தெற்காசியாவின் பெரும்பகுதிகளை சோழ தேசத்தோடு இணைத்து மாபெரும் சாம்ராஜ்யமாக உருவாக்கியவர்கள் சோழர்கள். முதலாம் ராசராசசோழன் இட்ட பாதையில் வடநாட்டு படையெடுப்பை தொடர்ந்த ராசேந்திர சோழன் தனது வெற்றிச் சிறப்புகளை மெய்க்கீர்த்தியாக வடிப்பித்துள்ளார். ராசேந்திர சோழன் படையெடுப்பில் பங்கேற்று வெற்றி பெற்ற தளபதிகள் இன்றும் கல்வெட்டுகளில் சுட்டப்பட்டுள்ள இடங்களின் பெயர்களோடு வாழ்ந்து வருவது ராஜேந்திர சோழனின் வெற்றிகளுக்கு வாழ்வியல் சான்றாக அமைந்துள்ளது. ராஜேந்திர சோழனின் படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகளின் வாரிசுகள் இன்றும் தங்களது வரலாற்று பெயரை தாங்கி புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி
திருவன்னி வளர விருநில மடந்தையும்போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந்தன்பெருந் தேவிய ராகி யின்புறநெடிதிய லூழியு ளிடைதுறை நாடும்தொடர்வன வேலிப் படர்வன வாசியும்சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்பொருகட லீழத் தரசர்த முடியும்ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த சுந்தர முடியு மிந்திர னாரமும்தொண்டிரை யீழ மண்டல முழுவதும்எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்குலதன மாகிய பலர்புகழ் முடியும்செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்செருவிற் சினவி யிருபத் தொருகால்அரசுகளை கட்ட பரசு ராமன்மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதிஇருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடுபீடிய லிரட்ட பாடி யேழரையிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும்விக்கிரம விரர் சக்கரக் கோட்டமுமுதிர்பட வல்லை மதுரை மண்டலமும்காமிடை வளைஇய நாமணைக் கோணமும்வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்பாசடைப் பழன மாசுணி தேசமும்அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30)சந்திரன் றொல்குலத் திந்திர ரதனைவிளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப்பலதனத் தொடுநிறை குலதனக் குவையும்கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும்பூசுரர் சேருநற் கோசல நாடும்தன்ம பாலனை வெம்முனை யழித்துவண்டுறை சோலைத் தண்ட புத்தியும்இரண சூரனை முரணறத் தாக்கித்திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும்தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனைவெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளிஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்சங்கிராம விசையோத் துங்க வர்மனாகிய கடாரத் தரசனை வாகையும்பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும்கலங்கா வல்வினை இலங்கா சோகமும்காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும்காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும்கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும்தீதமர் பல்வினை மாதமா லிங்கமும்கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும்தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரானஉடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு…”
துறையாண்டார்/ மண்ணையார்/ கடக்கம்கொண்டார்
ஆட்சியின் தொடக்கத்தில் சேர நாட்டின் மீது படையெடுத்து அதை வென்ற ராஜேந்திர சோழன் அதன் பின் இடைதுறை நாடு என்று அழைக்கப்படும் கிருஷ்ணா-துங்கபத்திரை ஆகிய ஆறுகளுக்கு இடையேயான நாடு, வனவாசி, தற்போது குல்பர்கா என்று அழைக்கப்படும் கொள்ளிப்பாகை, மண்ணைக் கடகம் (தற்போதைய மால்கேட்) ஆகிய மேலைச்சாளுக்கியர்களுக்கு உட்பட்ட பிரதேசங்களை வென்றான்.
இதனை குறிப்பிடும் கல்வெட்டு பகுதி “இடைதுறை நாடும்தொடர்வன வேலிப் படர்வன வாசியும்சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும்நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும்“
இப்படையெடுப்பில் பங்கேற்ற இடைதுறை நாட்டை கைப்பற்றிய தளபதிகள் துறையாண்டார், துறைக்கொண்டார் பட்டம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

மண்ணைக் கடக்கம் எனும் பகுதியை கைப்பறிய தளபதிகள் மண்ணையார், கடக்கம் கொண்டார் முதலிய பட்டங்களோடு வாழ்ந்து வருகின்றனர். திருமதி. சசிகலா அவர்களின் கணவர் ம.நடராசன் மண்ணையார் எனும் குலப்பட்டத்தை கொண்டவர்.


ஈழத்தரையர்/சிங்களராயர்/முடிகொண்டார்/ஆரம்பூண்டார்
கிபி 1017ல் நடந்த படையெழுச்சியில் இலங்கை வேந்தனான ஐந்தாம் மகிந்தனைத் தோற்கடித்து பாண்டியர்களின் மணிமுடியையும் இந்திரன் ஆரத்தையும் கைப்பற்றிக் கொண்டு வந்தான். அத்தோடு மகிந்தனும் சோழ நாட்டிற்குச் சிறைப்பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டான். இதன்மூலம் இலங்கை முழுவதும் சோழ அரசுக்கு உட்பட்டு விட்டது என்று கூறலாம்.
இவ்வெற்றியை கூறும் ராசேந்திரனின் மெய்க்கீர்த்தி பகுதி
“ஈழத் தரசர்த முடியும்ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும்முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த சுந்தர முடியு மிந்திர னாரமும்தொண்டிரை யீழ மண்டல முழுவதும்”
இப்படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள் ஈழங்கொண்டார், ஈழத்தரையர், சிங்களராயர், முடிகொண்டார், ஆரம்பூண்டார் முதலிய பட்டங்களை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.



சோழப்பாண்டியன்
அந்நேரத்தில் பாண்டிய நாட்டில் மீண்டும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த விரும்பி கலகம் செய்த ஒரு பாண்டிய அரசனை ராஜேந்திர சோழன் வென்றார். அடிக்கடி இது போன்று தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கும் பாண்டிய மண்டலத்தை சோழ நாட்டுடன் இணைத்துக்கொண்டு தன்னுடைய மகனுக்கு சுந்தரசோழ பாண்டியன் என்ற பெயரில் மதுரையில் பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.

சோழபாண்டியன், சோழ பாண்டியர் முதலிய குடும்ப பெயர்கள் கொண்ட தளபதிகள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
சாளுவர்,சக்கரநாட்டார்,சக்கரநாடாள்வார்,பஞ்சவராயர்
கீழைச்சாளுக்கிய நாடு சோழர்களின் நட்புரிமையில் இருந்தது . எனவே அதன் வடக்கில் இருந்த சக்கரக்கோட்டத்தை முதலில் சோழர் படைகள் தாக்கின. இது இந்திராவதி ஆற்றின் கரையில் தற்போதைய சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரகூட் என்ற இடம். இதை நாகர்கள் ஆண்டுவந்தனர். சக்கரக்கோட்டத்தை வென்ற பிறகு சோழர் படைகள் மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி ஆகிய இடங்களைத் தாக்கி வென்றன. இவை அனைத்தும் கிழக்குச் சட்டிஸ்கரில் உள்ள இடங்களாகும்.
” விக்கிரம விரர் சக்கரக் கோட்டமுமுதிர்பட வல்லை மதுரை மண்டலமும்காமிடை வளைஇய நாமணைக் கோணமும்வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும்”
இப்படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள் சாளுவராயர், சக்கரநாட்டார், சக்கரநாடாள்வார்,பஞ்சராயர் முதலிய பட்டங்களோடு வாழ்ந்து வருகின்றனர்.



ஒட்டம்பிடிக்கியார்,வங்கராயர், தண்டத்தலைவர், தண்டநாயகர்
ஒட்டார தேசம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஒடிசாவின் தெற்கிலுள்ள ஆதிநகரை ஆண்ட இந்திரரதன் என்ற அரசனை வென்று கோசல நாட்டை (கிழக்கு ஒடிசா) சோழப்படைகள் கைப்பற்றின. அதன்பின் வடக்கு நோக்கிச் சென்ற சோழப்படைகள், வங்காள மாநிலத்திலுள்ள மிதுன்பூர் மாவட்டமாக தற்போது அறியப்படுகிற தண்டபுக்தியை ஆண்ட தன்மபாலனையும், ரணசூரன் என்ற அரசன் ஆண்ட தக்கணலாடத்தையும் (தற்போதைய ஹூக்ளி / ஹௌரா மாவட்டங்கள்), கோவிந்தசந்தனுக்குரிய வங்காள தேசத்தையும் (கிழக்கு வங்காளம்) வென்றன.
“சோலைத் தண்ட புத்தியும்இரண சூரனை முரணறத் தாக்கித்திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும்தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனைவெஞ்சமர்”




ஒட்டர தேச படையெடுப்பில் பங்கெடுத்தவர்கள் ஒட்டபிடிக்கியார் என்றும், வங்கதேச படையெடுப்பில் பங்கெடுத்தவர்கள் வங்கராயர் என்றும், தண்டபுத்தி பகுதி படையெடுப்பில் பங்கேற்றவர்கள் தண்டத்தலைவர், தண்டநாயகர் முதலிய பட்டங்களை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
கங்கராயர், கங்கநாட்டார்
உத்திரலாடம் என்ற தற்போதைய மூர்ஷிதாபாத் மாவட்டத்தை ஆண்ட மகிபாலனை வங்காளப்படையெடுப்பின் உச்சகட்டமாக வென்ற சோழப்படைகள் அங்கேயிருந்து கங்கையாற்றைக் குடங்களில் நிரப்பி தெற்கு நோக்கிக் கொண்டுவந்தன. கங்கையாற்றின் நடுவில் யானைகளைப் பாலம் போன்று நிறுத்தி இந்தக் குடங்கள் கொண்டுவரப்பட்டன என்று திருவாலங்காட்டுச் செப்பேடு புகழ்ந்துரைக்கிறது.
“தருளிஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும்நித்தில நெடுங்கட லுத்தர லாடமும்வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற்”


இப்படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள் கங்கைராயர்,கங்கை நாட்டார் முதலிய பட்டம் பெற்று வாழ்கின்றனர்.
பழங்கொண்டார்
“கேரளன் முறைமையிற் சூடும்குலதன மாகிய பலர்புகழ் முடியும்செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத்தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்”

சேரரை அடக்க சேரரின் ஆளுமையில் இருந்த (மாலைத்தீவு) பழந்தீவு பகுதி ராஜேந்திரனால் கைப்பற்றப்பட்டது. இப்படையெடுப்பில் பங்கேற்றவர்கள் ” பழங்கொண்டார்” எனும் பட்டம் பூண்டு வாழ்ந்து வருகின்றனர்.
விசயத்தேவர், பண்ணைநாட்டார், பண்ணையார், மலையரார்
ஶ்ரீவிஜயம் இந்த இடம் தற்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள பாலெம்பங் என்ற இடமாகும். அடுத்து துறைநீர்ப் பண்ணை. இதுவும் சுமத்ரா தீவின் கிழக்குக் கடற்கரையில் உள்ளது. தற்போது பன்னெய் என்று அழைக்கப்படுகிறது. சுமத்ரா தீவில் இருக்கும் இன்னொரு நகரமான மலையூர் ஜம்பி நதியின் முகத்துவாரத்தில் உள்ளது. மாயிருடிங்கம் என்பது மலேசியத் தீபகற்பத்தின் நடுவில் உள்ளது. இப்பகுதிகள் அனைத்தையும் சோழர்களின் கப்பற்படை கைப்பற்றியது.
“கங்கையும்அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்சங்கிராம விசையோத் துங்க வர்மனாகிய கடாரத் தரசனை வாகையும்பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும்ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில்விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர்புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும்நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும்வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும்ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமு”


இப்படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள் விசயத்தேவர், பண்ணைநாட்டார், பண்ணையார், மலையராயர், முதலிய பட்டங்கள் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
பம்பாளியார், தக்கோலர், தக்கோலாக்கியார், கடாரத்தரையர், கடாரத்தலைவர்
பப்பாளம், தற்போதைய கிரா பூசந்தியின் பழைய பெயர் (Isthumus of Kra). தக்கோலம் என்பது தற்போதைய தாய்லாந்தில் கிரா பூசந்திக்கு தெற்கில் உள்ள தகோபா எனும் ஊர். நக்காவரம் என்பது நிகோபார் தீவுகளின் பழைய பெயர். கடாரம், மலேசியாவின் மேற்கிலுள்ள கேடா நகரம். இராஜேந்திர சோழனின் படையெடுப்பில் மேலே குறிப்பிடப்பட்ட தென் கிழக்காசிய பகுதிகள் அனைத்தும் சோழ பேரரசின் கீழ் இணைந்தன.


இப்படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள் பம்பாளியார், தக்கோலர், கடாரத்தலைவர், கடாரத்தரையர் முதலிய பட்டங்கள் பூண்டு வாழ்ந்து வருகின்றனர்.
வேங்கிராயர்

ராஜேந்திரனின் பத்தாம் ஆட்சியாண்டின் பொது வெளியிடப் பெற்ற கல்வெட்டு முக்கியத்துவம் உடையதாகும். வீரத் திலகமான மாவீரன் அரையன் ராஜராஜன் தனது தலைநகர் நோக்கிப் படையுடன் வருகிறான் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் வேங்கி மன்னன் நாட்டை விட்டே ஓடி விட்டான் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வாறு ஓட்டம் பிடித்த வேங்கி மன்னன் விசயாதித்தனாக இருக்கக்கூடும்.
“போயினான் போர்ச்சளுக்கிய பொற்சே ழியவரசை ஏவினான் கோச்சென்னி என்னவே-வாயினாற் கொல்வேங்கை பின்தொடரக் கோள்வேங்கை சூழ்புறவில்”
இப்படையெடுப்பில் பங்கேற்ற தளபதிகள் வேங்கிராயர் எனும் பட்டம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
சிந்துரார்

ராஜாதிராஜனுக்குத் திறை செலுத்திய நாடுகளுள் சிந்துவும் குறிக்கப் பெற்றிருத்தலினாலும், சிந்துப் பகுதியினை இவன் வென்றதாகச் சான்றுகள் இன்மையினாலும், ராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் வென்ற மாசுணி தேசத்தினையே இவன் மெய்க்கீர்த்தி ‘சிந்துரரையாணர்’ எனக் குறிக்கின்றது என்பதனை அறியலாம்.
சிந்து பகுதி படையெடுப்பில் வெற்றி பெற்ற தளபதிகள் சிந்துராயர் எனும் பட்டம் பெற்று இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பேரரசர் ராஜேந்திர சோழ தேவரையும் முகம் தெரியாத அவரது தளபதிகளையும் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான இன்று போற்றி வணங்குவோம். சோழப் பேரரசர்களின் புகழ் பாடுவோம்.
Article by – www.sambattiyar.com
Total views 2,593 , Views today 2