திருமங்கை ஆழ்வார் வரலாறு

வைணவ சமயத்திற்கு உயிரூட்டிய பன்னிரு ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாராக தோன்றியவர் திருமங்கை ஆழ்வார். பன்னிரு ஆழ்வார்களில் அதிகமான பாசுரங்களை இயற்றிய பெருமைக்குரியவர் திருமங்கை ஆழ்வார். கிபி 8 ஆம் நூற்றாண்டில் சோழ தேசத்தில் திருக்குறையலூரில் கள்ளர் மரபில் உதித்த திருமங்கை ஆழ்வார் சோழனின் மிகச்சிறந்த தளபதியாக இருந்து போர்க்களங்களில் தீரம் காட்டி திருமங்கை நாட்டின் மன்னராக உயர்ந்தார். நாற்கவி பெருமாள் என போற்றப்படுபவர்.திருமங்கை மன்னரின் போர் மரபு மற்றும் தமிழ்ப்புலமை குறித்த தகவல்களை சுருக்கமாக காணலாம்.

பிறப்பு மற்றும் குலம்


ஆழ்வார்களின் வரலாற்று தகவல்கள் அனைத்திற்கும் மூலமாக விளங்குவது கிபி 12 ஆம் நூற்றாண்டில் பின்பழகிய பெருமாள் ஜீயர் எழுதிய ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம்.ராமானுஜர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நூலே அழ்வார்களின் வரலாறு பற்றிய மிக பழமையான நூலாகும்.  இந்த நூலில் உள்ள தகவலின்படி திருமங்கை ஆழ்வார் மிலேச்ச குலத்தில் கள்ளர் குடி மரபில் உதித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலை அடிப்படையாகக் கொண்டு திருமங்கை ஆழ்வார் திருக்குறையலூரில் கள்ளர் மரபில் உதித்தவர் என கூறும் நூல்களில் சில பின்வருமாறு:- 

01) ஆழ்வாராசாரியர்கள் வைபவமான குருபரம்பரை ப்ரபாவம் 1902

02) பூர்வாசாரியர்கள் அருளிய ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம்( 12 ஆம் நூற்றாண்டு) 

03)புதுக்கோட்டை கல்வெட்டு எண்: 879 (கிபி 1728)

04)ஊத்துமலை பாளையப்பட்டு கைபீது( 18 ஆம் நூற்றாண்டு) 

05)பூ அ பாஷ்யம் ஐயங்கார் எழுதிய திருமங்கை மன்னன் :1927: குமாரசாமி நாயுடு & சன்ஸ் 

06)மு இராகவயங்கார் எழுதிய ஆழ்வார்கள் காலநிலை:1929:தமிழ் கல்விச்சங்கம் பிரசுரம்

07)புலவர் கோவிந்தராச முதலியார் எழுதிய ஆழ்வார்கள் வரலாறு, பாகம் 1, 1948,  திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் வெளியீடு

08)பாரதீய பூர்வசீக ஸ்ரீவைஷ்ணவ சபா வெளியிட்ட ” பொன் விழா மலர்” 1978 

09)கல்வெட்டு இதழ்: தமிழக அரசு தொல்லியல் துறை 2011

10)பன்னிரு ஆழ்வார்கள்: இராமகிருஷ்ண மடம்

11)ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்: கே ஆர் விட்டல்தாஸ் 

12) குருபரம்பரா ப்ரபாவம் , டாக்டர் எஸ் ஜகத்ரட்சகன் ( ஆழ்வார்கள் ஆய்வு மையம்) 1994

13) History of tamil language and literature,  Travancore university

14) முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு

திருமங்கை ஆழ்வாரின் வீரம் மற்றும் படைத்திறன்

* போர்குடி மரபில் உதித்த நீலன் எனும் திருமங்கை ஆழ்வார் குதிரை ஏற்றம், வில், வாள், வேல் முதலிய பயிற்சிகளிலும், மற்போரிலும் சிறந்து விளங்கினார்.
* நீலனின் வீரத்தைக் கண்ட சோழ மன்னர் அவரை திருமங்கை எனும் நாட்டுக்கே மன்னராக உயர்ந்துள்ளார்.  ஒரு ராச்சியத்தையே பெருமளவுக்கு மாவீரராக திகழ்ந்துள்ளார்.
* திருமங்கை மன்னர் மதயானைகளை கொண்ட பெரும்படையின் தலைவன் என திவ்ய சூரி சரிதம் எனும் பழைய நூல் கூறுகிறது. 
* போர்களில் பங்கேற்று,  எதிரிகளுக்கு எமனைப்போன்று வீரம் காட்டியதால் பரகாலன் என போற்றப்படுகிறார்.
* திருமங்கை ஆழ்வார் மிகப்பெரிய சேனையை கொண்டிருந்ததாகவும், யானைப்படையை வழிநடத்துவதில் வல்லவர் என்றும் பெரிய திருவாய்மொழி பாடல்கள் கூறுகின்றது. (“வாட்டிறற் றானை மங்கையர் தலைவன்”:- பெரிய திருவாய்மொழி 10,9,10)/( “அமரிற் கடமா களியானைவலான்”:- 2,4,10)/ ” கடமாருங் கருங்களிறு வல்லான் வெல்போர் கலிகன்றி” :- 2,5,10)
* பெரிய குதிரை வீரரென்றும், வில் வித்தையில் எதிரிகளை வெல்பவர் என்றும் பெரிய திருவாய்மொழி பாடுகிறது.(“ஒன்னலர் தங்களை வெல்லும் ஆடல்மாவலன்” :- 5,8,10)/ “மருவலர்தம் உடல்துணிய வாள் வீசும் பரகாலன்”:- 3,9,10)
* வைணவத் திருப்பணிகளில் ஈடுபட்டதால் சோழ மன்னருக்கு கப்பம் செலுத்த இயலாமல் சோழனின் கோபத்துக்கு ஆளானார் திருமங்கை மன்னன்.  சோழ மன்னர் திருமங்கை மன்னருக்கு எதிராக சண்டீசுவரன் எனும் தளபதி தலைமையில் படையை அனுப்பினார்.  ஆனால் திருமங்கை ஆழ்வார் ” ஆடல்மா” எனும் தனது குதிரையின் மேலேறி போரிட்டு சோழர் படைகளை புறமுதுகு கண்டார். வாளை வீசி யானைகளின் பனை போன்ற துதிக்கைகளை வெட்டி, யானையின் மத்தகங்களை(யானையின் நெற்றி) பிளந்து,கிம்புரி எனும் அணிபூண்ட தந்தங்களை அறுத்து, குதிரைப்படையை அழித்து சோழரின் படைகளை திருமங்கை மன்னன் புறங்கண்டார் என பரகாலன் சருக்கம் கூறுகிறது..   வைணவ பணிகளில் ஈடுபட்ட போதும் கள்ளர் மரபின் வீரம் குறையவில்லை.
* திருமங்கை ஆழ்வாரின் யானையின் பெயர் கடமா களியானை ஆகும்.


தமிழ் வேதங்களில் பங்களிப்பு

* ஆசு, மதுரம், சித்தம், விஸ்தாரம் ஆகிய நான்கு நடைகளில் கவிதைகளை இயற்றும் திறன் பெற்று இருந்ததால் நாற்கவிப்பெருமாள் எனும் பட்டத்தை பெற்றார்.
* தமிழ் வேதங்கள் என அழைக்கப்படும் வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அதிக (1361) பாடல்களை பாடிய பெருமைக்கு உரியவர். இவர் படைத்த பாசுரங்கள் பின்வருவன:- திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் – 47 அடிகள்) சிறிய திருமடல் (ஒரு பாடல் – 155 அடிகள்)பெரிய திருமடல் (ஒரு பாடல் – 297 அடிகள்) திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்) திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்) பெரிய திருமொழி (1084 பாடல்கள்)
கிபி 8 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக நிலையை அறியவும், அக்கால வரலாற்றை புரிந்து கொள்ளவும் திருமங்கை ஆழ்வாரின் பாடல்கள் இன்றியமையாதவை. வட மொழிக்கு நிகராக தமிழ் வேதங்களை இயற்றி தமிழர்களின் வைணவ வேதங்களை உருவாக்கியதில் நீலன் எனும் திருமங்கை மன்னரின் பங்கு அளப்பரியது. தமிழ் மொழிக்கும், வைணவ சமயத்திற்கும் பரகாலர் செய்த சேவைகள் உலகுள்ளவரை நிலைத்து நிற்கும்….

தொகுப்பு:- www.sambattiyar.com

Total views 4,999 , Views today 1 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *