தஞ்சையில் வாழும் சோழ மரபினர்


கிபி  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் வேகம் எடுத்தது. பழங்கால வரலாறுகளை தேடும் முயற்சியில் கல்வெட்டுகள் செப்பேடுகள் என பல வரலாற்று சான்றுகள் பாதுகாக்கப்பட்டு புதிய வரலாற்று தகவல்கள் சேகரிக்கப்பட்டது. அக்காலத்தில் சோழர்களின் வரலாறு பெருமளவில் சேகரிக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டது.  சோழர்களின் வரலாற்றை ஆய்வு செய்த பிரிட்டீசார் கால ஆராய்ச்சியாளர்கள் சோழர் வழிவந்த தற்கால மரபினர் குறித்து பல்வேறு தகவல்களை கூறிச் சென்றுள்ளனர்.

கிபி 1893 ஆம் ஆண்டு பாதரியார் T.B. பாண்டியன் என்பவரால் எழுதப்பட்ட ” Ancient heroes of south indian peninsula ” எனும் நூலில் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளது:-

கள்ளர்கள் இன்றும் சோழன் எனும் பட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக ஒரு கள்ளரின் இயற்பெயர் ” வீரா” என்றால் அவர் தன்னை வீர சோழன் என குறிப்பிடுகிறார்.

பண்டைய சோழ தலைநகரங்களான தஞ்சை மற்றும் திருச்சியில் கள்ளர்கள் மிகுந்து வாழ்கின்றனர்.

பண்டைய சோழ பேரரசின் வழிவந்த கள்ளர்கள் இன்றும் தங்களது முன்னோர்களின் பட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

பழங்கால மன்னர்களின் பட்டங்களான காலிங்கராயர் மற்றும் வாண்டையார் போன்றவை இன்றும் கள்ளர்களே பயன்படுத்தி வருகின்றனர்.

தஞ்சையில் இருந்த பதினெட்டு பாளையங்களும் கள்ளர்களால் ஆளப்படுகிறது.

1917 ஆம் ஆண்டு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் என்பவரால் எழுதப்பட்ட கர்ணாமிர்த சாகரம் எனும் இசை நூலில் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளது :-

” பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்த வம்சத்தவர்கள் நாளதுவரையும் ( இதுநாள் வரையும்) சோழர்,  சோழத்தேவர், சோழங்கத்தேவர்,  விஜயர், விஜயத்தேவர், முடிகொண்டார் என்ற பெயர்களுடன் ஜமீன்தார்களாகவும் , சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழையாகவும் உள்ளார்கள் என்பதை சோழ நாட்டில் காண்போம் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சையில் இப்பெயர்களுடன் இன்றளவும் கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இதில் குறிப்பிடப்படும் விஜயத்தேவர் பாப்பாடு ஜமீன்தார் ஆவார்.

கிபி 1883 ஆம் ஆண்டு எழுதப்பட்ட manual of tanjore in madras presidency எனும் நூலில் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளது:-

தமிழகத்தின் வரலாற்று ஆவணங்கள் மற்றும் வாழ்வியல் அடிப்படையில் தஞ்சை கள்ளர்களே சோழ மரபினர் ஆவர்.

தஞ்சையில் இன்றும் கள்ளர்களில் உள்ள பிரிவினராக சோழகர், சோழங்கத்தேவர் முதலியோர் வாழ்ந்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட கொழுமம் – குமரலிங்கம் நூலில்

“குமரலிங்கத்தில் உள்ள ஈசநாட்டு கள்ளர்கள் சோழ நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும், சோழ மன்னர்களின் வழிவந்தவர்கள் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது, இவர்களில் சோழகர், சோழங்கத்தேவர்,  மழவராயர் முதலிய பல பிரிவினர் இருப்பதாக இந்நூல் கூறுகிறது.

சோழர்கள் தோன்றி தொன்று தொட்டு ஆட்சி புரிந்த தஞ்சை வளநாட்டில் இன்றும் கள்ளர் மரபினர் சோழர்களின் வழியினராகவே வாழ்ந்து வருவதை வரலாற்று சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

Article by: www.sambattiyar.com

Total views 1,866 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *