கிபி 17 ஆம் நூற்றாண்டில் குளத்தூரை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் குளத்தூர் தொண்டைமான்கள் என அழைக்கப்பட்டனர். கிபி 1728 ஆம் ஆண்டை சேர்ந்த குளத்தூர் தொண்டைமான் மன்னரான ராமசாமி தொண்டைமான் அவர்களின் கல்வெட்டு இவர்களின் ஆட்சி பகுதியை விளக்கும் விதமாக அமைகிறது.

” கள்ளத் திருமங்கையாழ்வார் வங்கிசமான நாட்டாரில் கொடி அதிபராய் இருக்கிற விசைய ரங்க சொக்கநாத ராமசாமி தொண்டைமானார் லட்சமிய்யங்காருக்கு பண்ணிக்கொடுத்த சிலாசாதனம் எங்கள சீமையில் சேது மார்க்கத்தில் களமாவூரில் தர்மத்திற்கும் எங்களூரு நடக்கிற நார்த்தாமலை சீமையில்” என கல்வெட்டில் குறிப்பிடுகிறார்……
இதே மன்னர் கிபி 1734 ஆம் ஆண்டு வெளியிட்ட நாஞ்சியூர் செப்பேட்டில் ” ஸ்ரீ விசயரங்க சொக்கநாத ராமசாமி தொண்டைமானார் அக்கிரகார தானசானம் பண்ணிக்கொடுத்தப்படி நமக்கு சொந்தமாக நடக்குற நார்த்தாமலை சீமையில்” என குறிப்பிடுகிறார்…..

குளத்தூர் தொண்டைமான் மன்னர்களின் முக்கிய தலைமையிடமாக நார்த்தாமலை குன்றுகள் விளங்கியுள்ளது. மலைக் குன்றுகளே இயற்கை அரண்களாக அமைந்துள்ள நார்த்தாமலையில் பழமையான குடைவரை கோயில்களும் பழங்கால கற்றளிகளும் அமைந்துள்ள வரலாற்று பொக்கிசமாக திகழ்கிறது….
கிபி பதினாறாம் நூற்றாண்டில் விசய நகர பிரதிநியான அக்காலராசா என்பவன் இப்பகுதியில் கோட்டை கட்டி வாழ்ந்ததாகவும், கள்ளர்களோடு ஏற்பட்ட சச்சரவால் அக்கச்சி பல்லவராயர் ஆணையின்படி கள்ளர்கள் அக்காலராசாவின் தலையை வெட்டி கொன்றனர். இதனால் அக்கால ராசாவின் மனைவியர் அனைவரும் நார்த்தாமலை உள்ள நொச்சிக் கண்மாய் பகுதியில் தீப்பாய்ந்து இறந்தனர் என்றும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு கூறுகிறது.
இத்தகைய பலவிதமான வரலாற்று பொக்கிசங்களை தன்னுள் கொண்டுள்ள நார்த்தாமலை குன்றுகளின் இயற்கை அழகும் நம்மை கொள்ளை கொள்கிறது……
Article by: www.sambattiyar.com
Total views 1,310 , Views today 3