தஞ்சையையும் உறந்தையையும் காத்தருளிய கள்ளர்கள்

சங்க காலம் முதலே சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமைக்குரியது திருச்சியில் அமைந்துள்ள உறையூர். பிற்கால சோழப்பேரரசின் புகழ்பெற்ற தலைநகராக விளங்கிய பெருமைக்குரியது தஞ்சை மாநகரம் .கிபி 13 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் மேல் படையெடுத்த சுந்தரப்பாண்டியன் தஞ்சையையும் உறந்தையையும் தீயிட்டு கொளுத்தி, தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் உள்ள ஆயிரத்தளி எனும் சோழர் முடி சூட்டு மண்டபத்தில் வீராபிஷேகம் செய்துகொண்டார் என்பது வரலாறு. சங்க கால சோழர்கள் முதல் பிற்கால சோழர்கள் வரை தஞ்சையையும் உறந்தையையும் தங்களது பூர்வீக பூமியாக போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.  இத்தகைய பழம்பெருமை கொண்ட நகரங்களுக்கு பிற்காலத்தில் ஆபத்து வந்த போதெல்லாம்,  இவ்விரு நகரங்களையும் காத்தருளியவர்கள் ஸ்ரீ கள்ள சோழர்கள் என்பதை வரலாற்று ஆவணங்கள் உணர்த்துகின்றன.

கிபி 1659 ல் பீஜப்பூர் சுல்தானின் தளபதிகளான சாகஜி மற்றும் முகம்மதுகான் தஞ்சையில் புகுந்து சூரையாடினர்.  தஞ்சையின் மன்னரான விஜயராகவ நாயக்கர் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டார். இச்சமயத்தில் தஞ்சையின் செல்வங்கள் அனைத்தும் வல்லம் கோட்டையில் இருந்தது.  வல்லம் கோட்டையை நோக்கி இஸ்லாமிய படை பறந்தது. ஆனால் வல்லம் கள்ளர்கள் வல்லம் கோட்டையில் இருந்த தஞ்சையின் செல்வங்களை எடுத்துச் சென்று தங்களது பகுதியில் வைத்து பாதுகாத்தனர்.  இதனால் இஸ்லாமிய படை ஏமாற்றத்துடன் திரும்பியது.   சுல்தான்கள் தஞ்சையை விட்டு சென்ற பிறகு தங்களிடம் இருந்த செல்வங்களை அப்படியே தஞ்சை மன்னர் விஜயராகவ நாயக்கரிம் ஒப்படைத்தனர்.  தஞ்சை மாநகரின் கருவூலம் அன்று சோழர் வழி வந்த கள்ளர்களால் பாதுகாக்கப்பட்டது.
(தஞ்சை நாயக்கர் வரலாறு: குடவாயில் பாலசுப்ரமணியன்:பக் 251)

கிபி 1659 ல் தஞ்சையை தாக்கிய பீஜப்பூர் சுல்தான்கள்,  கள்ளர்களின் இரவு நேர திடீர் தாக்குதல்களை சமாளிக்க இயலாமலே தஞ்சையை விட்டு அகன்றனர்.  தஞ்சையின் கருவூலத்தை காத்த கள்ளர்கள்,  தஞ்சையையும் மீட்டனர்.( Nayaks of tanjore :v vridhargirisan: page xi)

கிபி 1659ல் சுல்தான்கள் படையெடுப்பின் போது தஞ்சை- வல்லத்தில் சிறை வைக்கப்பட்டு இருந்த நாயக்க மன்னரின் சகோதரர்களையும் கள்ளர்கள் மீட்டு சுல்தான்களின் கைகளில் சிக்காமல் பாதுகாத்தனர்.( Nayaks of tanjore :v vridhargirisan: page 128)

தஞ்சையை விட்டு அகன்ற பீஜப்பூர் சுல்தான் படை திருச்சி கோட்டையை கைப்பற்ற முயன்றது. ஆனால் கள்ளர் தலைவர்களின் தாக்குதல்களையும் சூரையாடல்களையும் சமாளிக்க இயலாமல் சுல்தான்கள் செஞ்சி நோக்கி சென்றனர்.  தஞ்சையும் உறந்தையும் கள்ளர்களால் காப்பாற்றப்பட்டது. இதைப்பற்றி குறிப்பிட்டுள்ள பாதிரியார்கள் கள்ளர்களின் உதவியோடு தஞ்சை மன்னர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றார் என கூறியுள்ளனர்..( Nayaks of tanjore :v vridhargirisan: page 144)

இதுபற்றி குறிப்பிடும் மிசினரி பதிவுகள் ”  தஞ்சையை தாக்கிய முஸ்லீம்கள்,  தஞ்சை மன்னரின் படையைவிட கள்ளர்களை கண்டே அஞ்சி நடுங்கினர்” என கூறியுள்ளன.
( History of nayaks of madura: R sathiyanatha aiyar: pg 153)

அன்று தஞ்சையும் உறந்தையும் அந்நியரின் தாக்குதலுக்கு உள்ளான போது,   தஞ்சையின் செல்வங்களையும் மக்களையும் பாதுக்காத்தவர்கள் சோழ வழிவந்த கள்ளர்களே. திருச்சிராப்பள்ளி கோட்டையை சுல்தான்கள் தாக்கியபோது அவர்களை விரட்டியடித்து திருச்சியையும் காத்தவர்கள் கள்ளர்களே. இன்று நாங்கள் தான் சோழ மரபினர் என கிளம்பும் பல இனக்குழுக்கள் இது போன்ற இக்கட்டான காலகட்டங்களில் எங்கே ஒழிந்து இருந்தனர் என்பது கடவுளுக்கே வெளிச்சம்….

Article by: www.sambattiyar.com

Total views 1,473 , Views today 3 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *