்டையூர் ஊராட்சியில் நாட்டரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

152)நாட்டார் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், புள்ளான்விடுதி ஊராட்சியில் நாட்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

153)நார்த்தேவன்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ராகவாம்பாள்புரம் ஊராட்சியில் உள்ள நார்த்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

154)நாவிளங்கியான்காடு:- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மண்டையூர் ஊராட்சியில் நாவிளங்கியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

155)பழங்கொண்டார் குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள பழங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

156)பகட்டுவார்ப்பட்டி:-புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், பல்லவராயர்பட்டி ஊராட்சியில் பகட்டுவார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

157)பணிக்கொண்டான்விடுதி:- திருவோணம் வட்டத்தில் பணிக்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

158)பம்பாளியார் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், பனங்குளம் ஊராட்சியில் பம்பாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

159)பல்லவராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டத்தில், கள்ளர் குல பல்லவராயர்கள் வாழும் சிற்றூர்.

160)பல்லவராயன்பத்தை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

161)பல்லவராயன்பத்தை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், முள்ளங்குறிச்சி ஊராட்சியில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர். இது தெற்கு பல்லவராயன்பத்தை என அழைக்கப்படுகிறது.

162)பல்லவராயர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், காட்டாத்தி ஊராட்சியில் பல்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

163)பனங்கொண்டான்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், துளையனூர் ஊராட்சியில் பனங்கொண்டார் கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

164)பணிக்கொண்டான்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் வட்டத்தில் தொடையூர் ஊராட்சியில் பணிகொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

165)பாப்புடையான்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் பாப்புடையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

166)பாலாண்டார்களம்:- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் புலியூர் ஊராட்சியில் பாலாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

167)பாலாண்டம்பட்டி:-புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், பாலாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

168)பெரிய பழங்கொண்டார் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பழங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.

169)பெரியகள்ளன்காடு:-தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் வட்டத்தில் குருவிக்கரம்பை ஊராட்சியில் உள்ள கள்ளர் மரபினரின் பெயரில் அமைந்த சிற்றூர்.

170)பெருங்கொண்டான்விடுதி: புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

171)பொய்யுண்டார்குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் உள்ள பொய்யுண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

172)பொய்யுண்டார்க்கோட்டை :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்துள்ள பொய்யுண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

173)போந்தையர் தெரு:-தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் துவரங்குறிச்சி ஊராட்சியில் உள்ள போந்தையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

174)போத்தையர் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தில், போந்தையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

175)போத்தையன்வயல்:- புதுக்கோட்டை மாவட்டம் , மணமேல்குடி வட்டத்தில், வெட்டிவயல் ஊராட்சியில் போத்தையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

176)புள்ளவராயன்குடிகாடு:- திருவாரூர் மாவட்டம்,நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள புள்ளவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

177)புள்ளவராயன்தோப்பு:-திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான் வட்டம், மாத்தூர் ஊராட்சியில் உள்ள புள்ளவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

178)பூதராயநல்லூர் : திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ள பூதராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

179)பூலாம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டம், பரம்பூர் ஊராட்சியில் பூலார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

180)மங்காத்தேவன்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோயில் வட்டத்தில் மங்காத்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

181)மணவாளர் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மரமடக்கி ஊராட்சியில் மணவாளர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

182)மணவாளர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், கொத்தமங்கலம் ஊராட்சியில் மணவாளர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

183)மணவாளர் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பருத்திக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள மணவாளர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.

184)மணவாளர்கரை:- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் , திருமயம் ஊராட்சியில் மணவாளர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரின் பெயரில் அமைந்த சிற்றூர்.

185)மணியராயன்கொல்லை :- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் துவரங்குறிச்சி ஊராட்சியில் உள்ள மணியராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

186)மண்ணவேளம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் உள்ள மண்ணவேளார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

187)மண்ணவேளார்தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் நெய்வேலி தெற்கு ஊராட்சியில் உள்ள மண்ணவேளார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

188)மல்லம்பட்டி கள்ளர் தெரு :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், நடுப்பட்டி ஊராட்சியில் கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

189)மழவராயர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

190)மழவராயர் தெரு:-புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், பனங்குளம் ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பகுதி.

191)மழவராயர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ஒக்கநாடு மேலையூர் ஊராட்சியில் அமைந்துள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

192)மழவராயர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், மாங்காடு ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

193)மழவராம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், களமாவூர் ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

194)மழவராயநல்லூர்:- திருவாரூர் மாவட்டம், கோட்டூர் வட்டத்தில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

195)மழவராயம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோயில் வட்டத்தில் குளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.இவ்வூர் உடைய மழவராயன்பட்டி என அழைக்கப்படுகிறது.

196)மழவராயம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் வெள்ளஞ்சார் ஊராட்சியில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

197)மழவராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாண்டான்விடுதி ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

198)மழவராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், மாஞ்சான்விடுதி ஊராட்சியில் மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

199)மழவராச்சி தோப்பு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பாச்சூர் ஊராட்சியில் அமைந்துள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் பெயரில் அமைந்ழ சிற்றூர்.

200)மழவராச்சி தோப்பு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் உள்ள மழவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

201)மன்றாயர்குடிகாடு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் தலையமங்கலம் ஊராட்சியில் உள்ள மன்றாயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

202)மன்றாயர் தெரு :- தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு வட்டத்தில் பருத்திக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள மன்றாயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.

203)மணிக்கிரார் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் தளிகைவிடுதி ஊராட்சியில் உள்ள மணிக்கிரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

204)மணிக்கிரான்விடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் காவாளிப்பட்டி ஊராட்சியில் உள்ள மணிக்கிரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

205)மட்டையம்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்களூர் ஊராட்சியில் மட்டையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

206)முத்துவீரகண்டியன்பட்டி: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

207)முண்டர் குடியிருப்பு :- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மரமடக்கி ஊராட்சியில் முண்டர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

208)மூவரையப்பட்டி:- திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்தில் வெம்பனூர் ஊராட்சியில் மூவரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

209)மூவராயர்பாளையம்:- திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மூவரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

210)மேனாட்ரயன்விடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் காடுவெட்டிவிடுதி ஊராட்சியில் உள்ள மேனாட்டரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

211)மேனாட்ரயர்குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வெண்ணாவல்குடி ஊராட்சியில் மேனாட்டரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

212)மாங்காட்டான்கொல்லை:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், மாங்காடு ஊராட்சியில் மாங்காட்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

213)மாகாளிஏந்தல்:-புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், பரவரசன் ஊராட்சியில் மாகாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

214)மாதுரார்களம்:- புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் வட்டம், ராப்பூசல் ஊராட்சியில் உள்ள மாதுரார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

215)மாதுரான் புதுக்கோட்டை :- தஞ்சாவூர் வட்டத்தில் மருதக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள மாதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

216)மாதுரார் புதுக்கோட்டை :- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் புதுப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள மாதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

217)மாதுராயர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தநாடு வட்டத்தில் ஆம்பலாப்பட்டு வடக்கு ஊராட்சியில் அமைந்துள்ள மாதுராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

218)ராங்கியம் :- புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் ராங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

219)ராங்கியன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், ராங்கியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

220)ராஜாளிப்பட்டி :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தில் ராஜாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

221)ராஜாளியார் நகர் :- தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள ராஜாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி

222)ராஜாளிவிடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் தோப்புவிடுதி ஊராட்சியில் உள்ள ராஜாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

223)ராஜாளிகுடிகாடு :- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் ஊராட்சியில் ராஜாளியார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

224)ராயமுண்டார்பட்டி:- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் வெண்டயம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ராயமுண்டார். பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

225)வங்காரம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மண்டையூர் ஊராட்சியில் வங்கார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

226)வலங்கொண்டார்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில் வலங்கொண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

227)வல்லுண்டான்பட்டு :- தஞ்சாவூர் வட்டத்தில் அமைந்துள்ள வல்லுண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

228)வல்லத்திரான்கொல்லை:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், அதிரான்விடுதி ஊராட்சியில் வல்லத்துராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

229)வல்லத்திராக்கோட்டை:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வல்லத்தரசு, வல்லத்தரையர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

230)வன்னியம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் வட்டத்தில் , வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

231)வன்னியம்பட்டி :-தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் செங்கிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

232)வன்னியன்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், அரையப்பட்டி ஊராட்சியில் வன்னியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

233)வளவம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் வளவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

234)வாணாதிராயன் குடிகாடு:- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் உள்ள வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

235)வாணாதிராயன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டத்தில் வாணாதிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

236)வாண்டையார் தெரு :-தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பொய்யுண்டார்க்கோட்டை ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் பகுதி.

237)வாண்டையார் இருப்பு :- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

238)வாண்டையார் குடிகாடு:- திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பேரையூர் ஊராட்சியில் உள்ள வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

239)வாண்டையார் குடியிருப்பு:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், கரும்பிரான்கோட்டை ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

240)வாண்டையார் நகர்:- தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் நீலகிரி ஊராட்சியில் அமைந்துள்ள வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.

241)வாண்டாம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

242)வாண்டாம்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், ஆற்றங்கரை ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

243)வாண்டான்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

244)வாண்டான்விடுதி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், வாணக்கன்காடு ஊராட்சியில் வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

245)வாண்டாக்கோட்டை:- புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டத்தில், வாண்டார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் பெயரில் அமைந்த சிற்றூர்.

246)வாண்டையான்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம், வடுகப்பட்டி ஊராட்சியில் வாண்டையார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

247)வாலியப்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் வட்டத்தில் உள்ள வாலியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்

248)வில்லவராயன்பட்டி:-தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் கோயில்பத்து ஊராட்சியில் அமைந்துள்ள வில்லவராயர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

249)வெள்ளத்தேவன்விடுதி:- தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தில் உஞ்சியவிடுதி ஊராட்சியில் உள்ள வெள்ளத்தேவர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

250) வெட்டுவாக்கோட்டை:- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வெட்டுவார் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

251) வெட்டன் விடுதி : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் வெட்டர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.

252)வேங்கிராயன் குடிகாடு : தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் வல்லுண்டான்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வேங்கிராயர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.

சோழப்பேரரசின் அடித்தளமாக திகழ்ந்த கள்ளர் மரபினரின் பட்டங்கள் அவர்களின் வீரவாழ்வுக்கு சான்றாக இன்றும் அமைந்துள்ளது.

தொகுப்பு:- சியாம் சுந்தர் சம்பட்டியார்

Total views 3,441 , Views today 3 

Author: admin

5 thoughts on “சோழவள நாட்டில் கள்ளர் மரபினரின் வம்சங்களும் ஊர்ப்பெயர்களும்

  1. அருமை அருமை 👏👏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *