இன்று தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் ராசாளியார் எனும் கள்ளர் வம்சத்தினர் பரவி வாழ்ந்து வருகின்றனர். பெரும் வள்ளல், புலவர்களின் புரவலர், கரந்தை தமிழ் சங்கத்தின் முதன்மை ஆதரிப்பாளர் என பல பெருமைகளுக்கு சொந்தக் காரரான வள்ளல் வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியார் போன்ற பல சான்றோர்கள் ராசாளியார் வம்சத்தில் உதித்தவர்களே. ராசாளியார் எனும் பட்டத்தின் வேர் சோழ மன்னர்களின் போர் வியூகத்தோடு நேரடி தொடர்புடையதாக உள்ளது….
ராசாளி வியூகம்


கிபி 9 ஆம் நூற்றாண்டில் விஜயாலய சோழத்தேவர் பயன்படுத்த தொடங்கிய போர் யுக்திகளில் ஒன்றாக ராசாளி வியூகம் உள்ளது.
ராஜாளி கழுகுகின் குணமானது, தன்னுடைய இரை எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அதனை துல்லியமாக பின் தொடரக்கூடியது. இரையை ஒடவிட்டு களைப்படையச் செய்து பிறகு கொடூரமாக தாக்கி இரையை அழிக்கும்.
இந்த வியூகத்தின் வெளிவட்டம் முழுவதும் காலாட்படை இருப்பார்கள். கையில் வில் , வாள் மற்றும் எதிரிகளின் முன்பிருப்போர் கையில் கேடயத்தையும் கொண்டிருப்பார்கள்.
அலகின் முன்னே ஒரு தளபதி, ராசாளியின் கண்களாய் இரு தளபதிகள் தேருடன் இருப்பார்கள். கழுத்துப் பகுதியில் யானைப்படை, பின்பு சிறகின் தோற்றம் முழுமையும் காலாட்படை, ராஜாளியின் இதயம் மற்றும் சிறகின் உட்பகுதி முழுமையும் அணிவகுத்தப்படி விற்படை வீரர்கள், அதன்பின் புரவிப்படை, அதன்பின் மீண்டும் வாளேந்திய காலாட்படை வீரர்கள் என ராஜாளியின் வடிவத்தில் நிற்றல் வேண்டும். இதில் இரண்ய படை வீரர்கள் படையின் முன்பக்க கேடயமாகவும், பின் பகுதியில் அடிவரிசை வீரர்களும் பாதுகாப்பாக நிற்பார்கள்.
இவ்வூகத்தின் பலனாக ராசாளி பறவை போன்ற வடிவுடன் சோழர்களின் பெரும்படை எதிரிகளை வதம் செய்துள்ளனர்.
இத்தகைய போர் வீயூகத்தில் சிறந்து விளங்கிய தளபதிகள் ராசாளியார் எனும் பட்டம் பெற்று இன்றும் புகழுக்குரிய ராசாளியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராசாளிகுடிகாடு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராசாளிவிடுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராசாளிப்பட்டி முதலிய ஊர்களின் பெயர்கள் இன்னோர் பட்ட பெயர்களாலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசாளி வியூகம் பற்றிய அரிய தகவல்களை தன் முன்னோர் வழி அறிந்து தன்னுடைய நூலான சாளுக்கியத்தில் பதிவு செய்த , பழுவேட்டரையர்கள் குல இளவல், ஐயா. Vikrama karna Pazhuvettarayar அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
சோழர்களைப் பற்றிய இன்னும் பல அரிய தகவல்கள் ” சாளுக்கியம்” எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
Article by: www.sambattiyar.com
Total views 1,985 , Views today 1