“கலைமாமுகில்” ம.நடராசன் மண்ணையார்

கலைமாமுகில் ம நடராசன் மண்ணையார் 23 அக்டோபர் 1943 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் விளார் எனும் ஊரில் மண்ணையார் குடும்பத்தில் உதித்தார்.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.

1967 ஆம் ஆண்டு PRO எனும்   மக்கள் தொடர்பு அரசு அதிகாரியாக பணியாற்றினார்.

புதிய பார்வை எனும் இதழை தொடங்கி நடத்தி வந்தார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் உயிர்தோழியும்,  அதிமுகவின் பொதுச்செயலாளருமான மதிப்பிற்குரிய சசிகலா அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்.

இளமை காலம் முதலே தமிழ் தேசய ஆர்வலராக விளங்கிய ம.நடராசன்,  ஈழத்தமிழருக்கு ஆதரவாக புரட்சி தலைவி எடுத்த பல முடிவுகளுக்கு மறைமுக காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

2009ல் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டப்போது,  அவர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களை முன்னெடுத்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவூட்டும் தூண் அமைக்க தமிழ் தேசிய இயக்கங்கள் முடிவெடுத்து, ம நடராசன் அவர்களின் தலைமையில் 2-Jun-2010 அன்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.(நட்பில் சிறந்த நண்பர் ம நடராசன்: பழ நெடுமாறன்)

நினைவுத்தூண் அமைக்கும் திட்டத்தை விரிவாக்கி, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்க ஐயா ம நடராசனே காரணமாவார்.(நட்பில் சிறந்த நண்பர் ம நடராசன்: பழ நெடுமாறன்)

உலகத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் மூலம் ” தமிழீழ படுகொலையை” நினைவூட்ட தஞ்சை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பல கோடி மதிப்புள்ள தனது சொந்த நிலத்தை இலவசமாக அளித்தார்.(நட்பில் சிறந்த நண்பர் ம நடராசன்: பழ நெடுமாறன்)

ஐயா ம நடராசன் அவர்கள்,   முள்ளிவாய்க்கால் முற்றத்தை வடிவமைக்க பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்க்கொண்டு,  பல மாதிரிகளின் புகைப்படங்களை சேகரித்தார். அவற்றைக் கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றித்திற்கு உயிரூட்டினார். (நட்பில் சிறந்த நண்பர் ம நடராசன்: பழ நெடுமாறன்)

முள்ளிவாய்க்கால் முற்றம்

2012 ஆம் ஆண்டு ம நடராசன் அவர்களின் பிறந்தநாள் விழா,  சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போது அவருக்கு மலேசிய வாழ் தமிழர்களின் சார்பாக 70 பவுன் தங்க சங்கிலியை அளித்து அத்துடன் மகேந்திரா Xuv-500-W8 காரையும் வழங்கினார்கள்.அந்த கணமே 70 பவுன் தங்க சங்கிலியையும், காரையும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கான செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு மேடையில் இருந்த பழ. நெடுமாறன் அவர்களிடம் அளித்த கொடையுள்ளம் கொண்டவராக விளங்கினார்.(நட்பில் சிறந்த நண்பர் ம நடராசன்: பழ நெடுமாறன்)

2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள்,  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க திட்டமிட்டு இருந்தபோது,  தமிழக அரசு பல இடையூறுகள் செய்ய முயற்சித்ததால் நவம்பர் ஆறாம் தேதி ஐயா ம நடராசன் மண்ணையார் அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா சிறப்புடன் நடந்து முடிந்தது.

2015 ஆம் ஆண்டு,உலகத் தமிழர் பேரமைப்பின் 8வது மாநாடு நடைபெற்றபோது ம நடராசன் அவர்களுக்கு ” கலைமாமுகில்” பட்டம் வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் தஞ்சையில் பொங்கல் விழாவினையும்,  நெற்கட்டுஞ்செவ்வலில் மாவீரர் பூலித்தேவர் விழாவினையும்,  எட்டையபுரத்தில் பாரதி விழாவினையும் தனது சொந்த செலவில் நடத்தி மிகிழ்ந்தார். விழாக்களின் போது பல ஆயிரக்கணக்கான ஏழை எளியோருக்கு விருந்தளித்து மகிழ்வார்.

எம் ஜி ஆர் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தபோது,  கட்சியை மீண்டும் இணைத்து , ஜெயலலிதாவை முன்னிறுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் ம. நடராசன் ஆவார்.

அரசியல் சாணக்கியனாக திகழ்ந்த ம நடராசன் அவர்கள் இந்திய அளவில் பல அரசியல் தலைவர்களின் நட்பை பெற்றிருந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ம நடராசன்,  20-03-2018 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.

அன்னாரது மறைவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் சார்பாக கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழர்கள் இவர் மேல் வைத்திருந்த அன்பிற்கு இதுவே சாட்சியாகும்.

கலைமாமுகில் ம நடராசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் துயரத்துடன் பின் தொடர்ந்தனர். முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இவரது உடல் சிறிது நேரம் வைக்கப்பட்டு, பிறகு முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அருகிலேயே கலைமாமுகிலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் மொழிக்காகவும்,  தமிழீழ மக்களுக்காவும் தன் வாழ்நாளில் பெரும் பங்கை செலவழித்த ஐயா ம நடராசன் அவர்களின் புகழ் என்றும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.

Article by : www.sambattiyar.com

Total views 2,703 , Views today 4 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *