‘நினைக்கும்போதே வணங்கத் தூண்டும் மகா உத்தமத் தலைவர் பசும்பொன் தேவர் அவர்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதுமில்லை. உண்டாக்கப் போவதுமில்லை.’
– முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
‘ஸ்ரீ தேவர், எனக்கு அறிமுகமாகி பல வருடங்களாகின்றன. அதன் பின்னர் அவரும் நானும் எங்கெங்கோ இருந்தோம். ஆனால், நான் எங்கிருந்தாலும் அவர் என் நெஞ்சைவிட்டு நீங்கியதே இல்லை.’
-முன்னாள் சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி
‘ஜீவா, பி. ராமமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகிய தலைவர்களும் சிறந்த பேச்சாளர்கள்தான். இருப்பினும், அப்போதிருந்த அனைத்துத் தலைவர்களிலும் இனிமை மிகு, வேக மிகு பேச்சு தேவரின் பேச்சுதான்.’
– கம்யூனிஸ்ட் தலைவர் ஐ. மாயாண்டி பாரதி.
முத்துராமலிங்க தேவரது உடல் தோற்றம், கம்பீரமான வெண்கலக் குரல், சந்தன நிறம், தொடக்கத்தில் சிங்க மீசை ஆகியவற்றோடு மேடைகளில் தோன்றி, வாய் திறந்து செந்தமிழில் முழங்கி முடிக்கிறபோது, கோழையும் வீரனாகித் திரும்புவான்.
– கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன்
‘தேவரிடம் இருந்த பேச்சு வன்மைதான் அவருக்குத் துணிவைக் கொடுத்ததா? அல்லது இயற்கையிலேயே அவரிடம் இருந்த தைரியம்தான் அவருக்கு நாவன்மையைக் கொடுத்ததா? தேவரைப் பொறுத்தவரை இது ஒரு புதிர்தான்.’
– எஸ். எஸ். ராஜேந்திரன் (முன்னாள் எம்.எல்.ஏ.)
‘தேவர் சமூகத்தினர் இந்தியாவின் வேறு எந்தச் சமூகத்துக்கும் வீரத்தில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை மெய்ப்பித்தவர் பசும்பொன் தேவர்.’
– கவியோகி சுத்தானந்த பாரதியார்
‘காங்கிரஸ் கட்சியில், தீண்டாமை ஒழிப்பில் மிகவும் வேகமாகச் செயல்பட்டமைக்காக காந்திஜியால் பாராட்டப்பட்டவர் தேவர். எனவே, அவரைச் சாதியக் கண் கொண்டு பேசுவது சரியல்ல. அது அரசியல் உள்நோக்கம் கொண்டது.’
– கம்யூனிஸ்ட் தலைவர் கே.டி.கே. தங்கமணி
‘விவேகம் அற்ற வீரம், முரட்டுத்தனம்; வீரம் அற்ற விவேகம் கோழைத்தனம் என்று முழங்கியதோடு மட்டுமின்றி, நடைமுறைப்படுத்தியும் காட்டியவர் தேவர்.’
– செல்வி. ஜெ. ஜெயலலிதா, முன்னாள் தமிழக முதல்வர்
‘முத்துராமலிங்கம் என்ற பெயரே இரண்டு தத்துவங்களை வெளியிடுகிறது. வெள்ளையனை எதிர்த்து வீரம் விளைவித்த வடுகநாதரைப் பற்றிக் கூறினார்கள். அவரது முழுப் பெயர் முத்து வடுகநாதர்! ‘முத்து’ என்ற பெயரைக் கொண்டதன் மூலம் தேவர் அந்த வீரத்தைப் பிரதிபலிப்பவராக இருந்தார். ‘ராமலிங்கம்’ என்பது அமைதியைக் குறிக்கும் தத்துவப் பெயராக விளங்கியது.’
– தமிழக முதல்வர் மு. கருணாநிதி
‘சீர்முத்து ராமலிங்க தேவர் பெருமைதனை பாரும் விசும்பும் பணிந்தறியும் ஆரும் அவருக்கு இணையில்லை அன்பு வடிவாய் உவகையுடன் வாழ்ந்தார் உயர்ந்து.’
– கிருபானந்த வாரியார்
‘தேவர் அடிக்கடி சொல்வார் அழகாக. ‘திருடிவிட்டு ஜெயிலுக்குப் போகிறவனுக்கு திருடன் என்று பெயர். ஜெயிலுக்குப் போய்விட்டு வந்து திருடுகிறவன் அரசியல்வாதி’ – எம். கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.
www.sambattiyar.com
Total views 1,516 , Views today 1