பட்டு மழவரும் பட்டுக்கோட்டையும்

பட்டுக்கோட்டை , தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். பட்டுக்கோட்டையில் பல பாரம்பரியமிக்க கோயில்களும் சுற்றுலாத் தளங்களும் உள்ளன. சோழ நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஊர்களில், பட்டுக்கோட்டை மிக முக்கிய ஊராக உள்ளது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் , பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர், பட்டுக்கோட்டை நகரசபைக்கு இரண்டு முறை தலைவராக இருந்த விஸ்வநாதன் சேர்வைக்கார்ர், முதலிய பல சான்றோர்களை உலகிற்கு தந்தது பட்டுக்கோட்டை. பட்டுக்கோட்டை எனும் பெயர் எவ்வாறு தோன்றியது குறித்து வரலாற்று ஆதாரங்களோடு அலசுவோம்.

பட்டுக்கோட்டை தாலுகா ஆபீசில் கிடைத்த கிபி 1684 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டில் ” பட்டுக்கோட்டை” எனும் பெயர் முதன் முதலாக பயின்று வருகிறது.தஞ்சை மன்னர் ஷாஜி என்பவர் கிபி 1684 ல் கள்ளர்கள் வாழும் பட்டுக்கோட்டை வரை உள்ள பகுதிகளை கைப்பற்றியதாகவும் , இந்த வெற்றியின் அடையாளமாக பட்டுக்கோட்டையில் ஒரு கல்கோட்டையை மராட்டிய தளபதி வானாஜி பண்டிதர் என்பவர் கட்டியதாகவும் கல்வெட்டு கூறுகிறது.

இதே நிகழ்வை குறிப்பிடும் தஞ்சை மராத்தியர் மோடி ஆவணம் தொகுதி ஒன்றில், தஞ்சை மன்னர் தென்தேசத்தில் படையெடுத்து பட்டுக்கோட்டை பகுதிகளை கைப்பற்றிய பின் அப்பக்கத்தில் வாழ்ந்த கள்ளர்களோடு மோதல்கள் தொடர்ந்ததால்,  கள்ளர்களுக்கு பாளையப்பட்டுகளை உருவாக்கியதாக குறிப்பிடுகிறது. இதே போல பல மோடி ஆவணங்களில் ” பட்டுக்கோட்டை சுபா கள்ளப்பற்று” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள்
தஞ்சை மராத்தியர் மோடி ஆவணங்கள்

இதன் மூலம் 1686 க்கு முன்பே பட்டுக்கோட்டை எனும் பெயர் உபயோகத்தில் இருந்ததை அறியலாம். அக்காலத்தில் இப்பகுதியில் பட்டு மழவராயர் எனும் கள்ளர் குல தலைவன் வாழ்ந்ததாகவும் ,  அவரால் கட்டப்பட்ட கோட்டை பட்டுக்கோட்டை என பெயர் பெற்றதாக Tanjore gazetter எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tanjore gazetter 1906

பட்டு மழவராயர் பற்றிய குறிப்புகள்,  ” சேந்தங்குடி ஜமீன்தார்கள் வரலாறு” எனும் நூலில் கிடைக்கிறது. அந்நூலில் ” பாங்கான கள்ளர் குல மழவராயன், பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன் ” மற்றும் “பட்டுக்கோட்டை இந்திர குல மழவராயர்”  என்றெல்லாம் பட்டு மழவராயர் , பட்டுக்கோட்டையின் ஆட்சியாளராக குறிப்பிடப்படுகிறார்.

இன்றைய பட்டுக்கோட்டை பகுதியில் பட்டு மழவராயன் என்பவர் ஆட்சி செய்தபோது, அவரால் கோட்டை கட்டப்பட்டு ” பட்டு மழவராயர் கோட்டை” என அழைக்கப்பட்டு பிற்காலத்தில் அதுவே பட்டுக்கோட்டை என திரிந்தது. தமிழகத்தில் இதுபோல ஆதானக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பாச்சிக்கோட்டை,  கண்டர்க்கோட்டை, வீரையன்கோட்டை, துறையாண்டார்க்கோட்டை  என கோட்டையை மையப்படுத்தி உண்டான ஊர் பெயர்கள் ஏராளம். பட்டுகோட்டை எனும் பெயர் உள்ளவரை பட்டு மழவராயரின் புகழ் தொடரும்..

Article by : www.sambattiyar.com

Total views 3,380 , Views today 1 

Author: admin

2 thoughts on “பட்டு மழவரும் பட்டுக்கோட்டையும்

  1. நனி நன்று நன்றாக உள்ளது அருமை அருமையிலும் அருமை

  2. I was suggested this web site by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my problem. You are amazing! Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *