சிவகங்கை வட்டம் திருபுவனத்து பெருமாள் கோயிலில் கிடைத்த பாண்டியர் காலத்து அரிய பல தகவல்களை தருகிறது.
கிபி 1335 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் பராக்கிரமபாண்டிய தேவர் காலத்து கல்வெட்டு திருபுவனத்தில் இருந்த காவல் முறை மற்றும் நிர்வாகம் குறித்து விளக்குகிறது.
திருபுவனவீரபுரத்தின் ஊர்க்காவல் பொறுப்பை கொண்டிருந்த கள்ளர்கள் ஊர் மக்களுக்கு அளித்த ஒப்பந்தமாக இச்சான்று அமைகிறது.

இதன்படி ஊர்காவல் பொறுப்பை உடைய குளமங்கல நாட்டார்கள் காவல் வரியாக கள்ளர் மக்களின் இல்லங்களில் நடைபெறும் தலை( முதல்?) கல்யாணத்திற்கு ஊர் மக்களிடம் ஒரே சேலை பெறக்கடவார்கள் என்றும்
தலைக் கல்யாணம் அன்றி மற்ற கல்யாணங்களுக்கு சேலை பெற மாட்டோம் என்றும்
கார்த்திகைக்கு ஐந்து குருணி நெல்லும் கள்ளர் அரையனுக்கு அஞ்சும்…( சிதைவு) கார்த்திகைக்கு பாக்கு…..
ஊர்நிலங்களில் இருந்து பணமும் நெல்லும் குறிப்பிட்ட அளவும் பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்..
இதையன்றி வேறு கலகமோ அநியாயமோ செய்யமாட்டோம் என்றும் இதை மீறி அழிவுகள் செய்தால் அது தாயோடு சேரும் அவலத்திற்கு ஈடாகும் என தங்களது ஒப்பந்தத்தை அளித்துள்ளனர்.
இக்கல்வெட்டு மூலம் பாண்டியர் காலத்தில் திருப்புவனத்து ஊர்க்காவல் கள்ளர்கள் வசம் இருந்ததையும் , அவர்களில் அரையர்கள் நாட்டை நிர்வாகம் செய்தததையும் அறிகிறோம்…..
இக்கள்ளர்கள் வீட்டில் நடக்கும் முதல் திருமணத்திற்கு காவல் வரியின் ஒர் பாகமாக ஊர்மக்கள் சேலையை அளித்துள்ளதையும் அறிகிறோம்.
இது தவிர குறிப்பிட்ட நாட்களில் நெல்லும், அரையனுக்கு தனியாக சில சலுகைகளும் இருந்ததுள்ளது.
ஊர்காவல் மற்றும் அரையத்தனம் செய்த கள்ளர்கள் ஒப்பந்தத்தில் கூறியதை தவிர வேறு கலகத்திலோ, அழிவு செயலலிலோ ஈடுபட மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
பாண்டியர் காலத்தில் நிலவிய ஊர்காவல் மற்றும் நிர்வாகம் குறித்த தகவல்களை அறிய இக்கல்வெட்டு முக்கிய சான்றாக அமைகிறது.
www.sambattiyar.com
Total views 1,489 , Views today 1