- கிபி 1801 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்ட தெற்கு சீமை தமிழ் வீரர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை தேடிப் பிடித்து தண்டனைகள் வழங்கியது வெள்ளையர் அரசு. மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் தூக்கிலடப் பட்டனர்.
- 1801, அக்டோபர் மாதம் ப்ளாக்பர்ன் ஆணைக்கு ஏற்ப ஆங்கில தளபதி இன்னஸ் திண்டுக்கல் மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினான். அதில் 773 போராளிகள் கைது செய்யப்பட்டு கொடுமையான சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரில் பலர் ஆனைமலைப்பகுதி காடுகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தனர்.
- ஜீலை மாதம் போராளி இயக்கத்திற்கு உதவியதற்காக காவல்காரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்டனர். அவர்கள்:-ஆதிச்சநல்லூரை சேர்ந்த நாகமுத்து, மழவராயன் நத்தத்தை சேர்ந்த குமாரசாமி, கொரளி முத்து மற்றும் மாணிக்கப்பெருமாள். ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பூவாரி பெருமாள் தேவன், ஆத்தூரை சேர்ந்த மாரச்சாமி தேவன், முத்துத்தேவன், சிவனான்டி முதலானோர்.
- நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்ட போராளிகளான, ஜல்லிப்பட்டியை சேர்ந்த கோபால நாயக்கர் மற்றும் இவரது மகன் முத்து வெள்ளை நாயக்கர் திண்டுக்கல்லில் தூக்கிலடப்பட்டனர்.
- டிசம்பர் 3 ஆம் தேதி ஆங்கிலேயன் இன்னஸ் என்பவனால் கைது செய்யப்பட்ட மேலும்15 போராளிகள் திண்டுக்கல்லில் தூக்கில் இடப்பட்டனர்.
- டிசம்பர் மாதம் தஞ்சையை சேர்ந்த போராளிகளான ஞானமுத்து மற்றும் வீரப்பன் ஆகிய இருவர் கடுமையான சிறை தண்டனைக்கு ஆளானார்கள். அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டது.500 சாட்டையடி தண்டனை வழங்கப்பட்டது. தஞ்சையை சேர்ந்த மற்ற இரு போராளி தலைவர்களான சிவஞானம் கோமேரியிலும், உடையன்னன் என்பவர் திருச்சுழியிலும் தூக்கிலடப்பட்டனர்.
- டிசம்பர் மாதம் போராளி குழுக்களின் முக்கிய தலைவர்களான கள்ளர் நாட்டுத்தலைவன் சேதுபதியும், இராம்நாட்டை சேர்ந்த கனக சபாபதி தேவரும் அபிராமத்தில் தூக்கிலப்பட்டனர்.
- கடலக்குடியை சேர்ந்த குஞ்சல நாயக்கர் என்பவர் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தூக்கிலப்பட்டார்.
- அக்டோபர் 17 ஆம் தேதி ,கள்ளர் நாட்டுத்தலைவன் சண்முகாபதி கள்ளர் நாட்டிலேயே தூக்கிலடப்பட்டார்.
*அக்டோபர் 24, வெள்ளை மருது, சின்ன மருது, செவத்த தம்பி, முத்துசாமி மற்றும் முத்துகருப்பத்தேவர் ஆகியோர் திருப்பத்தூர் பழைய கோட்டையில் தூக்கிலப்பட்டனர்.
- நவம்பர் 16 ல், திண்டுக்கல்லை சேர்ந்த செவத்தையா பாஞ்சாலம்குறிச்சியின் பாழடைந்த கோட்டை வாயிலில் தூக்கிலிடப்பட்டார்.
மலேசிய நாட்டின் பினாங் தீவுக்கு நாடுகடத்தப்பட்ட போராளி குழுக்களின் முக்கிய தலைவர்கள்(73 பேர்)

1)வேங்க பெரிய உடையத்தேவர் ( சிவகங்கை அரச)
2) துரைசாமி ( மருது பாண்டியரின் மகன்)
3)வாராப்பூர் பொம்ம நாயக்கர்
4)ஜகன் நாத ஐயர்( இராம்நாடு)
5)ஆண்டியப்ப தேவர் ( ஆனையூர் நாட்டு கள்ளர் தலைவர்)
6) சடமாயன் ( ஆனையூர் நாட்டு கள்ளர் தலைவர்)
7) கோனிமாய தேவர் ( ஆனையூர் நாட்டு கள்ளர் தலைவர்)
8)தளவாய் குமாரசாமி நாயக்கர் ( பாஞ்சாலங்குறிச்சி)
9)குமாரத்தேவர் ( மேலூர்)
10)பாண்டியன்( பாண்டியப்புதூர்)
11)சாமி (மணக்காடு)
12) இராமசாமி
13)இருளப்ப தேவர் ( நாங்குனேரி)
14) பாண்டிய நாயக்கர்( கொம்படி)
15)மாயுட தேவன்( நாங்குனேரி)
16) மலைமாடன்( களக்காடு)
17)சின்னபிச்சத் தேவன்( களக்காடு)
18) வீரப்பெருமாள் தேவன்( களக்காடு)
19) வீரப்பாண்டிய தேவன்( களக்காடு)
20) முத்துவீரன்(அரங்குளம்)
21)கருப்பத்தேவன்( களக்காடு)
22)சுலைமணி( களக்காடு)
23)நந்த சாமி( களக்காடு)
24) பெருமாள்( களக்காடு)
25)உடைத்தேவன்( களக்காடு)
26)பிச்சநாயக்கன்( களக்காடு)
27)முத்துராமத்தேவன்(நாங்குனேரி)
28)மண்டத்தேவன்(நாங்குனேரி)
29)பேயன்(நாங்குனேரி)
30)அழகநம்பி(நாங்குனேரி)
31)வைகுந்த தேவன்(நாங்குனேரி)
32)சிறியண்ண தேவன்(நாங்குனேரி)
33)கோனியாள்(நாங்குனேரி)
34)முள்ளுவடவன்(நாங்குனேரி)
35)சந்தானம்(நாங்குனேரி)
36)வீரபத்ரன்(நாங்குனேரி)
37)சிலம்பன்(நாங்குனேரி)
38)பேயன்(நாங்குனேரி)
39)இராமசாமி(நாங்குனேரி)
40)இருளப்பன்(நாங்குனேரி)
41)குமாரசாமி(நாங்குனேரி)
42)வீர பாண்டியன்(நாங்குனேரி)
43)உடையன்னன்(நாங்குனேரி)
44)முத்துராவுக்(நாங்குனேரி)
45)முத்துராவுக்(அனக்குளம்)
46)சொக்கு தவைவன்(திருக்கர்ணகுடி)
47)இருளப்ப தேவன்
48)மல்லய நாயக்கன்(ஏலம்பட்டி)
49)வெங்கட்ராயன்( நாங்குனேரி)
50)சுலவமணி நாயக்கன்(கட்டநாயக்கபட்டி)
51)தும்மச்சி நாயக்கர்
52)சூலமணி நாயக்கர்(ஆதினூர்)
53)இராமசாமி(குளத்தூர்)
54)பிச்சாண்டி நாயக்கர்(எருவப்புரம்)
55)தளவாய்(கல்லுமடம்)
56)சின்னமாடன்(பசுவந்தனை)
57)வைத்தியமூர்த்தி(கண்டீஸ்வரம்)
58)தளவாய் பிள்ளை(தேசகாவல் மணியக்காரர்)
59)சுலவமணியன்
60)பெத்தன்ன நாயக்கர்( தூத்துகுடி)
61)கிருஷ்ணம்ம நாயக்கர்
62) வவுலன்(குளத்தூர்)
63)மயிலனன்(அரச்சேரி)
64)வயிலமுத்து(கங்கரையகுறிச்சி)
65)ரமணன்
66)பாலைய நாயக்கர்(சூரங்குடி)
67)குமரன்
68)வெள்ளிய கொண்டான்(திண்டுக்கல்)
69)இரமணன்(திண்டுக்கல்)
70)அழகு சொக்கு(திண்டுக்கல்)
71)சேக் உசைன்(திண்டுக்கல்)
72)அப்ப நாயக்கர்(திண்டுக்கல்)
73)குப்பண்ண பிள்ளை(திண்டுக்கல்)
தாய் நாட்டு காக்க, தங்களது அமைதியான வாழ்வை தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம்
(Details:South indian rebellion : rajayyan: british war records)
Article by: www.sambattiyar.com
Total views 1,824 , Views today 1
இதில் வரும் நாங்குநேரி ஆறுபங்கு நாட்டார் அனைவரும் எனது தாய் வழி நேரடி உறவுகள்.