ராஜேந்திர சோழர் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்

ராஜேந்திர சோழன் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்

கிபி 1015 ஆம் ஆண்டு சோழ பேரரசை மாமன்னர் ராஜேந்திர சோழத்தேவர் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈசுவரர் கோயிலுக்கு அச்சரப்பாக்கம் இசக்க நறிவாளன் என்பவர் 1200 குழி நிலத்தை தானமாக அளித்தார். 

கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை அதே பகுதியில் வாழ்ந்த நிலவுடைமையாளர்களிடம் இருந்து இசக்க நறிவாளன் விலைக்கு வாங்கியுள்ளார். நிலத்தை விலைக்கு அளித்தவர்கள்:-

“தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்”

தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்

‘தஞ்சை வீரன் நாகன் அறியான்”

“அம்பத்துழான் சதுரன் ஒற்றி”

இம்மூவர் வசம் இருந்து 1200 குழி நிலம் பெறப்பட்டு திருமுல்லைவாயில் நாதருக்கு திருப்பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகளில் வரும் “தஞ்சை வீரர்கள்” தஞ்சையில் இருந்து குடிபெயர்ந்து தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தாலும்,   தங்களது பெயர்களில் தஞ்சையையும் சேர்த்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவர்களை வீரன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் ,  சோழப்படையில் பணியாற்றிய முக்கிய தளபதிகள் என அறியலாம். கள்ளன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் இவர்கள் கள்ளர் மரபினர் என்பது தெளிவாகும்.

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கள்ளர்களின் தனி படைபற்று இருந்ததை முதலாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு ” காடும் நாடும் நகரங்களும் கள்ளப் பற்றும்” என குறிப்பிடுகிறது. (கல்வெட்டு எண் : 103 of 1897)

தஞ்சையில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவுடைமை கொண்டவர்களாகவும்,  படைத் தளபதிகாளவும் இருந்துள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.

( கல்வெட்டு எண்: 684 of 1904)

தொகுப்பு: www.sambattiyar.com

Total views 1,875 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *