மதுரையில் தங்கி கிபி 17 ஆம் நூற்றாண்டில் கிருஸ்தவ மிஷனரிகள் மூலம், மதப்பரப்புரைகள் மேற்கொண்டவர் பாதர் மார்ட்டின்.கிபி 1700 ல் அவர் எழுதிய குறிப்புகளில் மதுரை தேவர்கள் பற்றி குறித்துள்ளார். அவையாவன:-( Travels of jesuits into various parts of the world vol 2: pg 261-26
மதுரை கள்ளர்கள் மிகவும் பலம்பெற்று திகழ்கின்றனர். அவர்கள் மதுரை மன்னருக்கு கட்டுப்படாமல் தன்னாட்சி செய்து வருகின்றனர்.சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, கள்ளர்களின் தலைவன், மதுரை நகரை தாக்கி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.கடந்த இரண்டு வருடங்களாக மதுரையை, கள்ளர் தலைவன் ஆட்சி செய்து வந்தார்.
இதனால் நாட்டை இழந்த ராணி மங்கம்மாவின் தளவாய், பெரும்படையுடன் மதுரையை தாக்க தயாரானார்.இரவில் , எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், மதுரையை தாக்கினார்.கோட்டையின் ஒரு வாயிலை நான்கு யானைகளை கொண்டு தாக்கினார்.கள்ளர்கள் போருக்கு தயாராகும் முன்பே பெரும்படையுடன் தாக்கியதால், கள்ளர்களால் சமாளிக்க இயலவில்லை.

கள்ளர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரையை ஆண்ட கள்ளர்களின் தலைவன்,அங்கிருந்து தப்பி, அவரது கள்ளர் நாட்டுப்பகுதியில் வாழத்தொடங்கினார்.திருமலை நாயக்கர், கள்ளர்களை சமாதானப்படுத்த, கள்ளர்களுக்கு பட்டம் கட்டி மரியாதைகள் அளித்து சமூகமாக வாழ்ந்தார். ஆனால் அவருக்கு பின் வந்த நாயக்க மன்னர்களால், கள்ளர்களுடன் சுமூக உறவை மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கு சான்றாக இந்த தகவல் உள்ளது!!
இரண்டாவது முறை
கிபி 1781 ல் மதுரையை நவாபின் பிரதிநிதியான மல்லாரி ராவ் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தான்.அந்த காலகட்டத்தில் மதுரையை நோக்கி படையெடுத்த கள்ளர்கள் தலைநகரை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கிபி 1784 ஆம் ஆண்டு கேப்டன் ஆலிவர் தலையிலான ஆங்கிலேயர் படை, மேலூர் வரை வந்து கள்ளர்களை ஒடுக்கி, மதுரையை மீண்டும் கைப்பற்றினான். இதன்பிறகு திருநெல்வேலி கலெக்டர் உதவியுடன் மதுரை- மேலூர் நிலங்கள் அளக்கப்பட்டது.( Madura manual-1868- pg 47)

விஜயநகர ஆட்சிக்கு பிறகு மதுரை இரண்டு முறை கள்ளர்களால் கைப்பற்றப்பட்டு பாண்டியரின் நகரில் தமிழர் ஆட்சி மலர்ந்துள்ளது…..
Article by: www.sambattiyar.com
Total views 1,579 , Views today 1