மரபியல் ஆய்வில் முக்குலத்தோர்

2007 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக மரபியல் ஆய்வுத் துறை மற்றும் வங்காளத்தின் Indian statistical institute இரண்டும் இணைந்து தமிழ் குடிகளின் மரபணு ஒற்றுமை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மற்றும் தஞ்சையில் வாழும் 54 கள்ளர்கள் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூரில் வாழும் 47 அகமுடையார்கள், கமுதி மற்றும் சென்னையில் வாழும் 68 மறவர்கள் முதலியவர்களின் இரத்த மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டது. இது தவிர மற்ற தமிழ் குடிகளின் இரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்களின் மரபணுக்கள் மரபியல் ரீதியில் மிகவும் ஒத்த பண்புகளுடனும்,  ஒரே கிளையை சேர்ந்ததாகவும் அறியப்பட்டது.  இதிலும் கள்ளர் மற்றும் அகமுடையார்களின் மரபணுக்கள் மிக அதிகமாக ஒத்துப் போவதாக ஆய்வில் தெரிய வந்தது.

முக்குலத்தோரின் மரபணு ஆப்ரிக்கர்கள் மற்றும் சாகுல்( ஆஸ்திரேலிய பழங்குடி) ஆகியோரின் மரபணுக்களின் மாதிரியை ஒத்து உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
( Genetic structure of early immigrants: Madras university)

அறிவியல் ரீதியாகவே முக்குலத்தோர் மக்கள்  ரத்த பந்தம் உடையவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாறு மற்றும் வாழ்வியல் சான்றுகள்

கிபி 1728 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொண்டைமான் கல்வெட்டில் கள்ளத்திருமங்கையாழ்வார் வங்கிசத்தில் உதித்த ராமசாமித்தொண்டைமான் என குறிப்பிடப்பட்டுள்ளது.( புதுக்கோட்டை கல்வெட்டு 829)

புதுக்கோட்டை கல்வெட்டு 829

இதற்கு ஏற்ப மறக்குல ஊத்துமலை பாளையப்பட்டு வம்சாவளியில்,  மருதப்பதேவன் தன்னை கள்ளத்திருமங்கையாழ்வார் வம்சத்தில் உதித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.( பாளையப்பட்டு வம்சாவளி- பக் 116- பகுதி Iv)

ஊத்துமலை பாளையப்பட்டு வம்சாவளி

தற்காலத்தில் கள்ளர் மற்றும் மறவராக உள்ள இரு வேந்தர்களும் தங்களை திருமங்கை ஆழ்வார் வழியினர் எனக் குறிப்பிடுவதால், இருவரும் ஒரே கால்வழியினர் என்பதனை அனைவரும் உணரலாம்.

கிபி 18ஆம் நூற்றாண்டில் மேற்கு திசை பாளையங்களுக்கு தலைமை தாங்கியவர் பூலித்தேவர். இவர் வாழ்ந்த ஊர் நெற்கட்டுஞ் செவ்வல் என அழைக்கப்பட்டது. தற்போது இவ்வூர் ஆவுடையாபுரம் என அழைக்கப்படுகிறது. சங்க காலம் முதலே போர்த்தொழிலை முதன்மையாக கொண்ட முக்குலத்தோரில் மறவர் குலத்தில் உதித்தவர் பூலித்தேவர். பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இலக்கியமான திங்களூர் நொண்டி நாடகம் , பூலித்தேவர் பற்றியும் கள்ளர்- மறவர் உறவு பற்றியும் கூறுகிறது.

“வல்லாள கண்ட னென் தகப்பன்- அர்க்கும் வலுத்த
அவன் கள்ள மறவர் குலத்தில் உதித்தோன் மாயப் பூனைப்
புலித்தேவன் தம்பி – சின்னான மறவன் வளவில் நாங்கள் உறவு கொண்டாடிக் காயக்கமும் கற்ற சின்னாத்தேவன் – தந்த கண்ணியை கல்யாணம் பண்ணியே கொடுத்தார்”

பகலெத்தி எனும் கள்ளர் குல வீரன்,  பூலித்தேவன் தம்பியான சின்னாத்தேவர் எனும் மறவரை தனது உறவு என்றும்,   அவரது மகளை, பகலெத்தி  திருமணம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பூலித்தேவருக்கு வலது கரமாக விலங்கிய செம்புலி சின்னனஞ்சான்தேவரே இங்கு சின்னாத்தேவன் என குறிப்பிடப்பட்டுள்ளார். சின்னனஞ்சான் தேவரின் சிலை குற்றாலம் ஈஸ்வரன் கோயிலில் உள்ளது.

” நாட்டிலுள்ள கவுண்டர்கள் நாட்டிமை செய்வோரும்
  தண்மையாய்த் தியாகமது தந்து – நல்ல
  தாரமும் பண்ணிக்கோவென்றுத் தாரமுஞ் சொன்னாரே
  வன்மையுள்ள புலித்தேவன் தம்பி- சின்னா
  மறவன் வளவில்நாங்கள் விவாகமது செய்ய
  உறவு கொண்டாடியே வந்து”

புலித்தேவரை மறவர் என்றும்,  அவரது தம்பியான சின்னனஞ்சான்தேவர் வீட்டில் கள்ளமறவர் குலத்தில் உதித்த பகலெத்தி என்பவர் திருமண உறவு கொண்டதை இப்பாடலும் தெரிவிக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கள்ளர் மறவர் இடையே நிலவிய உறவினை மேலே குறிப்பிடப்பபட்ட பாடல்கள் குறிப்பிடுகிறது.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கிறிஸ்தவ மதம் பரப்ப தங்கியிருந்த பாதர் பவுச்சே, மருதுபாண்டியர்கள் காலத்தில் சிவகங்கையில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை தனது நூலான MARUDHA PANDIYAN (The fateful 18th century Pg 43) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Marutha pandiyan ( The fateful 18th century)

இவருடைய 200 வருடங்கள் பழமையான குறிப்பில் ” The various titles agambadiyars have assumed in the marava and elsewhere does not help the disentangle their origins from those of their first cousins the maravars and their next of kin,  the kallars. Ultimately they may prove to be but several clans of common original stock connected by the exogamy”

அகமுடையார்கள் வெவ்வேறு பட்டங்களை சேர்த்து பயன்படுத்தினாலும், அவை மறவர் மற்றும் கள்ளர்களுக்கு அகமுடையார்களோடு உள்ள தொடர்பை மறைக்கவில்லை. இன்று கிளைக்குடிகளாக இம்மூவரும் இருந்தாலும்,  இவர்கள் மூவரும் ஒரே முன்னோரில் இருந்து பிரிந்தவர்களே குறிப்பிட்டுள்ளார்.

Census of india 1891: Madras

கிபி 1891ல் வெளியிடப்பட்ட Census of india 1891 ல்,  கள்ளரின் உட்பிரிவாக மறவரும் அகமுடையாரும்,  மறவரின் உட்பிரிவுகளாக கள்ளர் மற்றும் அகமுடையாரும்,  அகமுடையாரின் உட்பிரிவுகளாக கள்ளர் மற்றும் மறவர் முதலானோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

1896ல் எழுதப்பட்ட Hindu castes and sects எனும் புத்தகத்தில் தமிழகத்தின் போர்க்குடிகளாக கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

காலங்காலமாக புதுக்கோட்டை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் சமஸ்தானங்கள் மண உறவில் இணைந்து இருந்ததற்கு பல சான்றுகள் உள்ளன. இதனையே 1923ல் கள்ளர் சரித்திரம்(பக் 141) எழுதிய நமு வேங்கடசாமி நாட்டார் குறிப்பிட்டு உள்ளார்.

இவற்றின் மூலம் முக்குலத்தோராகிய கள்ளர் மறவர் அகமுடையார் யாவரும் ஒரே மூலத்தில் இருந்து உதித்து பிற்காலத்தில் கிளைகளாக பிரிந்துள்ளனர். இந்த கூற்று வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டதாக உள்ளது.

Article by : www.sambattiyar.com

Total views 2,759 , Views today 3 

Author: admin

2 thoughts on “மரபியல் ஆய்வில் முக்குலத்தோர்

  1. அருமையான தொகுப்பு, பாராட்டுக்கள்.

  2. நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் தொண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *