ராஜராஜசோழன் கள்ளர் மரபை சேர்ந்தவரா?

தமிழர்கள் அனைவரும் என்றென்றைக்கும் பெருமைக்கொள்ளும் வகையில் இந்தியாவில் வேறெந்த மன்னரும் செய்யாத சாதனைகளை செய்து தெற்காசியா முழுவதும் புலிக்கொடி பறக்க அடிக்கோலிட்டவர் ஸ்ரீ ராஜராஜதேவர்.

தமிழகத்தை நாகரிகத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற அருள்மொழித்தேவர் எனும் ராசராசதேவர் தமிழர்கள் அனைவருக்கும் உரியவர்.

ராசராசத்தேவரை இவ்வுலகிற்கு ஈந்த பேரினம் பண்டைய தமிழ் போர்க்குடிகளான முக்குலத்தோர் என்பதனை பல வரலாற்று சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

சங்ககால இலக்கியங்கள் முதல் சென்ற நூற்றாண்டு வரையிலான வரலாற்று சான்றுகளும்,  தஞ்சையில் வாழும் மக்களின் வாழ்வியல் சான்றுகளும் ராசராசத்தேவரின் குடி பற்றிய தகவலை நமக்கு உணர்த்துகின்றன.

முக்குலத்து கள்ளர் குலத்தில் உதித்த பல அரச குடிகளில் ஒன்றே சோழர் குடியென உணர்த்தும் சான்றுகளை ரத்தின சுருக்கமாக காண்போம்.

👉 சோழர்கள் எனு பெயரின் மூலமே கள்வர் இனத்தை குறிக்கும் சோரா–>> சோழா எனும் வார்த்தையை மூலமாக கொண்டு உருவாகியதாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட “சோழர்கள்” எனும் வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( ஆதாரம்:- சோழர்கள்-K.A.N சாஸ்திரி பக்கம் 35)

👉 கிபி 1 ஆம் நூற்றாண்டில் எகிப்தில் இருந்து தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்ட தாலமி என்பவர், தனது பயணக் குறிப்புகளில் உறையூர் “Sornagas” எனும் சோர நாகர்கள் ஆட்சி செய்தததாக குறிப்பிட்டுள்ளார்.  சோரா எனும் சொல் கள்வர் என பொருள்படும் என சேந்தன் திவாகரம் நூல் கூறுகிறது.(ஆதாரம்:- Ashoka and his inscriptions vol 1 1946: பக் 141)

👉 சோழர்கள் தங்களை நாகர் வம்சத்தின் கிளையினர் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.இதையே சோரநாகர் என தாலமி குறிப்பிட்டுள்ளார். இன்றும் தென் தமிழகத்தில் வாழும் கள்ளர் மறவர் மற்றும் அகமுடையார்களே நாகரின் வழியினர் என வாழ்வியல் சான்றுகளைக் கொண்டு நீரூபிக்கப்பட்டுள்ளது ( ஆதாரம்:- Trichinopoly gazetter பக் 120)

👉 சோழ நாகர்கள் மணிமேகலையில்(24-164)  தங்களை ” ஆயிழை இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்தோர்” என தங்களை இந்திர குலம் என குறிப்பிட்டுள்ளனர். மணிமேகலையில் சோழ மன்னன் கிள்ளிவளவன் “இந்திர திருவன்” என இந்திரனாகவே குறிப்பிடப்பட்டுள்ளார்.(மணிமேகலை 19-115)

👉 சோழ மன்னர்களும் தங்களை இந்திர வம்சமாகவே அடையாளப் படுத்தியுள்ளனர். இந்திரனை தங்களது முழுமுதற்கடவுளாக கொண்டு இந்திர விழாவினை விமர்சையாக கொண்டாடியுள்ளனர். கிபி 922 ல் வெளியிடப்பட்ட பராந்தக சோழனின் வேளஞ்சேரி செப்பேட்டில் ” சோழ இந்திரர்கள் வம்சம் ” என தங்களை குறிப்பிட்டுள்ளனர். சித்திரன் எனும் சோழ மன்னன் தன்னுடைய கொடியில் புலிக்கு பதிலாக இந்திரனை பயன்படுத்தியுள்ளார். ( கலிங்கத்துப்பரணி-இராச பாரம்பரியம் -186)

👉 முதலாம் ராஜராஜதேவரும் தன்னுடைய மெய்க்கீர்த்தியில் ” செந்திரு மடந்தைமன் சீராஜராஜன் இந்திர சமானன்” என தன்னை இந்திரனாக குறிப்பிட்டுள்ளார்(SII vol 7 -863). ராசராசன் வழிவந்த கள்ளர்களும்  இந்திர குல அரையர்கள்,  இந்திர வம்சம் என குறிப்பிடப்பட்டுள்ளனர். (ஆதாரம்:- நாஞ்சியூர் செப்பேடு / ராமசாமித் தொண்டைமான் கிபி 1734)

👉 இந்திரன் தேவர்களின் தலைவனாக சிலப்பதிகாரத்தில் ” தேவர்கோன் பூணாரம் ” என குறிப்பிடப்படுகிறார். இந்திரன் குலமான நாகர்கள் வழிவந்த சோழர்களும் தங்களை தேவர் என்றே குறித்துக் கொண்டனர். ராசராசசோழனும் தனது மெய்க்கீர்த்தியில் தன்னை ‘ ராசராசதேவர் ‘ என்றே குறித்துள்ளார்.(ஆதாரம்:- சோழர் மெயக்கீர்த்திகள்- பிற்கால சோழர் வரலாறு)

👉 சோழ மன்னர் சுந்தர சோழன் காஞ்சிபுyரத்தில் உள்ள தனது பொன் மாளிகையில் இறந்ததால், இவன் “பொன்மாளிகை துஞ்சின தேவர்” என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார். கண்டராதித்த சோழன் கல்வெட்டுகளில் ” மேற்கெழுந்தருளிய தேவர்” என குறிப்பிடப்படுகிறார். சோழ மன்னன் அரிஞ்சய சோழன் ” ஆற்றூர் துஞ்சின தேவர் ” என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்.( சோழர்கள் : நீலகண்ட சாஸ்திரி : பக் 211)/ பிற்கால சோழர் சரித்திரம் பண்டாரத்தார் பக் 67/69)

👉 ராசராசசோழன் வழிவந்த முக்குலத்தோரும் பல நூறு பட்டங்களோடு தேவர் எனும் பட்டத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.கிபி 15 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை நிலத்தரசு செப்பேடுகளில் கள்ளர் படைத்தலைவர்களில் சோழங்கதேவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். சோழநாட்டில் பாப்பாநாட்டு பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் தங்களை விஜயத்தேவர் என்று குறிப்பிட்டுள்ளனர். சோழநாட்டின் பெரும் நிலக்கிழார்களான உக்கடை ஜமீன்களும் தங்களை உக்கடைத்தேவர் என்றே குறிப்பிட்டுள்ளனர். ( ஆதாரம் :- புதுக்கோட்டை நிலத்தரசு செப்பேடுகள், திருப்பனந்தாள் காசிமட செப்பேடுகள்)

👉  ராஜராஜதேவர் தன்னுடைய லெய்டன் செப்பேட்டில் தங்களை காசியபர் வழியினர் என்று குறிப்பிட்டுள்ளனர். ராசராசசோழன் வழிவந்த கள்ளர் இன மன்னர்களான புதுக்கோட்டை தொண்டைமான்கள் மற்றும் அறந்தாங்கி தொண்டைமான்களும் தங்களை காசியபர் வழியினர் என செப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.( ஆதாரம் :- தொண்டைமான் செப்பேடுகள்: தமிழ் பல்கலைக்கழகம்)

👉 சங்க இலக்கியங்களில் தொண்டையன் என போற்றப்பட்ட கள்வர் கோமான் புல்லியின் வழிவந்த இளந்திரையன் தொண்டைமான் தன்னை “தொண்டையர் வம்சத்தவர் என்றும் மூவேந்தரிலும் சிறந்தவரான சோழன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.( ஆதாரம்: பெரும்பாணாற்றுப்படை 450 / குறுந்தொகை 260)

👉 சோழ மன்னருக்கும் – நாக இளவரசியான பீலிவளைக்கும் பிறந்த சோழர்குடி மன்னரே தொண்டைமான் இளந்திரையன் ஆவார். தொண்டைமான் வம்சத்தினர் அனைவரும் சோழர் வழிவந்தவர்கள்.( ஆதாரம்: பல்லவர் வரலாறு : ம ராசமாணிக்கனார் பக் 26)

👉 சோழர் வழிவந்த கள்ளர் குல அறந்தாங்கி தொண்டைமான்களும் தங்களது செப்பேடுகளில் சோழ ராசா மரபினர் , காசிபர் வழியினன்,  சூரிய குலத்து வள்ளல், திரையன் தொண்டைமான் வம்சத்தவன்,  இந்திரன் அருள் பெற்று பிறந்தவன்,  புலிக்கொடி கொண்டோன் என்று தங்களது முன்னோரை குறிப்பிடுகின்றனர். புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் தங்களை ”  புலிக்கொடியும் உள்ளோன், இந்திர குலநேயன், காசிபர் வழியினன் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்.( ஆதாரம் : பெருவயல் செப்பேடு / அறந்தாங்கி தொண்டைமான்கள் வரலாறு / குன்றக்குடி நொண்டி நாடகம்)

👉 தங்களை சோழ மரபினன் ,புலிக்கொடி கொண்டோர், இந்திர வம்சம் என்றெல்லாம் குறிப்பிட்ட புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி தொண்டைமான்கள் கள்ளர் மரபினர் ஆவர் ( ஆதாரம் : அறந்தாங்கி தொண்டைமான்கள் பக் 4. உலக தமிழாராய்ச்சி நிறுவனம்/ தொண்டைமான் செப்பேடுகள்  பக் 2 : தமிழ் பல்கலைக்கழகம்/ புதுக்கோட்டை மாவட்ட வரலாறு பக் 84. தமிழக அரசு வெளியீடு

👉 சோழர் வழிவந்த கள்ளர் குல அறந்தாங்கி தொண்டைமான்கள் தற்போது பாலையவனத்தின் ஜமீன்தார்களாக உள்ளனர். இவர்களும் தங்களை சூரிய குலத்தினர் என்று குறிப்பிடுகின்றனர்.( General history of pudukkottai state 1916 பக் 86)

👉 சங்க இலக்கியங்களில் வேங்கட மலையாண்ட தொண்டைர் மன்னனான புல்லி கள்ளர் கோமான் என குறிப்பிடப்படுகிறார்(அகம் 61). இவர் இளையர் பெருமகன் என்றும் குறிப்பிடப்படுகிறார்(அகம் 83).

👉  அகநானூறு பாடல் 342ல் , கள்வர் பெருமகன் தென்னன் என்றும் ஏவல் இளையர் தலைவன் என்றும் பாண்டிய மன்னரை மதுரை கணக்காயனார் பாடுகிறார்.  அகநானூறு பாடல் 338 ல்,  பசுக்கூட்டத்தை கவர்ந்து வரும் இளையர்களின் தலைமகன் சோழன் என மதுரை கணக்காயனார் பாடுகிறார்.
சங்க இலக்கியங்களில் வெட்சிப்போர் புரியும் வீரர்கள் இளையர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.   அத்தகைய இளையர்கள் கள்வர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இளையராகிய கள்ளர்களின் தலைவன் சோழ மன்னன் என அகநானூறு பாடல்களில் மதுரை கணக்காயனார் பாடுகிறார். சங்க இலக்கியங்களில் போர்வீரர்களான இளையர் என குறிப்பிடப்பட்டவர்கள் கள்ளர் மற்றும் மறவர் மட்டுமே.

👉 அகநானூறு பாடல் 342ல் பாண்டிய மன்னர் ” கள்வர் பெருமகன் ” என கள்ளர் தலைவராக போற்றப்படுகிறார். பாரத அரி வம்சம் எனும் பழமையான நூலில் பாண்டியரின் வழிவந்தவர்களே சோழர் என கூறப்பட்டுள்ளது.  பாண்டியர் சோழர் என அனைவரும் பழமையான போர்குடிகளான கள்ளமறவர்கள் என இது உணர்த்தும்.

👉 சோழ மன்னர்களோடு மிகவும் நெருக்கமான மண உறவில் இருந்த மேலைக்கங்கர்கள் தங்களை கள்ளரசியனான கங்கரையர் என்றும்,   கொங்கரையர் கள்ளப்பெருமானார் என்றும் தங்களது கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.( ஆதாரம் :- கல்வெட்டு 146/2014/ காஞ்சிபுரம் களத்தூர் கல்வெட்டு)

👉  கொடும்பாளூரை ஆட்சி செய்த வேளிர்கள் கல்வெட்டுகளில் தங்களை ” கள்ளன் ஆச்சப்பிடாரி” ” கள்ளன் ஆதிச்சப்பிடாரி ” என குறிப்பிட்டுள்ளனர்.(கல்வெட்டு எண் 140/1928)/ SII vol 7-975). இந்த கல்வெட்டுகளின் அடிப்படையில் கொடும்பாளூர் வேளிர்கள் கள்ளர் மரபினர் என Indian council of historical research வெளியிட்ட The colas(pg 150) எனும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉 கொடும்பாளூர் வேளிர்கள் “ஆதித்தன் புகழ் மரபிற் குடி முதலோன் “என இடங்கழி நாயனார் புராணம் மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  இதன் பொருள் தில்லைக்கு பொன் வேய்ந்த ஆதித்த சோழர் பிறந்த குடியின் முதன்மையானவன் என கொடும்பாளூர் அரசர் குறிப்பிடப்படுகிறார்.  சோழரும் இருக்குவேளிரும் ஒரே குடியினர் என இப்பாடல் உணர்த்துகிறது.( ஆதாரம்: Epigraphica indica vol 30: page 246/ இந்திய தொல்லியல் துறை).சோழர்களும் இருக்குவேளிரும் உதிரத்தாலும் உறவாலும் இணைந்து பல நூற்றாண்டுகள் ஒரே குடும்பமாக இருந்து வந்தனர்.

👉 பாண்டிய மன்னர் ” கள்வர் பெருமகன் ” என போற்றப்படுகிறார்.  இதேப்போல சேர அரசனான கோக்கண்டன் இரவி தன்னுடைய கல்வெட்டில் ” கள்வனான கோக்கண்டன் இரவி ” என குறிப்பிட்டுள்ளார்[Ep ind vol 38).  கோக்கண்டன் இரவி கள்ளர் மரபினர் என தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட ‘ களப்பிரர்’ எனும் நூலில் ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது.

👉 சேரமன்னர் கள்வன் கோக்கண்டன் இரவி குடும்பத்தினரான ” பழுவேட்டரையர்கள்” சோழர் செப்பேடுகளில் கேரள அரசர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.   இவர்கள் மறவன் என்றும் தங்களை குறிப்பிட்டுள்ளனர். கள்ளமறவர் குடும்பத்தினரான பழுவேட்டரையர்கள் சோழர்களோடு நெருங்கிய உறவினராக மிகவும் ஆதிக்கம் பெற்று விளங்கினர். பழுவேட்டரையர்கள்(ஆதாரம்: சோழர் செப்பேடுகள்,  தமிழ் பல்கலைக்கழகம்/ Epigraphica indica vol 38 இந்திய தொல்லியல் துறை)

👉 இரண்டாம் ராசராசன் மெய்க்கீர்த்தி கல்வெட்டில் ” கள்வன் ராசராசன்” என சோழ மன்னர் தன்னை குறிப்பிட்டுள்ளார்.( ஆதாரம்:- கல்வெட்டு  243/1930). இதேப்போல 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராசராசசோழனுலாவில் ” கனகள்வன் ராசராசன் ” என ராசராசசோழன் குறிப்பிடப்படுகிறார். கிபி பத்தாம் நூற்றாண்டில் தர்மபுரி பகுதியில் கிடைத்த மற்றொரு நடுகல் கல்வெட்டில்(115/1974) ல் ஸ்ரீ கள்ள சோழன் ராஜநன் ”  என வெட்சிப்போரில் மாண்ட கள்ளர் குல சோழ இளவரசன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

👉 மூவேந்தரும் தங்களை கள்ளர் குலத்தவர் என பல்வேறு இலக்கிய மற்றும் கல்வெட்டு சான்றுகளில் குறிப்பிட்டுள்ளனர். ஒரே குடியில் உதித்து நாடாண்ட மூவேந்தரும் தங்களுக்குள் நெருங்கிய மண உறவு கொண்டிருந்தனர். வாழ்வியல் மற்றும் பிற தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் சோழ மன்னர்கள் கள்ளர் மரபினர் என 1883ல் வெளியிடப்பட்ட தஞ்சை மேனுவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் சோழ தேசத்தில் சோழகர்,  சோழங்கத்தேவர்,  செம்பியத்தரையர், சோணாடர், சோழங்கநாட்டார், செம்பியங்கொண்டார், செம்பியப்பிரியர் முதலான சோழ வேந்தரின் வழியினர் தஞ்சை,  புதுக்கோட்டை,  திருச்சி,  திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

தொகுப்பு : www.sambattiyar.com

புதுக்கோட்டையில் வாழ்ந்த கடைசி சோழன் https://www.sambattiyar.com/last-chola-prince/

Total views 3,831 , Views today 1 

Author: admin

1 thought on “ராஜராஜசோழன் கள்ளர் மரபை சேர்ந்தவரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *