வெள்ளையரை எதிர்த்து பழிதீர்த்த கள்ளர்கள்( கிபி 1755)

 • கிபி 1755ல் பெப்ரவரி மாதம் ஆங்கில தளபதி கர்னல் ஹரான் மற்றும் நவாப் தென் தமிழக பாளையக்காரர்களிடம் வரி வசூல் பாக்கியை பெற பெரும்படை கொண்டு கிளம்பினர்.மணப்பாறையில் தங்கி, வரி பாக்கியை செலுத்துமாறு பாளையக்காரர்களுக்கு தூது அனுப்பினர். மணப்பாறை அருகில் இருந்த பாளையக்காரரான லட்சி நாயக் என்பவர் வரி செலுத்த வில்லை.யூசுப் கான் மற்றும் ஸ்மித் தலைமையிலான் படை லட்சி நாயக்கை தாக்கியது. லட்சி நாயக் வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.கர்னல் ஹரானிடம் பொறுப்பை ஒப்படைத்து நவாப் திருச்சிராப்பள்ளி திரும்பினார்.
 • 5 மார்ச் 1755ல் யூசுப் கான் தலைமையிலான படை வெள்ளையர் சார்பாக மதுரையை தாக்கியது. மதுரையின் கவர்னர்” மயன்னா” அங்கிருந்து தப்பித்து கோயில்குடி எனும் ஊரில் தஞ்சம் புகுந்தார். கோயில்குடி எனும் ஊரானது மதுரையில் இருந்து 8 கிமீ கிழக்கில் உள்ளது.கர்னல் ஹரான் தலைமையிலான படை மயன்னாவை பிடிக்க கோயில்குடியை தாக்கியது.
 • கோயில்குடியில் கள்ளர்கள் வழிபடும் கோயிலை சூரையாடினர் வெள்ளையர்கள். கோயிலில் இருந்த சிலைகளை கொள்ளை அடித்தனர்.5000 ரூபாய் கொடுத்தால் சிலைகளை திருப்பி தருவதாக கூறிய ஹரான், பணம் தரப்படாததால் சிலைகளை விற்று காசாக்க அங்கிருந்து எடுத்து சென்றான்.அங்கிருந்து மார்ச் 25, 1755 ல் திருநெல்வேலியை அடைந்து பாளையக்காரர்களிடம் வரி வசூலில் ஈடுபட்டான்.
 • 5 மே, 1755 ல் நெற்கட்டாஞ்சேவலை அடைந்து பூலித்தேவரிடம் வரி வசூல் செய்ய முயன்றான் ஹரான். அவரது கோட்டை மீது சில மணி நேரம் பீரங்கி தாக்குதல் நடத்தினான். ஆனால் வெள்ளையரின் ஆயுத பலம் மிகவும் குறைந்திருந்ததை அறிந்திருந்த பூலித்தேவர் எந்த சலனமும் இன்றி இருந்ததால், 20,000 ரூபாய் கொடுத்தால் சென்று விடுகிறோம் என தூது அனுப்பினான் ஹரான். ஆனால் பூலித்தேவர் ஒரு ரூபாய் கூட தர இயலாது என கூறிவிட்டார். ஹரானின் படையினருக்கு தேவையான பொருட்கள் முடியும் நிலையில் இருந்ததால், அவர்கள் அங்கிருந்து பின்வாங்க முடிவு செய்தனர்.20 மே 1755ல், ஹரானின் படை மதுரையை அடைந்தது.

நத்தம் கணவாயில் வெள்ளையர்களை மறித்து தாக்கிய கள்ளர்கள்(29 May 1755)

(Joseph smith’ account of expedition: orme mss india III 608-612 : கள்ளர்களின் தாக்குதலை நேரில் கண்ட கேப்டன் ஜோசப் ஸ்மித் குறிப்புகளில் இருந்து)


மதுரையை அடைந்தவுடன் ஆங்கிலேய படையினர் ஒய்வு எடுத்துக்கொண்டனர். ஜமால் சாகிப் என்பவர் தலைமையில் 1000 சிப்பாய்கள் அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட தயாராயினர். ஆனால் அங்கிருந்து திருச்சிக்கு நேரடியாக செல்லும் பாதை கள்ளர்கள் வாழும் அபாயகரமான பகுதியாதலால், கேப்டன் ஸ்மித் என்பவர் தலைமையில் 100 ஐரோப்பியர்கள், 4 கம்பனி சிப்பாய்கள் மதுரையில் இருந்து 20 கிமீ தொலைவில் (நத்தம் கணவாயின் தெற்கு எல்லையில்) உள்ள வெளிச்சி நத்தம் எனும் கோட்டையை நோக்கி செல்ல திட்டமிட்டனர்.

 • கர்னல் ஹரானுக்கு கிடைத்த உளவு தகவல்படி கள்ளர்கள் நத்தம் கணவாயின் பாதையில் இருந்த மரங்களை வெட்டி தடையை ஏற்படுத்தி இருந்ததை அறிந்தார்.
 • ஹரானுக்கு முன் மதுரை கமாண்டோ செர்ஜியண்ட கௌல்ட்(Sergeant gould) என்பவர் தலைமையில் சென்ற சிப்பாய்கள் அனைவரும் கள்ளர்களால் நத்தம் பகுதியில் கொல்லப்பட்டனர்.
 • 28 May 1755 ல் ஹரான் தலைமையிலான ஆங்கிலப்படை மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
 • காலை 5 மணிக்கு புறப்பட தயாரான வெள்ளையர் படை, பல அணிகளாக பிரிந்து சென்றனர். முதலில் கேப்டன் லின் தலைமையிலான அணி, எந்த பிரச்சனையும் இன்றி நத்தம் கணவாயை கடந்து நத்தம் நகரத்தை அடைந்தனர்.
 • இதன் பின் ( Captain polier) கேப்டன் போலியர் தலைமையில் கம்பனி சிப்பாய்கள், செர்ஜியன்டகள்( ஓரு ராணுவ பதவி) , ஐரோப்பியர்கள் மற்றும் 12 பேர் அடங்கிய அணி நத்தம் கணவாயில் பயணத்தை தொடங்கியது. இவர்களை பின் தொடர்ந்து ராணுவ தளவாடங்கள் கொண்ட வண்டி, 20 ஐரோப்பியர்கள், 2 கம்பனி சிப்பாய்கள் வந்தனர். இதனை தொடர்ந்து மாபூஸ் கானின் யானைகள் மற்றும் ஒட்டகங்கள் தொடர்ந்தன. இதனை தொடர்ந்து 20 ஐரோப்பியர்கள், 200 சிப்பாய்கள் மற்றும் கம்பனி படைகள் கேப்டன் ஸ்மித் தலைமையில் வந்தது.ஹரான் முன்னாள் படைகளை வழிநடத்தி சென்றுகொண்டு இருந்தார். கணவாய் பகுதியில் கள்ளர்களை எதிர்நோக்கி திகிலுடன் சென்றனர் ஆங்கிலேயர்கள்.
 • முன்னால் சென்ற படையினர் மற்றும் தளவாடங்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை.
 • பின்பகுதியில் போர் கருவிகளை கொண்டு சென்ற ஒரு வண்டியின் சக்கரம் குழியில் இறங்கி சிக்கி கொண்டது.தளபதி முன்னாள் சென்ற வண்டிகளை நிறுத்தவில்லை.அந்த வண்டியை பின்தொடர்ந்த வண்டிகள் அனைத்தும் நின்றது.
 • கள்ளர்கள் உளவாளிகள் மூலம் அனைத்து சம்பவங்களையும் கண்காணித்து வந்தனர். தாக்குதலை தொடுக்க உரிய நேரத்திற்காக காத்திருந்தனர்.
 • முன்னாள் சென்ற வண்டிகளுக்கும், பின்னால் குழியில் மாட்டியிருந்த ராணுவ தளவாட வண்டிக்கும் இடையேயான தூரம் 2 மைல்களை அடைந்தவுடன், பின்னால் இருந்த ராணுவ படையை நோக்கி கள்ளர்கள் தாக்க தயாரானார்கள்.
 • கள்ளர்களை கண்டவுடன் ஆங்கிலேய படையினர் சுடத்தொடங்கினர். கள்ளர்கள் தற்காலிகமாக பின்வாங்கினர்.சிறிது நேரம் அமைதி நிலவியது. அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என எண்ணிக்கொண்டிருந்த போது, பெரும் எண்ணிக்கையிலான கள்ளர்கள் அபாயகரமான சத்தம் எழுப்பிக்கொண்டு மற்றொரு புறத்தில் இருந்து தாக்க தொடங்கினர்.
 • ஐரோப்பிய வீரர்கள் திக்குமுக்காடினர். கள்ளர்களின் கையில் நவீன ஆயுதங்கள் கிடைத்துவிடாமல் இருக்க வேண்டும் என எண்ணினர்.
 • ஐரோப்பிய சிப்பாய்கள் சிறிய ரக பீரங்கிகளையும் கொண்டு தாக்கினர். கள்ளர்களும் தொடர்ந்து தாக்கினர்.
 • கள்ளர்கள் (Arrows, matchlocks, spikes, javelines,, rockets) அம்புகள், துப்பாக்கி, வேல் கம்பு, ராக்கெட் முதலிய ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.கள்ளர்களின் மீது செய்யப்பட்ட ஒவ்வொரு தாக்குதலுக்கும் அதே அளவு வீரியத்துடன் அபாயகரமாக சத்தம் எழுப்பிக்கொண்டு பதிலடி கொடுத்தனர்.
 • சிறுது நேரத்தில் கள்ளர்கள் காட்டுக்குள் பின்வாங்கி அங்கிருந்து தாக்குதல் நடத்தினர். பிறகு அங்கிருந்து முன்னேறி ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதியை நோக்கி வந்தனர்.
 • அவற்றை பாதுகாத்து நின்ற சிப்பாய்களை தங்களது ஈட்டி மூலம் பலியிட்டனர்.பீரங்கிகள் இருந்து பகுதியை அடைந்து எதையோ தேடினர். பின்னால் இருந்து மற்றொரு படை கள்ளர்களை தாக்கியது. ஆனாலும் கள்ளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தாக்கினர்.
 • ராணுவ தளவாடங்கள் இருந்த பகுதியில் கள்ளர்கள் எதையோ தேடத்தொடங்கினர். ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். சிறுது நேரத்தில் கள்ளர்களின் குரல் ஒருங்கிணைந்து ஒரே சொல்லை ஒலிக்க ஆரம்பித்தது. ஆம், ” சாமி, சாமி, சாமி” என ஆக்ரோசமாக ஒலி எழுப்பினர். அவர்கள் தேடி வந்தது கோயில்குடியில் ஹரானால் திருடப்பட்ட சாமி சிலைகள்.
 • கள்ளர்களில் சிலர் அங்கிருந்த வண்டியில் இருந்த மூட்டைகளை எடுத்து திறந்து பார்த்தனர். அதில் ஒரு மூட்டையில் சுவாமி சிலைகள் இருந்தது.சாமி சிலைகள் கிடைத்த பின்பு அவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகள் திரும்ப கிடைத்தால் வரும் மகிழ்ச்சியைவிட அதிகம் சந்தோசம் அடைந்தனர்.
 • சாமி சிலைகளை மீட்ட பின்பும் பல மணி நேரம் தொடர் தாக்குதல்கள் கள்ளர்களால் நடத்தப்பட்டது. கேப்டன் ஸ்மீத் உதவி கோரி அனுப்பிய உளவாளிகள் யாரும் திரும்பவில்லை, எந்த படை உதவியும் கிடைக்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது.
 • மாலை 4 மணி அளவில் கள்ளர்களின் தாக்குதல் குறைந்தது. ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் ஆங்கில படையினர் மற்றும் கூலிகளை நோக்கி பாய்ந்தனர் கள்ளர்கள். கையில் சிக்கிய அனைவரையும் கொன்று தீர்த்தனர்.வெள்ளைய தளபதிகளின் குடும்பத்தினர் உறவினர் என அனைவரும் அலறியடித்து ஒடினர். சிப்பாய்களில் வெறும் 30 பேர் மட்டுமே உயிர்தப்பினர்.
 • கேப்டன் ஸ்மீத், கணவாயில் இருந்து பின்வாங்கி காட்டுப்பகுதியில் இருந்து சமவெளி நோக்கி ஆங்கில படையினரை அழைத்து வந்தார்.இதன் பிறகு கள்ளர்களின் தாக்குதல் ஒய்ந்தது. சிறுது நேரம் கழித்து ஸ்மீத் தலைமையிலான படையினர் மரண பயத்துடன் புறப்பட தொடங்கினர்.
 • இரவு நேரம் நெருங்கியதால், முடிந்த அளவு ஆயுதங்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு வேகமாக ஒடினர் ஆங்கிலேயர்கள்.முன்னாள் சென்றிருந்த படைப்பிரிவினருடன் இணைந்து ஸ்மீத் தலைமையில் படையினர் வேகமாக நகர்ந்தனர். கடுமையான சூரிய வெப்பத்தால் வெள்ளையர்கள் சோர்ந்திருந்தனர்.அடுத்த நாள் காலை நத்தம் நகரத்தை அடைந்து அங்கிருந்து திருச்சி நோக்கி தப்பினோம் பிழைத்தோம் என ஒடினார்கள்.

தமிழத்தில் வரிவசூல் செய்ய வந்த வெள்ளையர்கள் பூலித்தேவரிடம் வரி வசூல் பாக்கியை கேட்டுவிட்டு திருச்சி செல்லும் வழியில் கள்ளர்களால் மிகப்பெரும் தாக்குதலுக்கு உட்பட்டு சிதறி ஒடினர். இந்தியாவில் வரி வசூல் செய்ய வந்த வெள்ளையரை, முதன்முதலாக தாக்கி, படையை சிதறடித்து, மரண பயத்தை காட்டிய மன்னர் (அ) குறுநில மன்னர் தலைமையில்லாத சாதாரண இனக்குழு கள்ளர்களே!!!!
( orme millitary transactions in hindoostan vol 1 :p(390-394)
(Yusuf khan the rebel commendant p 41-43)

தொகுப்பு:- www.sambattiyar.com

Total views 1,806 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *