கிபி பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் காலூன்ற ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுகாரர்களும் போட்டி போட்ட காலகட்டம். தென்னிந்திய முக்கிய சக்திகளின் ஆதரவை பெற மிரட்டும் வகையில் ப்ரெஞ்சு அரசாங்கம் எழுதிய கடிதம் அக்காலத்தில் முக்கிய பங்காற்றிய பாளையங்களையும் தலைவர்களையும் குறிப்பிடுகிறது.
பாண்டிச்சேரியில் காலூன்றி ஆட்சி செய்து வந்த பிரஞ்சு அரசாங்கத்தில் துபேஷ் எனும் தலைமை செயலாளர் பதவி வகித்த அனந்த ரங்கப்பிள்ளை என்பவர் இந்த கடிதத்தை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கிபி 1751, மே மாதம் 24 ஆம் தேதி எழுதப்பட்ட இந்த கடிதத்தில் உள்ள செய்தி பின்வருமாறு கூறுகிறது :-
“ஐதராபாத் நிஜாமான முசாபர் ஜங் கர்நாடகத்தின் ( சென்னை மாகாணம்) வரி வசூல் உரிமையை பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அளித்துள்ளார். அதனால் தென்னகத்தின் பாளையக்காரர்கள் மற்றும் தலைவர்கள் எங்களது கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.
ஆனால் ஆர்காடு நவாப் முகமது அலிகான் உடன்படிக்கைக்கு மாறாக செயல்பட்டு வருகிறார். பிரெஞ்சு அரசாங்கம் சார்பில் சந்தா சாகிப் தலைமையிலான படை முகமது அலிகானை வீழ்த்த திருச்சிராப்பள்ளி கோட்டை நோக்கி விரைகிறது. தென்னகத்தின் பாளையங்களும் தலைவர்களும் முகமது அலிகானுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. இதற்கு மாறாக நடந்தால் உங்களது நாடு கைப்பற்றப்பட்டு, சிறையில் தள்ளப்படுவீர்கள். சந்தா சாகிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கவும்”
இவ்வாறு மிரட்டல் விடும் வகையில் எழுதப்பட்ட கடிதம் சென்னை மாகாணத்தில் உள்ள முக்கிய பாளையங்களுக்கும் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் பின்வரும் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விஜய ரகுநாத சேதுபதி – இராமநாதபுரம் அரசர்
உடையாத்தேவர் – சிவகங்கை அரசர்
சின்னாஞ்ச தேவர் – சொக்கம்பட்டி பாளையம்(தேவர்- மறவர்)
சிவகிரி வன்னியர் – சிவகிரி பாளையம் (தேவர்- மறவர்)
அழகாபுரி வன்னியர் – அழகாபுரி பாளையம் (தேவர்- மறவர்)
திருவானத்தேவர் – சேத்தூர் பாளையம் ( தேவர்- மறவர்)
வாண்டாத்தேவர் – கொல்லங்கொண்டான் பாளையம் (தேவர்- மறவர்)
சொக்கத்தலைவன் – மணியாச்சி பாளையம்( தேவர்- மறவர்)
தடியத்தலைவன் – மணியாச்சி பாளையம்( தேவர்-மறவர்)
மருதப்ப தேவன் – ஊத்துமலை பாளையம் ( தேவர்-மறவர்)
இந்திரதலைவன்- தலைவன்கோட்டை பாளையம்( தேவர்-மறவர்)
குமாரதலைவன்- தலைவன்கோட்டை பாளையம்( தேவர்- மறவர்)
தாலி வேலி – அழகாபுரி பாளையம் ( தேவர் – மறவர்)
சுட்டாலத்தேவன்- பாளையங்கோட்டை ( தேவர்- மறவர்)
சேதுராயன் – ஊர்க்காடு பாளையம் ( தேவர் – மறவர்)
நல்லக்குட்டி – சிங்கம்பட்டி பாளையம்( தேவர் – மறவர்)
நம்பித்தலைவன்- திருக்கானங்குடி பாளையம்( தேவர்-மறவர்)
அஞ்சாத்தலைவன்- ( தேவர்- மறவர்)
சாளுவதேவன் – (தேவர்- மறவர்)
விசங்கிநாட்டுக் கள்ளர்கள் ( புதுக்கோட்டை வடக்கு)
தொண்டைமான்புரத்து கள்ளர்கள் ( புதுக்கோட்டை)
பிறமலைக் கள்ளர்கள்
தன்னரசு நாட்டுக் கள்ளர்கள்( பிற தன்னரசு கள்ளர்கள்)
அழகர்கோயில் கள்ளர் ( மேலூர் சுற்றுவட்டம்)
நாகமலை பகுதிக் கள்ளர்கள்
காங்கேயத்து ஒன்பது கவுண்டர் பாளையங்கள்
கம்பம், கூடலூர் மற்றும் நாஞ்சில் நாட்டு ஒன்பது பாளையங்கள்
மழவராயன் – அரியலூர் பாளையம்
எட்டப்ப நாயக்கர் – எட்டயபுரம் பாளையம்
அன்னிச்சி நாயக்கர் – கொளத்தூர் பாளையம்
தும்பிச்சி நாயக்கர் – பேரையூர் பாளையம்
காம நாயக்கர் – சாப்டூர் பாளையம்
பாசவ ரெட்டி – துறையூர் பாளையம்
பூச்சிய நாயக்கன்- மருங்காபுரி பாளையம்
லக்கய நாயக்கன் – குமாரவாடி பாளையம்
கம்மாய நாயக்கன்- வலையப்பட்டி பாளையம்
லிங்கம நாயக்கர்- நத்தம் பாளையம்
முத்தையா நாயக்கர்- கடவூர் பாளையம்
கொண்டம நாயக்கர்- மணியக்காரம்பட்டி பாளையம்
சாமியப்ப நாயக்கர் – ராமகிரி பாளைம்
அம்மையப்ப நாயக்கர் – அம்மையப்பநாயக்கனூர் பாளையம்
கூழப்ப நாயக்கர் – நிலக்கோட்டை பாளையம்
அப்பாய நாயக்கர் – கன்னிவாடி பாளையம்
சென்னவ நாயக்கர் – பழனி பாளையம்
ராமபத்திர நாயக்கர் – விருபாட்சி பாளையம்
கண்டம நாயக்கர் – கோலார்பேட்டை பாளையம்
ஏழுமடை நாயக்கர் – ஏழுமலை பாளையம்
கட்டபொம்மு நாயக்கர் – பாஞ்சாலங்குறிச்சி பாளையம்
சங்கரநாராயண ரெட்டி- முளைக்கரைப்பட்டி பாளையம்
கேச்சாலப்ப நாயக்கர்- கொல்லப்பட்டி பாளையம்
பெத்தன்ன நாயக்கர் – ஆதன்கரை பாளையம்
ஈராயப்ப நாயக்கர்- நாகலாபுரம்
சிறுமலை நாயக்கன் – மேலமண்டை பாளையம்
ராமபத்திர ரெட்டி
ராமசாமி ரெட்டி
குமாரசாமி ரெட்டி
வெங்கடாச்சல ரெட்டி
காளங்க நாயக்கர்
கடலக்குடி நாயக்கர்
எருவப்ப நாயக்கர்
காமாட்சி நாயக்கன்
இந்த கடிதம் பதினெட்டாம் நூற்றாண்டின் அரசியல் நிலையையும், அக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தலைவர்கள் மற்றும் குழுக்களை குறிப்பிடும் முக்கிய ஆதாரமாக உள்ளது.






Diary of ananda ranga pillai- vol 8 (pg 6-10)
Article by : www.sambattiyar.com
Total views 2,191 , Views today 2
அருமை நன்றாக உள்ளது தொடறுங்கள் நண்பா