கண்டியர் எனும் பட்டம் கொண்ட முக்குலத்தோர் கள்ளர் மரபினர் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை , திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
இராசகண்டிய சோழன்
சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னரான முதலாம் ராசராசசோழனின் சிறப்புப்பெயர்களுள் இராச கண்டியரும் ஒன்றாகும்.
அவனுடைய கல்விச் சிறப்பையும், கலையுணர்வையும் ஐந்து பெயர்கள் தெரிவிக்கின்றன. அவை பண்டித சோழன், இராசவினோதன், நித்திய வினோதன், இராச கண்டியன், (பாணன்) இராசவித்தியாதரன் என்னும் பெயர்களாகும். இராசராசசோழன் அரசர்களுள் இசைவாணன் என்னும் கருத்தில் இராச கண்டியன் என்னும் சிறப்புப் பெயரை பூண்டிருந்தான்.

கிபி 1519 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டம் தாஞ்சூர் அகத்தீஸ்வரர் கோயில் கல்வெட்டு அறந்தாங்கி அரசர் பொன்னம்பலனாத தொண்டைமான் அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது. இக்கொட்டையை பெற்றுக் கொண்டு சாட்சிகளாக கையொப்பம் இட்டவர்களில் கண்டியதேவன் பட்டம் கொண்ட அதிகாரியும் ஒருவராக குறிப்பிட்டப்பட்டுள்ளனர்.

கிபி 1709 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை குளத்தூர் கல்வெட்டில் ராயரகுநாத தொண்டைமான் நமண தொண்டைமான் முதலியோர் அக்காளராசா என்பவருக்காக தானம் அளித்துள்ளனர். தானத்தை செலுத்தியவர்களில் கண்டியதேவன் மக்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கிபி 1793 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை மன்னர் அளித்த திருவிடைமருதூர் செப்பேட்டில் மன்னரால் தானம் அளிக்கப்பட்ட பகுதிகளில் கண்டியன் புன்செய்யும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்களின் நிலப்பரப்பும் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளர்களில் இராசசோழனின் சிறப்பு பெயர்களில் ஒன்றான கண்டியர் பட்டம் கொண்டவர்கள் வாழ்ந்து வருவதாக கிபி 1906ல் ஆங்கிலேயரால் எழுதப்பட்ட Tanjore gazetter எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கள்ளர் சரித்திரம் எனும் நூலில் கள்ளர் இனத்தவர்களின் பட்டங்களில் கண்டியரும் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சில சிற்றூர்கள்
தஞ்சை வட்டம்:- முத்துவீரக்கண்டியன்பட்டி, நந்தவனப்பட்டி, மனையேறிப்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கலூர்
ஒரத்தநாடு வட்டம்: கக்கரை, பின்னையூர், மண்டலக்கோட்டை, நெல்லுப்பட்டு, ஆர்சுற்றிப்பட்டு,கருக்க
மன்னார்குடி வட்டம்: பைங்காநாடு, தலையமங்கலம், எடமேலையூர், வடுவூர், திருக்களர், பெருகவாழ்ந்தான், கருவாக்குறிச்சி, சொக்களாவூர், கீராலத்தூர், சோழபாண்டி, கட்டக்குடி
பட்டுக்கோட்டை வட்டம்: ஆவிக்கோட்டை, பெரியக்கோட்டை, அதிராம்பட்டினம்
திருவையாறு வட்டம்: திருச்சின்னம்பூண்டி, மகாராசபுரம்
புதுக்கோட்டை வட்டம்: மீண்டார்க்கோட்டை, கீழாத்தூர், கல்லாலங்குடி,ஆதனக்கோட்டை
இவை தவிர இன்னும் பல சிற்றூர்களில் கண்டியர்கள் பரவி வாழ்கின்றனர்.
கண்டியர்கள் வாழும் பகுதிகளில் சில கண்டியர் எனும் அடையாளத்தோடு பெயரிடப்பட்டுள்ளன. அவையாவன
கண்டியர் தெரு:- தஞ்சாவூர் மாவட்டம் , ஓரத்தநாடு வட்டத்தில் ஆம்பலாப்பட்டு வடக்கு ஊராட்சியில் அமைந்துள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.
கண்டியர் தெரு :- திருவாரூர் மாவட்டம்,நீடாமங்கலம் வட்டம், எடமலையூர் ஊராட்சியில் உள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி
கண்டியர் தெரு:- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டத்தில் ஆதனக்கோட்டை ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் பகுதி.
கண்டியன்காடு:- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் மூத்தக்குறிச்சி ஊராட்சியில் உள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
கண்டியன்காடு :- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், மண்டையூர் ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
கண்டியன்பட்டி:- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டத்தில், அம்புக்கோயில் ஊராட்சியில் கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர் மரபினர் வாழும் சிற்றூர்.
முத்துவீரகண்டியன்பட்டி: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள கண்டியர் பட்டம் கொண்ட கள்ளர்கள் வாழும் சிற்றூர்.
முதலாம் ராசராச சோழனின் குல வழியினரான கள்ளர் குல கண்டியர்கள் இன்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ராசராசனின் சிறப்பு பெயரை சுமந்து தஞ்சை மண்டலம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர் என்பதை வரலாற்று ஆதாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.





Article by: www.sambattiyar.com
Total views 2,801 , Views today 1