விஜயநகர பேரரசும் முக்குலத்தோரும்

கிபி பதினான்காம் நூற்றாண்டில் பாண்டிய வேந்தர்களின் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி பல அந்நிய சக்திகள் தமிழகத்தில் தங்களது ஆட்சியை நிறுவ முயன்றனர்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி விஜயநகர பேரரசு தமிழகத்தில் காலூன்றியது. விஜய நகர அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தின் பண்டைய போர்குடியினரான முக்குலத்தோர் மட்டுமே பல்வேறு போர்களை நிகழ்த்தியுள்ளனர். முக்குலத்தோர் விஜய நகர அரசுக்கும் இவர்களின் பிரதிநிதிகளான நாயக்க அரசுக்கும் கடும் நெருக்கடிகளை தந்துள்ளனர். இருப்பினும் தமிழர் படைகளை ஒருங்கிணைக்க சரியான தலைமை இல்லாமையும், ஒற்றுமையின்மையும் தமிழர்களின் தன்னாட்சிக்கு தடையாக அமைந்தது.  விஜய நகர அரசுக்கும் நாயக்க அரசுக்கும் பண்டைய தமிழ் போர்குடிகளான முக்குலத்தோர் காட்டிய எதிர்ப்பு மற்றும் நெருக்கடிகளில் சிலவற்றை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் சுருக்கமாக காண்போம்.

தஞ்சாவூர் போர்

கிபி 1485 முதல் கிபி 1495 ஆம் ஆண்டு வரை தஞ்சை- திருச்சி பகுதிகளை விஜய நகர ஆட்சியாளர்களுக்கு அடிபணியாமல் ஆட்சி செய்தவர் வைத்தியலிங்க காலிங்கராயர் எனும் இயற்பெயர் கொண்ட கொனேரிராயன் ஆவார்.  விசய நகரத்துக்கு கட்டுப்படாமல் தனி ஆட்சி நடத்தி தனித்தன்மையுடன் கல்வெட்டுகளையும், காசுகளையும் வெளியிட்டுள்ளார் கோனேரியார். கிபி 1496 ல் விசய நகர அரசன் கோனேரிராயனை அழிக்க திக் விசயம் செய்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற போரில்  கோனேரி ராயன் வீரமரணம் அடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் நாட்டில் இன்றும் கோனேரியார் வழிவந்த கள்ளர்கள் வாழ்ந்து வருவதாக Manual of pudukkottai state vol 1 பக் 110 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விசய நகர அரசை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த கோனேரிராயன் ஒரு முக்குலத்து கள்ளர் மரபினன் ஆவார்.

இளவேலங்காள் போர்

கிபி 1547ல் பிற்கால பாண்டியர்களில் ஒருவரான சடையவர்மன் குலசேகரன் காலத்தில் திருநெல்வேலி வெட்டும் பெருமாள் பாண்டியனின் படையோடு வெங்கலராச நாயக்கன் என்பவனின் வடுகர் படை மோதியது.  வடுகர் படையோடு நடந்த இந்த போரில் பாண்டியரின் படையை சேர்ந்த பத்து பேர் வீரமரணம் அடைந்தனர். இவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பாண்டியர் படையில் இருந்து வீரமரணம் அடைந்த பத்து வீரர்களும் கொண்டையங்கோட்டை மறவர் ஆவர்.( ஆதாரம்: திருநெல்வேலி அரசு அருங்காட்சியக கையேடு: பக் 8-10)- நன்றி: ஜெயங்கொண்ட தேவர்)

நார்த்தாமலை போர்

கிபி 1550 ஆம் ஆண்டளவில் விஜயநகர அரசின் பிரதிநிதியான அக்கால ராசா என்பவர் புதுக்கோட்டையிலுள்ள நார்த்தாமலை பகுதியில் கோட்டை கட்டி வாழ்ந்தார்.புதுக்கோட்டையில் அக்கால ராசாவுக்கு எதிராக விசங்கி நாட்டு கள்ளர்கள் கலகங்கள் செய்தனர்.  விசங்கி நாட்டு கள்ளர்களையும் புதுக்கோட்டை மன்னரான பல்லவராயரையும் வீழ்த்த அக்காலராச நாயக்கன் தயாரானார்.  இதையறிந்த புதுக்கோட்டை பல்லவராயர் குல அரசி அக்கால ராசாவினை வீழ்த்த கச்சிராயன் தலைமையிலான கள்ளர் படை ஒன்றை அனுப்பினார்.  நார்த்தாமலைப் பகுதியில் நடைபெற்ற போரில் கச்சிராயன் அக்கால ராசாவினை வீழ்த்தி அவரது தலையை பல்லவராயர் அரசியாரிடம் ஒப்படைத்தார். தங்களை அடக்க வந்த வடுகனின் தலையை வெட்டி எறிந்த பல்லவராயர் அரசியும் அவரது தளபதி கச்சிராயனும் முக்குலத்து கள்ளர் மரபினர் ஆவர்.

கணவனை இழந்த அக்காலராசாவின் 7 மனைவிகளும், நார்த்தாமலை நொச்சி கண்மாய் அருகில் கணவனுடன் தீப்பாயந்து உயிர் விட்டனர். ( ஆதாரம்: Manual of pudukkottai state vol 2 part 2 : பக் 1070)

இராமநாதபுரம் போர்

கிபி 1623-1656 காலகட்டத்தில் மதுரையை ஆட்சி புரிந்தவன் திருமலை நாயக்கன்.  இக்காலத்தில் ராமநாதபுரத்தை ஆட்சி புரிந்த சடைக்கன் சேதுபதி தேவர் மதுரை நாயக்கனுக்கு எதிராக தனியாட்சி நடத்தி வந்தார். சடைக்கன் சேதுபதியை அடக்க இராமய்யப்பன் எனும் தளபதியின் தலைமையில் பெரும்படை ஒன்றை திருமலை நாயக்கர் அனுப்பினான். போகலூர்,  பாம்பன் முதலிய பகுதிகளில் நடைபெற்ற பல போர்களில் சேதுபதியின் படை பல இடங்களில் வெற்றி பெறுகிறது. ஆயினும் இறுதியில் சேதுபதியின்  படை வீழ்த்தப்பட்டு சடைக்கன் சேதுபதி கைது செய்யப்பட்டார். இறுதிவரை திருமலை நாயக்கனுக்கு தலை வணங்காமல் தமிழர் வீரத்தை பறைசாற்ற போரிட்ட சடைக்கன் சேதுபதி ஒரு  முக்குலத்து மறவர் ஆவார்.( ஆதாரம்: இராமய்யப்பன் அம்மானை: தஞ்சை சரஸ்வதி நூலகம் வெளியீடு)

திண்டுக்கல் போர்

இரண்டாம் கிருஷ்ண தேவராயர் உத்தரவுப்படி கிபி 1435 ல் திண்டுக்கல் சீமை நோக்கி வந்த வல்லாள மாக்கி நாயக்கன் அப்பகுதியில் இருந்த கள்ளர்களுடன் போரிட்டு அடக்கியதாக கூறப்பட்டுள்ளது. பாண்டியர் அரசு தன்னரசை இழந்த அக்கால கட்டத்தில் கள்ளர்கள் தன்னரசுடன் திகழ்ந்ததால் புதிதாக குடியேறிய வடுகர்கள் அவர்களோடு போரிட வேண்டியதாயிற்று.
” திண்டுக்கல் சீர்மையை சேர்ந்த அல்லினகரம், வெல்ம்பட்டி,நத்தம்பட்டி,கூத்தம்பாரை,வக்காப்பட்டி, உசிலம்பட்டி உட்பட பட்டிகளும் அதற்கு சேர்ந்த பூமியும் விட்டு பரிபாலனஞ் செய்து கொண்டிருக்கச் சொல்லி உத்தரவு செய்தார்கள், அப்போது இந்த சீமையில் வேடரையும் கள்ளரையும் வதம் செய்து ”

(பல்லியப்ப நாயக்கனூர் ஜமீன் வம்சாவளி ஒலைச்சுவடி (D. 3844)

வத்தலகுண்டு போர்

தொண்டயங்கோட்டை ஜமீனின் முன்னோர் கிபி 1500 கால கட்டத்தில் திண்டுக்கல் வத்தலக்குண்டு பகுதியில் விஜய நகர அரசர் ராயர் அளித்த நிலப்பகுதியில் குடியேறி பாளையத்தை அமைக்க முயன்றபோது இப்பகுதி பாண்டிய நாட்டை சந்திர சேகர பாண்டியன் என்பவர் விஜய நகர பேரரசுக்கு கட்டுப்பட்டு ஆட்சியை நடத்தியதாகவும், அச்சமயத்தில் இவ்விடம் கள்ளர் பூமியாக இருந்ததால் பெத்தழு நாயக்கரால் கள்ளர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலவில்லை எனவும் வம்சாவளி குறிப்பு கூறுகிறது.

“பெத்தழு நாயக்கர் சிறுது காடுவெட்டி பூமியுண்டாக்கினார்கள், பெத்தழு நாயக்கர் சிறுபிள்ளையானதிலே யிவிடம் கள்ளர் பூமியானதினாலே இவருக்கு வசவிற்தி வாறாமல் படிக்கி இருக்கிற தருணத்தில், இந்தப் பாண்டிய தேசத்திற்கு அதிபதி சந்திர சேகர பாண்டியன்”

(தொண்டைங்கோட்டை ஜமீன் வம்சாவளி ஒலைச்சுவடி(D.3842)

விசங்கிநாட்டு கள்ளர்களின் போர்

கிபி 1529 ல் மதுரையின் அரசராக பொறுப்பேற்ற விசவநாத நாயக்கரை எதிர்த்து விசங்கி நாட்டு கள்ளர்கள் கலகங்கள் செய்துள்ளனர்.  இதையடுத்து படை ஒன்றை அனுப்பி விசங்கி நாட்டு கள்ளர்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தி உள்ளனர். இதுபற்றி பழமையான ஒலைச்சுவடிகள் பின்வருமாறு விவரிக்கின்றன.

” காவேரி தீரமுழுதும் கிராமங்கள் கட்டி அக்கரகாரங்கள் கோயிலும் கட்டி வைத்து வீசங்கிநாட்டு கள்ளரையும் பாளையக்காரரையும் அடக்கி வச்சி சீமையை பிரபலப்படுத்தி” என ஒலைச்சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை நாயக்கருடன் கள்ளர்களின் போர்

மதுரையில் கிபி 1650 ஆம் ஆண்டளவில் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் கள்ளர்களை கட்டுப்படுத்தி வரி வசூல் செய்ய மதுரை வீரன் என்பவர் தலைமையில் பெரும்படை அனுப்பி கள்ளர்களோடு போரிட்டதாக மதுரை வீரன் அம்மானை எனும் நூல் குறிப்பிடுகிறது. இதுபற்றி கூறும் அம்மானை வரிகள் ” தன்னரசு நாட்டு தனிக்காட்டு கள்ளரெல்லாம் கொக்கரித்து சேனைதளம்” என கள்ளர்கள் தன்னரசாக விளங்கியதை குறிப்பிடுகிறது.

( மதுரை வீரன் அம்மானை, பக் 69, சரஸ்வதி மகால் நூலகம்)

நாயக்கரின் தலையை வெட்டிய கள்ளர்கள்

கிபி பதினேழாம் நூற்றாண்டில் திருச்சி நாயக்கர்களுக்கு விசங்கி நாட்டு கள்ளர்கள் பல்வேறு நெருக்கடிகளை அளித்து வந்தனர். இது பற்றி குறிப்பிடும் வரலாற்று குறிப்புகள் ”  விசங்கி நாட்டு கள்ளர்களிடம் வரிவசூல் செய்ய நாயக்கர் பிரதிநிதி வந்தால் அவரின் தலையை வெட்டி வீசுவதை கள்ளர்கள் வழக்கமாக கொண்டிருந்ததாக கூறுகின்றன.( General history of Pudukkottai state 1916 பக் 187)

மதுரையை கைப்பற்றிய கள்ளர்கள்

கிபி 1700 ஆம் ஆண்டு எழுதப்பட்ட பாதர் பீட்டர் மார்டின் என்பவரின் குறிப்பில்”  தன்னரசு நாட்டுக் கள்ளர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து வருகின்றனர்,  இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை கோட்டை நாயக்கரிடம் இருந்து கள்ளர்களால் கைப்பற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை கள்ளர் கட்டுப்பாட்டில் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.( Tamilaham in seventeenth century : pg 187)

தன்னரசு கள்ளர் நாடுகள்

கிபி 1709 ஆம் ஆண்டு ஆங்கிலேய பாதரியார் எழுதியுள்ள குறிப்புகளின்படி ” கள்ளர்கள் தங்கள் பகுதியின் அதிபதிகளாக விளங்கினர், இவர்கள் மதுரை நாயக்க மன்னருக்கு கப்பமோ,  வேறு வகையில் வரியோ செலுத்துவதில்லை, சில ஆண்டுகளுக்கு முன் இவர்களை அடக்க நாயக்கரால் அனுப்பப்பட்ட படை கள்ளர் நாட்டில் ஒர் கோட்டை கட்டி இருந்தனர். ஆனால் கள்ளர்களின் தாக்குதலில் கோட்டை சுக்கு நூறாக நொறுக்கப்பட்டு நாயக்கர் படை விரட்டி அடிக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். ( General history of pudukkottai state 1916 pg 108)

விசய நகர பேரரசு அமைந்த காலம் முதல் பிற்காலத்தில் நாயக்கர் காலம் வரையிலும் கள்ளர் மற்றும் மறவர் நாடுகள் வடுகர்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளதை வரலாற்று சான்றுகள் நமக்கு உரைக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க அரசுகளை வலுவிழக்கச் செய்து புதுக்கோட்டை,  சிவகங்கை, ராமநாதபுரம் எனும் மூன்று தமிழ் சமஸ்தானங்களை உருவாக்கியதும் முக்குலத்தோரே! 

Article by: www.sambattiyar.com

Total views 2,137 , Views today 4 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *