விசங்கிநாட்டு அரையர்களின் போர் ஒப்பந்தம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வட பனங்காடு என அழைக்கப்பட்ட குன்னண்டார்கோயில் தமிழகத்தின் மிக பழமையான கோயில்களுள் ஒன்றாகும். குன்னண்டார்கோயிலை மையமாகக் கொண்ட கள்ளர் நாடுகள் வடமலை நாடு மற்றும் தென்மலை நாடு என அழைக்கப்படுகிறது. இவை விசங்கி நாட்டின் உள் நாடுகளாகும்.

கிபி 1262 ஆம் ஆண்டை சேர்ந்த சடையவர்மன் சுந்தரப்பாண்டியன் காலத்தில் இருமலை  நாட்டு அரையர்களும் ஒர் உடன்படிக்கை செய்து கொண்டதை குன்னண்டார்கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

” ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரப்பாண்டியதேவற்கு ஆண்டு பன்னிரண்டாவது  கார்த்திகை மாதம் செயசிங்ககுலவளநாட்டு வடபனங்காட்டு நாட்டு உடையார் திருக்குன்றக்குடி உடைய நாயனார் கோயில் தானத்து முதலிகளுக்கு இன்னாட்டு இரண்டு மலைநாட்டு அரையர்களோம் எங்களில் இசைந்து பிடிபாடு பண்ணிக் கொடுத்த பரிசாவது நாங்கள் பகைக்கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவல் ஆன ஊர்கள் வழிநடைக்குடிமக்கள் இடைக்குடிமக்கள் இவர்களை அழிவு செய்ய கடவொமல்லாகவும் ஒருவன் அழிவு செய்யின் நூறு பணம் தண்டம் வைக்கவும் ஒரு ஊராக அழிவு செய்யின் ஐநூறு பணம் வைக்க கடவோம் இப்படி செய்யுமிடத்து வெட்டியும் குத்தியும் செத்தும் நொக்க கடவர்களாகவும்” என கல்வெட்டு முடிகிறது.

கிபி 1262 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் குன்னண்டார் கோயில் முதலிகளுக்கு வடமலை மற்றும் தென்மலை நாட்டை சேர்ந்த கள்ளர் அரசர்கள்( அரையர்கள்)  தங்களுக்குள் முடிவு செய்து ஒர் உறுதிபாடு அளித்துள்ளனர்.

அதன்படி இரண்டு நாட்டு அரையர்களும் தங்களுக்குள் பகையால் மோதிக் கொள்ளும்போது தங்களது காவலில் உள்ள கிராமங்கள், வழிநடையாக செல்லும் மக்கள்,  இடைகுடி மக்கள் முதலோனோர்க்கு எந்த அழிவும் ஏற்படாதவாறு சண்டையிடுவோம் என்றும், சண்டையின் போது தனி ஒருவனால் ஏதேனும் அழிவு ஏற்பட்டால் அவர் நூறு பணத்தை அபராதமாக செலுத்தவும், ஒரு ஊரை சேர்ந்த கள்ளர்களால் அழிவு ஏற்பட்டால் ஐநூறு பணம் அபராதமாக செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தை கள்ளர் அரையர்கள் ” தங்களுக்குள் வெட்டியும் குத்தியும் உயிரிழக்கும் நேரத்திலும்” கடைபிடிப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

விசங்கி நாட்டின் வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர் அரையர்களின் காவலில் ஊர்கள் இருந்ததையும் இவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்ததையும் இக்கல்வெட்டு நமக்கு உரைக்கிறது.  தங்களுக்குள் மோதல் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என கள்ளர்கள் கூடி ஒப்பந்தம் செய்து வெளியிட்டுள்ளனர்.  தூய போர்க்குடியில் பிறந்தவர்களுக்கே இத்தகைய ஒழுக்கங்களை பின்பற்ற இயலும்.

வடமலைநாட்டு கள்ளர் அம்பலக்காரர்களான  நரங்கியர்களும்,  தென்மலை நாட்டு கள்ளர் அம்பலக்காரர்களான காடவராயர்களும் குன்னண்டார் கோயிலில் முதன்மை பெறுகின்றனர்.

Manual of pudukkottai state vol 2 part 2 (1920)

வடமலை மற்றும் தென்மலை நாட்டு கள்ளர்களின் நாட்டு கூட்டங்கள் குன்னண்டார் கோயிலில் நடந்ததாக 1920 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்று குறிப்பு கூறுகிறது.

( புகைப்படம்: வடமலை நாட்டு கள்ளர் அம்பலக்காரரான வீரமிகு திருநடனம் நரங்கியர் (1950-2001)  அவர்களின் கம்பீரத் தோற்றம்)

தொகுப்பு: www.sambattiyar.com

Total views 1,693 , Views today 2 

Author: admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *