சங்க கால சோழ மன்னர்களில் ஒருவரான சோழன் பெருங்கிள்ளி உறையூரில் இருந்து ஆட்சி புரிந்தவர். இவர் சேர மற்றும் பாண்டிய மன்னர்களை அழைத்து இராசசூய யாகம் நடத்தியவர் ஆவார். இவர் சேர மன்னரான மாந்தரஞ்சேரலுக்கு எதிராக போரிட்டு வென்றார்.
சோழ மன்னன் பெருங்கிள்ளியின் படையின் தன்மை குறித்து புறநானூறு பாடல் 16 ல் பாடரங் கண்ணனார் புகழ்கிறார்.
“வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுபட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்”
கிள்ளியிடத்தே ஆற்றல்மிகு படை ஒன்று இருந்தது. இப்படை பகைவர் நாட்டை விரைந்து குதிரை மேல் சென்று வென்று, அவர் தம் நெல்விளையும் கழனியைக் கொள்ளையிட்டு, வீடுகளை இடித்து எறியூட்டி , காவற் குளங்களில் யானைகளை இறக்கி அழியூட்டி கொடும்போர் இயற்றும் வல்லது.
பகைவர் நாட்டை சுடுநெருப்பால் கொளுத்துவதால், அப்பகுதியே செவ்வானம் போல மாறிடுமாம். துணை வேண்டாது தனித்து போரிடும் படையைக் கொண்ட பெருங்கிள்ளியின் வாளில் புலால் நாற்றமும், சோழ மன்னனின் முகத்தில் முருகனை போன்ற வெஞ்சினமும் அச்சமூட்டுபவையாக இருந்ததாக புலவர் குறிப்பிடுகிறார்.
சோழ நாட்டு வீரர்களின் வீரத்தையும், அவர்களின் மூர்க்கமான போரிடும் முறையையும் புலவர் குறிப்பிடுகிறார்.

கிபி 17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த புரோன்சா எனும் பாதிரியார் தஞ்சையில் நடந்த நிகழ்வுகளை தங்களது ஏடுகளில் குறிப்பிட்டுள்ளனர்.
சோழ நாட்டு வீரர்களான கள்ளர்களின் பண்புகளையும் இவர்களை பதிவு செய்துள்ளனர். சோழ நாட்டு வீரர்களான கள்ளர்களின் பண்புகள், சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட சோழர் படையின் பண்புகளை ஒத்துள்ளதை இங்கு காணமுடிகிறது. கிபி 1665ல் எழுதப்பட்ட பாதிரியார் புரோன்சாவின் குறிப்புகளில்
” கள்ளர்கள் தஞ்சையில் நடந்துவரும் தொடர்ச்சியான போர்களால் வலு குறைந்து உள்ளனர், இவர்களின் வீழ்ச்சியை ஒரு சாரார் கொண்டாடினாலும் மற்றொரு சார்பினர் கள்ளர்களின் வீழ்ச்சியை இந்த நாட்டிற்கு நல்லது அல்ல என்று நினைத்துள்ளனர். ஏனெனில் தஞ்சையில் ஏற்பட்ட போர்க்காலங்களில் கள்ளர்களின் படையே நாட்டை காத்தது, தஞ்சையை தாக்கிய முஸ்லீம் படை தஞ்சை மன்னரின் படைகளைவிட கள்ளர்களின் படைக்கே அதிகம் பயந்து திணறியது, கள்ளர்களின் போர்திறன் மிகவும் போற்றுதலுக்குரியது, நொடிப்பொழுதில் ஒன்று கூடி, அணிகளாக பிரிந்து தாக்குதல் நடத்தி எதிரிகளை நிலைக்குலைய செய்வதில் கள்ளர்கள் வல்லவர்கள், கள்ளர்கள் குதிரையை கையாலும் திறன் மிகவும் வியப்பிற்குரியது, குதிரையை கடிவாளம் இன்றியே இயக்கும் வலிமை படைத்தவர்கள் கள்ளர்கள்” என்று சோழ நாட்டு வீரர்களான கள்ளர்களின் புகழை பாதர் புரோன்சா புகழ்கிறார்.
சங்க காலம் முதலே சோழ நாட்டு கள்ளர்களின் போர்திறன் சற்றும் மாறாமல் பிற்காலம் வரையிலும் தொடர்ந்துள்ளதை இந்த ஆவணங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
www.sambattiyar.com
Total views 1,438 , Views today 2