தேவர் சமுதாயம் குறித்து புதுக்கோட்டை  தொண்டைமான்

கிபி பதினேழாம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் அம்புக்கோயிலில் அரையர்களாகவும் நாடாள்வாராகவும் இருந்த தொண்டைமான்கள் பல்வேறு போர்களில் பங்கேற்று தங்களது வீரத்தை பறைசாற்றி வந்தனர்.

கிபி 1639 ல் ஸ்ரீரங்கராயர் புதுக்கோட்டை ஆவுடைராய தொண்டைமானுக்கு படை உதவி அளித்து பல்லவராயரிடம் இருந்து பெரும்பாலான பதவிகளை பெற உதவினார்.  ஆவுடைராய தொண்டைமான் புதுக்கோட்டை வட பகுதிகளை ஆட்சி செய்து வந்தபோது,  இவரது மகன் ரகுநாதராய தொண்டைமான் பல்வேறு ராணுவ சேவைகளை செய்து வந்தார்.

இப்பகுதியில் பிரபலமடைந்து இருந்த ரகுநாத ராய தொண்டைமானை தஞ்சை மன்னர் விஜய ராகவ நாயக்கர் தனது படையில் தளபதியாக பணியாற்ற அழைத்தார்.

தஞ்சை மன்னரின் அரசவைக்கு சென்ற புதுக்கோட்டை தொண்டைமான் தஞ்சை மன்னருக்கு அளித்த பதிலில் தனது போர்க்குடியின் எண்ணவோட்டத்தை விளக்கியுள்ளார்.

அதாவது ” நாங்கள் வாளோடு வாழ்ந்து வரும் போர்குடியினர், போர் செய்வது எங்களது குலத்தொழில், போர்வீரர்களான நாங்கள் உங்களுக்கு ராணுவ சேவை அளிப்பதில் எந்த கௌரவ குறைச்சலும் இல்லை,  நாங்கள் வெட்கப்பட வேண்டிய ஒரே விஷயம் போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டி ஒடுவதே”  என பதிலளித்துள்ளார்.

பல்வேறு போர்க்களங்களில் தீரம் காட்டிய ரகுநாதராய தொண்டைமானாருக்கு அவரது வீரத்தை பாராட்டி தஞ்சை மன்னர் குதிரைகள், ராமமதம் எனும் வைரம் பதித்த நகை,   பெரிய ராமபானம் எனும் வீரவாளையும் பரிசளித்தார். ஒவ்வொரு விஜயதசமிக்கும் பெரிய ராமபானம் எனும் வாள் சமஸ்தான மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.

போர்க்களம் காண்பதும்,  புறமுதுகு காட்டாமல் போரிடுவதுமே வாழ்வின் மாண்புகளாக கொண்டு வாழ்ந்த தேவர் வம்சத்தினரின் வீரவாழ்வை புதுக்கோட்டை மன்னர் 350 ஆண்டுகளுக்கு முன்பே வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.

(General history of pudukkottai state 1916 : ( பக் 122-123)

By:www.sambattiyar.com

Total views 1,509 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *