கொண்டையங்கோட்டை மறவர்களின் கொத்து மற்றும் கிளைகள்

போர்க்குடி சமூகமான முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான கொண்டையங்கோட்டை மறவர்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மற்றும் தூத்துக்குடி முதலிய மாவட்டங்களில் மிகுந்து வாழ்கின்றனர்.  வீரமிக்க பல மாவீரர்கள் உருவான கொண்டையங்கோட்டை வம்சத்தார்கள் தாய் வழி கிளையை அடிப்படையாகக் கொண்டு திருமண உறவு கொள்கின்றனர்.  ஒரே கிளையை சேர்ந்தவர்கள் பங்காளிகளாகவும் வெவ்வேறு கிளையினர் திருமண உறவு கொள்ளும் தகுதி உடையவர்கள் ஆகின்றனர். இவர்களின் கொத்து மற்றும் கிளை முறையில் திருநெல்வேலி பகுதி மறவர்களுக்கும்,  ஆப்பநாட்டு மறவர்களுக்கும் ஓரு சில வேறுபாடுகளுடன் உள்ளது. ஒவ்வொரு கொத்தும் குறிப்பிட்ட கிளைகளை கொண்டுள்ளது.கொண்டயர்களின் கொத்து மற்றும் கிளை பற்றிய தகவல் கிபி 1910 ல் எழுதப்பட்ட  totemism and exogamy எனும் நூலில்  தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட கொண்டையங்கோட்டை மறவர்களின் கொத்து மற்றும் கிளைகள்

01)கொத்து – மிளகு
      கிளைகள்- வீரமுடிதாங்கினார்
                          சேதுராயர்          
                          செயங்கொண்டார்
02)கொத்து – வெற்றிலை
      கிளைகள்- அகஸ்தியர்
                           மறவீடு
                           அழகியபாண்டியன்
03)கொத்து – தென்னை
      கிளைகள்- வன்னியன்
                           வெட்டுவார்
                           நாட்டை வென்றார்
04)கொத்து – கோமுகம்
      கிளைகள்- கீழ்நம்பி
                          அன்புற்றான்
                          கௌதமன்
05)கொத்து – இச்சை
      கிளைகள்- சடைச்சி
                          சங்கரன்
                          பிச்சிப்பிள்ளை
06)கொத்து – பனை
      கிளைகள்- அகிலி
                          லோகமூர்த்தி
                           ஜாம்பவர்
                         

ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்கள் பின்பற்றும் கொத்து மற்றும் கிளைகள் பின்வருமாறு:-

கள்ளர் – மறவர் ஒற்றுமைகள்

கொண்டையர்: கொண்டையன்கோட்டை எனும் பெயரை போல், தஞ்சை கள்ளர்களில் கொண்டையர் எனும் பட்டம் உள்ளது.( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 121)

வீரமுடிதாங்கினார்:- கொண்டையங்கோட்டை மறவரில் காணப்படும் வீரமுடிதாங்கினார் கிளையை ஒத்து, பாகனேரி நாட்டுக் கள்ளரில், தந்தை வழி பட்டங்களாக திருமுடி , பலமுடி வினைமுகந்தாங்கி, திரள்படைத் தாங்கி, சேர்முடி முதலானவை உள்ளன.

சேதுராயர்: கொண்டையங்கோட்டை மறவர்களின் சேதுராயர் கிளையைப் போல், சேதுராயர் எனும் பட்டம் தஞ்சை, புதுக்கோட்டை கள்ளர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது.  இக்கள்ளர்கள் வாழும் ஊர்களின் பெயர்கள் சேதுராயன் குடிகாடு, சேதுரார்பட்டி என பட்டப்பெயர்களால் அமைந்துள்ளது.( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 161)

செயங்கொண்டார்:கொண்டையங்கோட்டை மறவர்களின் செயங்கொண்டார் கிளையைப் போல், செயங்கொண்டார் எனும் பட்டம் தஞ்சை கள்ளர்களால் பயன்படுத்தப்படுகிறது. ( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 157)

அகத்தியர்: அகத்தியர் எனும் கொண்டையங்கோட்டை மறவர்களின் கிளை, தஞ்சை கள்ளர்களுக்கு அகத்தியர் எனும் பட்டமாக உள்ளது. ( கள்ளர் மரபினரின் பட்டபெயர்கள் ஒர் ஆய்வு- வீ சிவபாதம்- பின்னிணைப்பு 2)

அழகியபாண்டியன்: கொண்டையங்கோட்டை மறவர்களின் கிளையான ” அழகியபாண்டியனை” போல் பாகனேரி நாட்டு கள்ளர்களிலும் சில பட்டங்கள் காணப்படுகின்றன. பாகனேரி நாட்டுக் கள்ளர்களின் தந்தை வழி பட்டங்களான அரியபாண்டியன் , தனிவீரப்பாண்டியன் முதலியவை மறவர்களின் அழகிய பாண்டியன் கிளையை ஒத்துள்ளது.

வன்னியன்: வன்னியன் கிளையை உடைய கொண்டையங்கோட்டை மறவர்களைப் போலவே தஞ்சை,  புதுக்கோட்டை கள்ளர்களும் வன்னியர் எனும் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 321)

வெட்டுவான்: கொண்டையர்களின் கிளையான வெட்டுவான் என்பது தஞ்சை புதுக்கோட்டை கள்ளர்களின் பட்டமாக பயன்படுத்தப்படுகிறது. பாகனேரி நாட்டு கள்ளர்களின் தந்தை வழி பட்டங்களாக நண்டு வெட்டி,  வடம் வெட்டி முதலியவை உள்ளன. ( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 343)

நாட்டை வென்றார்: கொண்டையங்கோட்டை மறவர்களில் காணப்படும் கிளையான நாட்டை வென்றார் ,  தஞ்சை கள்ளர்களிடம் களத்தில் வென்றார், வென்றார் முதலிய பட்டங்கள் உள்ளன.( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 79/344)

சங்கரன்: கொண்டையங்கோட்டை மறவர்களின் கிளையான சங்கரன் , தஞ்சை கள்ளர்களில் சங்கரர், சங்கரத்தேவர் முதலிய பட்டங்களாக உள்ளன.( நாட்டார் – கள்ளர் சரித்திரம் பட்டம் எண் 128)

பிச்சிப்பிள்ளை:கொண்டையங்கோட்டை மறவர்களின் கிளையான பிச்சிப்பிள்ளை,  ஏழு கிளை நாட்டு கள்ளர்களில் பிச்சையா கிளை எனும் தாய் வழிக் கிளை உள்ளது.

அரசன் கிளை: ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களில் காணப்படும் மற்றொரு கிளையான ” அரசன் கிளை” , ஏழு கிளை கள்ளர் நாட்டு சீமையில் அரசியான் கிளையாக உள்ளது.

கொண்டையங்கோட்டை மறவர்களில் காணப்படும் கிளைகளில் சில கிளைகள் கள்ளர்களிலும் தாய் வழி கிளையாக உள்ளது. கொண்டையங்கோட்டை மறவர்களில் காணப்படும் பல கிளைகள் தஞ்சை கள்ளர்களின் பட்டமாகவே பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய ஒற்றுமைகள் கள்ளர் மற்றும் மறவர்களுக்கு உள்ள நெருங்கிய தொடர்பை நமக்கு உரைக்கிறது.

ஆய்வில் பேருதவி: விஜய் பாண்டியன் செயங்கொண்டார்

Article by: www.sambattiyar.com

Total views 12,019 , Views today 38 

Author: admin

1 thought on “கொண்டையங்கோட்டை மறவர்களின் கொத்து மற்றும் கிளைகள்

  1. திருநெல்வேலி என்பதே தென்காசி தூத்துக்குடியை உள்ளடக்கிய பகுதி தான் அந்நாளில்
    இன்று 3 மாவட்டமாக உள்ளது 3 மாவட்ட த்திலும் பறந்து விரிந்து வாழும் சமூகம் மேலும் கன்னியாகுமரி பகுதியிலும் கேரள திருவிதாங்கூர் பகுதியிலும் உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *