” திருமாலிருஞ்சோலை மலைதனிலே அணியான ஜாரிக்கள்ளர் குடியாகிய பேர்கள் அனேகருண்டு அதில் நானொருவன் கண்டீர் அவர் அத்தனை பேர்க்கும் நான் எத்தன் கண்டீர் துதிக்கொண்டு வாழ்ந்திருந்தேன் சூரசோர னென்றெனக்கு பேரழைப்பார், திருமங்கை யாழ்வாரைக் குல தெய்வ மென்றே வைத்துக் கைத்தொழுவேன்”
கிபி பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நொண்டி நாடகத்தில் ” சோர சூரன்” எனும் கள்ளர் வீரன் குறிப்பிடப்படுகிறார். அழகர் கோயிலை சுற்றி வசிக்கும் கள்ளர்களில் ஒருவரான இவர் திருமங்கை ஆழ்வாரை தனது குல தெய்வமாக வணங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
திருமங்கை ஆழ்வார் கள்ளர் மரபில் உதித்தவர் என கிபி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வைணவ இலக்கியமான பன்னீராயிரப்படி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினர் திருமங்கை ஆழ்வாரை தங்களது கள்ளர் குலத்தின் தெய்வமாகவே வணங்கி வந்தது இவ்விலக்கியத்தின் மூலம் உறுதிப்படுகிறது.

www.sambattiyar.com
Total views 1,492 , Views today 2